يٰۤاَيُّهَا الْاِنْسَانُமனிதனே!اِنَّكَநிச்சயமாக நீكَادِحٌசிரமத்தோடு முயற்சிப்பவன்اِلٰىபக்கம்رَبِّكَஉன் இறைவன்كَدْحًاசிரமத்தோடு முயற்சித்தல்فَمُلٰقِيْهِۚஅடுத்து நீ அவனை சந்திப்பாய்
மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதனே! நீ உன் இறைவனிடம் செல்லும் வரை (நன்மையோ தீமையோ பல வேலைகளில் ஈடுபட்டு) சிரமத்துடன் முயற்சி செய்துகொண்டே இருக்கிறாய். (பின்னர், மறுமையில்) அவனை நீ சந்திக்கிறாய்.
IFT
“மனிதனே! நீ இடைவிடாமல் பாடுபட்டு உன் இறைவனின் பக்கம் சென்று கொண்டிருப்பவனாகவும் அவனை நீ சந்திக்கக் கூடியவனாகவும் இருக்கின்றாய்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதனே! நீ உன் இரட்சகனிடம் செல்லும் வரையில் (நன்மையோ, தீமையோ பல வேலைகளில் ஈடுபட்டு) கஷ்டத்துடன் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றாய்; பின்னர் (மறுமையில்) அவனை நீ சந்திக்கிறவனாக இருக்கிறாய்.
Saheeh International
O mankind, indeed you are laboring toward your Lord with [great] exertion and will meet it.
எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், இவர்களில் எவர்கள் (தங்கள் பாவத்திலிருந்து திருந்தி) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (என்றென்றுமே) முடிவுறாத (நற்)கூலியுண்டு.
IFT
ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாகவும் நற்செயல்கள் செய்தவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு என்றென்றும் முடிவுறாத கூலி இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங் கொண்டு நற்கருமங்களும் செய்தார்களே அத்தகையவர்களைத் தவிர, அவர்களுக்கு முடிவுறாத (நற்) கூலியுண்டு.
Saheeh International
Except for those who believe and do righteous deeds. For them is a reward uninterrupted.