ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக; நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே, நபியே!) இவற்றை அவர்களுக்கு எடுத்துக் காண்பித்து, இவற்றைப் படைத்தவனின் அருள்களை, அவர்களுக்கு நீர் கூறி) நல்லுபதேசம் செய்வீராக! (இவற்றைக்கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறாவிடில் அதற்காக நீர் கவலைப்படாதீர். ஏனென்றால்,) நீர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்பவர்தான்,
IFT
சரி (நபியே!) நீர் அறிவுரை புரிந்தவண்ணம் இருப்பீராக! திண்ணமாக, நீர் அறிவுரை புரிபவர் மட்டுமே ஆவீர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நபியே! நல்லுபதேசம் செய்வீராக! நிச்சயமாக நீர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்பவர்தாம்.