92. ஸூரத்துல் லைல்(இரவு)

மக்கீ, வசனங்கள்: 21

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
وَالَّیْلِ اِذَا یَغْشٰی ۟ۙ
وَالَّيْلِஇரவின் மீது சத்தியமாகاِذَا يَغْشٰىۙ‏மூடும் போது
வல்லய்லி இதா யக்'ஷா
முஹம்மது ஜான்
(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
(அனைத்தையும்) மூடிக்கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக!
IFT
இரவின் மீது சத்தியமாக, அது மூடி மறைத்துக் கொள்ளும்போது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இரவின்மீது சத்தியமாக – அது (தன் இருளால்) மூடிக்கொள்ளும்போது-
Saheeh International
By the night when it covers
وَالنَّهَارِ اِذَا تَجَلّٰی ۟ۙ
وَالنَّهَارِபகலின் மீது சத்தியமாகاِذَا تَجَلّٰىۙ‏அது வெளிப்படும் போது
வன்னஹாரி இதா தஜல்லா
முஹம்மது ஜான்
பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
பிரகாசமுள்ள பகலின் மீது சத்தியமாக!
IFT
பகலின் மீது சத்தியமாக, அது ஒளிரும் போது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பகலின் மீது சத்தியமாக – அது தன் பிரகாசத்துடன் வெளிப்படும்போது –
Saheeh International
And [by] the day when it appears
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْاُ ۟ۙ
وَمَا خَلَقَபடைத்தவன் மீது சத்தியமாகالذَّكَرَஆணைوَالْاُنْثٰٓىۙ‏இன்னும் பெண்ணை
வமா கலகத் தகர வல் உன்தா
முஹம்மது ஜான்
ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!
IFT
மேலும், ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆணையும், பெண்ணையும் படைத்தவனாகிய அல்லாஹ்வின் மீது சத்தியமாக –
Saheeh International
And [by] He who created the male and female,
اِنَّ سَعْیَكُمْ لَشَتّٰی ۟ؕ
اِنَّநிச்சயமாகسَعْيَكُمْஉங்கள் முயற்சிلَشَتّٰىؕ‏பலதரப்பட்டதுதான்
இன்ன ஸஃயகும் லஷத்தா
முஹம்மது ஜான்
நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சிகள் பலவாறாக இருக்கின்றன.
IFT
உண்மையில் உங்களுடைய முயற்சிகள் பலதரப்பட்டவையாக இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களே!) நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலதரப்பட்டதாகும்.
Saheeh International
Indeed, your efforts are diverse.
فَاَمَّا مَنْ اَعْطٰی وَاتَّقٰی ۟ۙ
فَاَمَّا مَنْஆகவே, யார்اَعْطٰىதர்மம் புரிந்தார்وَاتَّقٰىۙ‏இன்னும் அல்லாஹ்வை அஞ்சினார்
Fப அம்மா மன் அஃதா வத்தகா
முஹம்மது ஜான்
எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (உங்களில்) எவர் தானம் செய்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து,
IFT
எனவே, எவர் (இறைவழியில்) பொருளை வழங்கினாரோ மேலும் (இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து) விலகியிருந்தாரோ
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, எவர் (தன் செல்வத்தை நன்மையானவற்றுக்கு) வழங்கி இன்னும், (அல்லாஹ்வுக்குப்) பயந்து –
Saheeh International
As for he who gives and fears Allah
وَصَدَّقَ بِالْحُسْنٰی ۟ۙ
وَصَدَّقَஇன்னும் உண்மைப்படுத்தினார்بِالْحُسْنٰىۙ‏மிக அழகியதை
வ ஸத்தக Bபில் ஹுஸ்னா
முஹம்மது ஜான்
நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,
அப்துல் ஹமீது பாகவி
(இந்த மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் (நல்லதென்றே) உண்மையாக்கி வைக்கிறாரோ,
IFT
மேலும், நன்மையை உண்மையென ஏற்றுக்கொண்டாரோ,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (இம்மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களை (நல்ல காரியங்களென) உண்மையாக்கி வைக்கின்றாரோ அவர்
Saheeh International
And believes in the best [reward],
فَسَنُیَسِّرُهٗ لِلْیُسْرٰی ۟ؕ
فَسَنُيَسِّرُهٗஅவருக்கு இலகுவாக்குவோம்لِلْيُسْرٰىؕ‏சொர்க்கப் பாதையை
Fபஸனு யஸ்ஸிருஹூ லில்யுஸ்ரா
முஹம்மது ஜான்
அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவருக்கு சொர்க்கப் பாதையை நாம் எளிதாக்கித் தருவோம்.
IFT
அவருக்கு இலகுவான வழியில் செல்வதற்கு நாம் வகை செய்வோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவருக்கு இலேசானதற்கு (சுவர்க்கத்தின் வழியை) நாம் எளிதாக்கி வைத்தோம்.
Saheeh International
We will ease him toward ease.
وَاَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنٰی ۟ۙ
وَاَمَّا مَنْۢ بَخِلَஆக யார்?/கஞ்சத்தனம் செய்தான்وَاسْتَغْنٰىۙ‏இன்னும் தேவையற்றவனாகக் கருதினான்
வ அம்மா மன் Bபகில வஸ்தக்னா
முஹம்மது ஜான்
ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,
அப்துல் ஹமீது பாகவி
எவன் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது,
IFT
எவர் கஞ்சத்தனம் செய்கின்றாரோ மேலும் (தன் இறைவனைப்) பொருட்படுத்தாமல் நடந்தாரோ;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, எவர் உலோபத்தனமும் செய்து (அல்லாஹ்விடமிருக்கும் நற்பேறுகளை விட்டும் தன்னை) தேவையற்றவரா(கக் கருது)கிறாரோ-
Saheeh International
But as for he who withholds and considers himself free of need
وَكَذَّبَ بِالْحُسْنٰی ۟ۙ
وَكَذَّبَஇன்னும் பொய்ப்பித்தான்بِالْحُسْنٰىۙ‏மிக அழகியதை
வ கத்தBப Bபில் ஹுஸ்னா
முஹம்மது ஜான்
இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,
அப்துல் ஹமீது பாகவி
(இம்மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் பொய்யாக்கி வைக்கிறானோ,
IFT
இன்னும் நன்மையைப் பொய்யென நிராகரித்தாரோ
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இம்மார்க்கத்திலுள்ள) நல்லவற்றை பொய்ப்படுத்தியும் வைத்தாரோ அவர்,
Saheeh International
And denies the best [reward],
فَسَنُیَسِّرُهٗ لِلْعُسْرٰی ۟ؕ
فَسَنُيَسِّرُهٗஅவனுக்கு இலகுவாக்குவோம்لِلْعُسْرٰىؕ‏நரகத்தின் பாதையை
Fபஸனு யஸ்ஸிருஹூ லில்'உஸ்ரா
முஹம்மது ஜான்
அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவனுக்குக் (கஷ்டத்திற்குரிய) நரகப் பாதையைத்தான் நாம் எளிதாக்கி வைப்போம்.
IFT
அவருக்கு கடினமான வழியில் செல்வதற்கு நாம் வகை செய்வோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்போது அவருக்கு கஷ்டத்திற்கு (நரகவழிக்கு) நாம் எளிதாக்கி வைப்போம்.
Saheeh International
We will ease him toward difficulty.
وَمَا یُغْنِیْ عَنْهُ مَالُهٗۤ اِذَا تَرَدّٰی ۟ؕ
وَمَا يُغْنِىْஇன்னும் பலனளிக்காதுعَنْهُஅவனுக்குمَالُهٗۤஅவனுடைய செல்வம்اِذَا تَرَدّٰىؕ‏அவன்விழும்போது
வமா யுக்னீ 'அன்ஹு மாலுஹூ இதா தரத்தா
முஹம்மது ஜான்
ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.
அப்துல் ஹமீது பாகவி
அவன் (நரகத்தில்) விழுந்துவிட்டால், அவனுடைய பொருள் அவனுக்கு (ஒரு) பயனுமளிக்காது.
IFT
அவனுடைய செல்வம் அவன் அழிந்து விடும்போது அவனுக்கு என்ன பயன் அளிக்கப்போகின்றது?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர் (நரகத்தில்) வீழ்ந்து விட்டால், அவருடைய செல்வம் அவருக்கு பயனளிக்காது.
Saheeh International
And what will his wealth avail him when he falls?
اِنَّ عَلَیْنَا لَلْهُدٰی ۟ؗۖ
اِنَّநிச்சயமாகعَلَيْنَاநம்மீதுلَـلْهُدٰىۖ‏நேர்வழி காட்டுவதுதான்
இன்ன 'அலய்னா லல் ஹுதா
முஹம்மது ஜான்
நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நேர்வழியை அறிவிப்பது நம்மீதுதான் கடமையாகும்.
IFT
திண்ணமாக, வழிகாட்டுவது எமது பொறுப்பேயாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நேர்வழி காட்டுதல் நம்மீது (பொறுப்பாக) இருக்கிறது.
Saheeh International
Indeed, [incumbent] upon Us is guidance.
وَاِنَّ لَنَا لَلْاٰخِرَةَ وَالْاُوْلٰی ۟
وَاِنَّஇன்னும் நிச்சயமாகلَـنَاநமக்கேلَـلْاٰخِرَةَமறுமைوَالْاُوْلٰى‏இன்னும் இம்மை
வ இன்ன லனா லல் ஆகிரத வல் ஊலா
முஹம்மது ஜான்
அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இம்மையும், மறுமையும் நமக்கே சொந்தமானவை!
IFT
மேலும், உண்மையில் மறுமை மற்றும் இம்மை இரண்டும் நமக்கே உரியனவாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நமக்கே உரியவையாகும்.
Saheeh International
And indeed, to us belongs the Hereafter and the first [life].
فَاَنْذَرْتُكُمْ نَارًا تَلَظّٰی ۟ۚ
فَاَنْذَرْتُكُمْஆகவே, உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்தேன்نَارًاநெருப்பைتَلَظّٰى‌ۚ‏கொழுந்துவிட்டெரிகின்றது
Fப அன்தர்துகும் னாரன் தலள்ளா
முஹம்மது ஜான்
ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.
அப்துல் ஹமீது பாகவி
(மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.
IFT
எனவே, கொழுந்துவிட்டெரியும் நெருப்பைக் குறித்து உங்களை நான் எச்சரிக்கை செய்துவிட்டேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (மனிதர்களே!) கொழுந்துவிட்டெரியும் (நரக) நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்து விட்டேன்.
Saheeh International
So I have warned you of a Fire which is blazing.
لَا یَصْلٰىهَاۤ اِلَّا الْاَشْقَی ۟ۙ
لَا يَصْلٰٮهَاۤஅதில் பற்றி எரிய மாட்டான்اِلَّاதவிரالْاَشْقَىۙ‏பெரும் தீயவன்
லா யஸ்லாஹா இல்லல் அஷ்கா
முஹம்மது ஜான்
மிக்க துர்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்லமாட்டான்.
IFT
ஆனால், அதில் யாரும் எரிந்துபோக மாட்டார்கள், பெரும் துர்ப்பாக்கியவானைத் தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மிக்க துர்பாக்கியமுடையவரைத்தவிர (மற்றெவரும்) அதில் புகமாட்டார்.
Saheeh International
None will [enter to] burn therein except the most wretched one
الَّذِیْ كَذَّبَ وَتَوَلّٰی ۟ؕ
الَّذِىْஎவன்كَذَّبَபொய்ப்பித்தான்وَتَوَلّٰىؕ‏இன்னும் புறக்கணித்தான்
அல்லதீ கத்தBப வ தவல்லா
முஹம்மது ஜான்
எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கிப் புறக்கணித்துவிடுவான்.
IFT
அவர்கள் பொய்யென மறுத்தார்கள், புறக்கணித்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் எத்தகையவரென்றால் (நம் தூதர்கள் கொண்டுவந்த சத்தியத்தை பொய்யாக்கி) புறக்கணித்தும் விட்டனர்.
Saheeh International
Who had denied and turned away.
وَسَیُجَنَّبُهَا الْاَتْقَی ۟ۙ
وَسَيُجَنَّبُهَاஇன்னும் அதிலிருந்து தூரமாக்கப்படுவார்الْاَتْقَىۙ‏அல்லாஹ்வை அதிகம் அஞ்சுகிறவர்
வ ஸ யுஜன்ன்னBபுஹல் அத்கா
முஹம்மது ஜான்
ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.
அப்துல் ஹமீது பாகவி
இறையச்சமுடையவர்தான் அதிலிருந்து தப்பித்துக்கொள்வார்.
IFT
மேலும், அதனைவிட்டுத் தொலைவில் வைக்கப்படுவார், மிகுந்த இறையச்சம் உடையவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், மிகுந்த பயபக்தியுடையவர் அதிலிருந்து வெகுதூரத்தில் ஆக்கப்படுவார்.
Saheeh International
But the righteous one will avoid it
الَّذِیْ یُؤْتِیْ مَالَهٗ یَتَزَكّٰی ۟ۚ
الَّذِىْஎவர்يُؤْتِىْகொடுக்கிறார்مَالَهٗதனது செல்வத்தைيَتَزَكّٰى‌ۚ‏மனத்தூய்மையை நாடியவராக
அல்லதீ யு'தீ மாலஹூ யதZஜக்கா
முஹம்மது ஜான்
(அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.
அப்துல் ஹமீது பாகவி
அவர் (பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன் பொருளை(த் தானமாக)க் கொடுப்பார்.
IFT
அவரோ தூய நிலை அடையும் பொருட்டு தம் செல்வத்தை வழங்குகின்றார்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் எத்தகையவரென்றால், (பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டவராக தன்னுடைய செல்வத்தை தர்மமாகக் கொடுப்பார்.
Saheeh International
[He] who gives [from] his wealth to purify himself
وَمَا لِاَحَدٍ عِنْدَهٗ مِنْ نِّعْمَةٍ تُجْزٰۤی ۟ۙ
وَمَاஇன்னும் இல்லைلِاَحَدٍஒருவரின்عِنْدَهٗஅவரிடம்مِنْ نِّعْمَةٍஉபகாரம் ஏதும்تُجْزٰٓىۙ‏கூலிகொடுக்கப்படும்
வமா லி அஹதின் 'இன்தஹூ மின் னிஃமதின் துஜ்Zஜா
முஹம்மது ஜான்
மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.
அப்துல் ஹமீது பாகவி
தான் பதில் நன்மை செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் தன் மீது இருக்காது.
IFT
கைமாறு செய்யும் அளவுக்கு எவருக்கும் அவர் நன்றிக்கடன் படவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களில்) எவருக்கும் (தன் தர்மத்தின் மூலம் பிரதிபலனைக் கருதிக்) கொடுக்கப்படும் எந்த உபகாரமும் தம்மிடம் இல்லை.
Saheeh International
And not [giving] for anyone who has [done him] a favor to be rewarded
اِلَّا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِ الْاَعْلٰی ۟ۚ
اِلَّاதவிரابْتِغَآءَதேடுவதைوَجْهِமுகத்தைرَبِّهِதன் இறைவனின்الْاَعْلٰى‌ۚ‏மிக உயர்ந்தவனான
இல்லBப் திகா'அ வஜ்ஹி ரBப்Bபிஹில் அஃலா
முஹம்மது ஜான்
மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்).
அப்துல் ஹமீது பாகவி
இருப்பினும், மிக்க மேலான தன் இறைவனின் திருமுகத்தை விரும்பியே தவிர (வேறு எதற்காகவும் தானம் செய்ய மாட்டார்).
IFT
ஆனாலும், அவர் உயர்வுமிக்க தம் இறைவனின் திருப்தியைப் பெறுவதற்காகவே இதைச் செய்கின்றார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மிக்க மேலான தம் இரட்சகனின் முகத்தைத் தேடியே தவிர (வேறு எந்த நோக்கத்துடனும் அவர் செலவு செய்யவில்லை).
Saheeh International
But only seeking the face [i.e., acceptance] of his Lord, Most High.
وَلَسَوْفَ یَرْضٰی ۟۠
وَلَسَوْفَதிட்டமாகيَرْضٰى‏திருப்தியடைவார்
வ லஸவ்Fப யர்ளா
முஹம்மது ஜான்
வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.
அப்துல் ஹமீது பாகவி
(இறைவன் அவருக்கு அளிக்கும் கொடையைப் பற்றிப்) பின்னர் அவரும் திருப்தியடைவார்.
IFT
மேலும், (அவரைக் குறித்து) அவசியம் அவன் திருப்தியடைவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (தம் இரட்சகனின் நற்கூலியைக் கொண்டு வெகுவிரைவில்) அவரும் திருப்தியடைவார்.
Saheeh International
And he is going to be satisfied.