96. ஸூரத்துல் அலஃக்(இரத்தக்கட்டி)  

மக்கீ, வசனங்கள்: 19

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِیْ خَلَقَ ۟ۚ
اِقْرَاْபடிப்பீராகبِاسْمِபெயரால்رَبِّكَஉம் இறைவனின்الَّذِىْஎவன்خَلَقَ‌ۚ‏படைத்தான்
இக்ர Bபிஸ்மி ரBப் Bபிகல் லதீ கலக்
முஹம்மது ஜான்
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அனைத்தையும்) படைத்த உமது இறைவனின் பெயரால் (அவனது கட்டளைகள் அடங்கிய திரு குர்ஆனை) ஓதுவீராக!
IFT
ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உம்முடைய இரட்சகனின் (சங்கையான) பெயரைக்கொண்டு நீர் ஓதுவீராக! அவன் எத்தகையவனென்றால் (படைப்பினங்கள் அனைத்தையும்) படைத்தான்.
Saheeh International
Recite in the name of your Lord who created
خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ ۟ۚ
خَلَقَஅவன் படைத்தான்الْاِنْسَانَமனிதனைمِنْ عَلَقٍ‌ۚ‏கருவிலிருந்து
கலகல் இன்ஸான மின் 'அலக்
முஹம்மது ஜான்
“அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
அப்துல் ஹமீது பாகவி
அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைக்கிறான்.
IFT
(உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான்! ஓதுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதனை (அட்டைப்பூச்சி போன்று) ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்தக்கட்டியிலிருந்து அவன் படைத்தான்.
Saheeh International
Created man from a clinging substance.
اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُ ۟ۙ
اِقْرَاْபடிப்பீராகوَرَبُّكَஇன்னும் உம் இறைவன்الْاَكْرَمُۙ‏பெரும் கண்ணியவான்
இக்ர வ ரBப் Bபுகல் அக்ரம்
முஹம்மது ஜான்
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! மேலும்) நீர் ஓதுவீராக! உமது இறைவன் மாபெரும் கொடையாளி!
IFT
மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீர் ஓதுவீராக! மேலும், உமதிரட்சகன் மிக்க சங்கையானவன்.
Saheeh International
Recite, and your Lord is the most Generous -
الَّذِیْ عَلَّمَ بِالْقَلَمِ ۟ۙ
الَّذِىْஎவன்عَلَّمَகற்பித்தான்بِالْقَلَمِۙ‏எழுதுகோல் மூலம்
அல் லதீ 'அல்லம Bபில் கலம்
முஹம்மது ஜான்
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்றுக் கொடுத்தான்.
IFT
அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், எழுதுகோலைக் கொண்டு எழுதக் கற்றுக் கொடுத்தான்.
Saheeh International
Who taught by the pen
عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ یَعْلَمْ ۟ؕ
عَلَّمَகற்பித்தான்الْاِنْسَانَமனிதனுக்குمَا لَمْ يَعْلَمْؕ‏அவன் அறியாததை
'அல் லமல் இன்ஸான ம லம் யஃலம்
முஹம்மது ஜான்
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
அப்துல் ஹமீது பாகவி
(அதன் மூலம்) மனிதன் அறியாதவற்றை எல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறான்.
IFT
மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் (அல்லாஹ்வாகிய) அவன் கற்றுக்கொடுத்தான்.
Saheeh International
Taught man that which he knew not.
كَلَّاۤ اِنَّ الْاِنْسَانَ لَیَطْغٰۤی ۟ۙ
كَلَّاۤஅவ்வாறல்லاِنَّநிச்சயமாகالْاِنْسَانَமனிதன்لَيَطْغٰٓىۙ‏வரம்பு மீறுகிறான்
கல்லா இன்னல் இன்ஸான லயத்கா
முஹம்மது ஜான்
எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்.
IFT
அவ்வாறன்று! மனிதன் வரம்பு மீறி நடக்கின்றான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறு படைக்கப்பட்ட) மனிதன் அவனைப்படைத்த அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செய்கிறானா? (இல்லை. நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.)
Saheeh International
No! [But] indeed, man transgresses
اَنْ رَّاٰهُ اسْتَغْنٰی ۟ؕ
اَنْ رَّاٰهُதன்னை அவன் எண்ணியதால்اسْتَغْنٰىؕ‏தேவையற்றவனாக
அர்-ர ஆஹுஸ் தக்னா
முஹம்மது ஜான்
அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்.
IFT
அவன் தன்னைத் தன்னிறைவுடையவன் என்று கருதிக் கொண்டதால்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் தன்னை (இரட்சகனிடமிருந்து) தேவையற்றவன் எனக் காணும்பொழுது,
Saheeh International
Because he sees himself self-sufficient.
اِنَّ اِلٰی رَبِّكَ الرُّجْعٰی ۟ؕ
اِنَّநிச்சயமாகاِلٰىபக்கம்தான்رَبِّكَஉம் இறைவன்الرُّجْعٰىؕ‏மீட்சி
இன்ன்ன இலா ரBப்Bபிகர் ருஜ்'ஆ
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக உமது இறைவன் பக்கம்தான் (அவன்) மீள வேண்டும்.
IFT
ஆனால், திரும்பிச் செல்வது திண்ணமாக, உம் இறைவனின் பக்கமே ஆகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக உமதிரட்சகனின் பக்கமே (அவன்) மீள வேண்டியதிருக்கின்றது.
Saheeh International
Indeed, to your Lord is the return.
اَرَءَیْتَ الَّذِیْ یَنْهٰی ۟ۙ
اَرَءَيْتَபார்த்தீரா?الَّذِىْ يَنْهٰىؕ‏தடுப்பவனை
அர-அய்தல் லதீ யன்ஹா
முஹம்மது ஜான்
தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத் தடை செய்கின்றவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
IFT
தடுப்பவனை நீர் பார்த்தீரா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தடுக்கின்றானே அவனை (நபியே!) நீர் பார்த்தீரா,
Saheeh International
Have you seen the one who forbids
عَبْدًا اِذَا صَلّٰی ۟ؕ
عَبْدًاஓர் அடியாரைاِذَا صَلّٰىؕ‏அவர் தொழும் போது
'அBப்தன் இத ஸல்லா
முஹம்மது ஜான்
ஓர் அடியாரை - அவர் தொழும்போது,
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத் தடை செய்கின்றவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
IFT
அடியார் ஒருவர் தொழுது கொண்டிருக்கையில் அவரைத் தடுப்பவனை நீர் பார்த்தீரா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஓர் அடியாரை அவர் தொழுது கொண்டிருக்கும்பொழுது,
Saheeh International
A servant when he prays?
اَرَءَیْتَ اِنْ كَانَ عَلَی الْهُدٰۤی ۟ۙ
اَرَءَيْتَபார்த்தீரா?اِنْ كَانَஅவர் இருந்தாலுமாعَلَىஇல்الْهُدٰٓىۙ‏நேர்வழி
அர-அய்த இன் கான 'அலல் ஹுதா
முஹம்மது ஜான்
நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
அப்துல் ஹமீது பாகவி
அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
IFT
நீர் என்ன நினைக்கிறீர்? அவர் நேர்வழியில் நடந்தாலுமா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் நேர்வழியின் மீதிருந்து(ம் அவரைத் தொழவிடாமல் தடுத்தவனை) நீர் பார்த்தீரா?
Saheeh International
Have you seen if he is upon guidance
اَوْ اَمَرَ بِالتَّقْوٰی ۟ؕ
اَوْஅல்லதுاَمَرَஅவர் ஏவினாலுமாبِالتَّقْوٰىۙ‏நன்மையை
அவ் அமர Bபித் தக்வா
முஹம்மது ஜான்
அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
அப்துல் ஹமீது பாகவி
அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
IFT
அல்லது தூய்மையை மேற்கொள்ளும்படி ஏவினாலுமா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது பயபக்தியைக் கொண்டு ஏவுகிறவராக அவர் இருந்தும்,
Saheeh International
Or enjoins righteousness?
اَرَءَیْتَ اِنْ كَذَّبَ وَتَوَلّٰی ۟ؕ
اَرَءَيْتَபார்த்தீரா?اِنْ كَذَّبَஅவன் பொய்ப்பித்தால்وَتَوَلّٰىؕ‏இன்னும் புறக்கணித்தால்
அர-அய்த இன் கத் தBப வ த வல்லா
முஹம்மது ஜான்
அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நீர் பார்த்தீரா?
அப்துல் ஹமீது பாகவி
(அவன், அவரைப்) பொய்யாக்கிப் புறக்கணிப்பதையும் நீர் கவனித்தீரா?
IFT
(தடுக்கக்கூடிய இந்த மனிதன் சத்தியத்தைப்) பொய்யென்று தூற்றினால் மேலும், புறக்கணிக்கவும் செய்தால் (அவனைப் பற்றி) நீர் என்ன கருதுகின்றீர்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் (அவரைப்) பொய்யாக்கி, முகத்தையும் திருப்பிக் கொண்டான் என்பதை நீர் பார்த்தீரா?
Saheeh International
Have you seen if he denies and turns away -
اَلَمْ یَعْلَمْ بِاَنَّ اللّٰهَ یَرٰی ۟ؕ
اَلَمْ يَعْلَمْஅவன் அறியவில்லையா?بِاَنَّஎன்பதை/நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يَرٰىؕ‏பார்க்கிறான்
அலம் யஃலம் Bபி-அன் னல் லஹா யரா
முஹம்மது ஜான்
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
(அவன் செய்யும் இந்த துஷ்ட காரியங்களை) நிச்சயமாக அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
IFT
அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பது அவனுக்குத் தெரியாதா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்)பார்க்கின்றான் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
Saheeh International
Does he not know that Allah sees?
كَلَّا لَىِٕنْ لَّمْ یَنْتَهِ ۙ۬ لَنَسْفَعًا بِالنَّاصِیَةِ ۟ۙ
كَلَّاஅவ்வாறல்லلَٮِٕنْ لَّمْ يَنْتَهِ  ۙஅவன் விலகவில்லையெனில்لَنَسْفَعًۢاகடுமையாகப் பிடிப்போம்بِالنَّاصِيَةِۙ‏நெற்றி முடியை
கல்ல ல இல்லம் யன்தஹி ல னஸ்Fப'அம் Bபின் னஸியஹ்
முஹம்மது ஜான்
அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.
IFT
அவ்வாறன்று! அவன் (இந்த நடத்தையிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையெனில், திண்ணமாக, அவனது நெற்றி முடியைப் பிடித்து இழுப்போம்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(முஹம்மது தொழுதால் நான் அவர் கழுத்தின் மீது மிதிப்பேன் என அபூஜஹல் கூறியவாறு) அல்ல! இத்தீய செயலிலிருந்து (அவன் விலகிக் கொள்ளாவிடில், நிச்சயமாக அவனது முன்னெற்றி உரோமத்தைப் பிடித்து நாம் இழுப்போம்.
Saheeh International
No! If he does not desist, We will surely drag him by the forelock
نَاصِیَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ ۟ۚ
نَاصِيَةٍநெற்றி முடிكَاذِبَةٍபொய் கூறுகின்றخَاطِئَةٍ‌ ۚ‏குற்றம் புரிகின்ற
னாஸியதின் கதி Bபதின் காதிஅஹ்
முஹம்மது ஜான்
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.
IFT
கடும் தவறிழைத்த பொய்யுரைத்த அந்த நெற்றியை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை.
Saheeh International
A lying, sinning forelock.
فَلْیَدْعُ نَادِیَهٗ ۟ۙ
فَلْيَدْعُஆகவே அவன் அழைக்கட்டும்نَادِيَهٗ ۙ‏தன் சபையோரை
Fபல் யத்'உ னாதியஹ்
முஹம்மது ஜான்
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவன் (தன் உதவிக்காகத்) தன் சபையோரை அழைக்கட்டும்.
IFT
அவன் தன் (ஆதரவாளர்களின்) கூட்டத்தை அழைத்துக் கொள்ளட்டும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (தன் உதவிக்காக) தனது சபையோரை அவன் அழைக்கட்டும்.
Saheeh International
Then let him call his associates;
سَنَدْعُ الزَّبَانِیَةَ ۟ۙ
سَنَدْعُநாம் அழைப்போம்الزَّبَانِيَةَ ۙ‏நரகத்தின் காவலாளிகளை
ஸனத் 'உZஜ் ZஜBபானியஹ்
முஹம்மது ஜான்
நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
நாமும் (அவனை நரகத்திற்கு அனுப்ப, நரகத்தின்) காவலாளிகளை அழைப்போம்.
IFT
தண்டனை தரும் வானவர்களை நாமும் அழைத்துக் கொள்வோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம் (அவனுக்கு தண்டனை தரும்) காவலர்களை அழைப்போம்.
Saheeh International
We will call the angels of Hell.
كَلَّا ؕ لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۟
كَلَّا ؕஅவ்வாறல்லلَا تُطِعْهُஅவனுக்குக் கீழ்ப்படியாதீர்وَاسْجُدْஇன்னும் சிரம் பணிவீராகوَاقْتَرِبْ۩‏இன்னும் நெருங்குவீராக
கல்லா; ல துதிஃஹு வஸ்ஜுத் வக்தரிBப்
முஹம்மது ஜான்
(அவன் கூறுவது போலல்ல;) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக நீர் அவனுக்குக் கீழ்ப்படியாதீர். (உமது இறைவனுக்குச்) சிரம் பணிந்து வணங்கி (அவனை) நெருங்குவீராக!
IFT
ஒருபோதும் அவ்வாறில்லை! அவனுக்குக் கீழ்ப்படியாதீர். மேலும், சிரம் பணிவீராக! மேலும் (உம் இறைவனின்) நெருக்கத்தைப் பெறுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நீர் தொழுவதை விட்டும் தடுத்துவிட முயன்றானே அவ்வாறு) அல்ல! நபியே! நிச்சயமாக நீர் அவனுக்குக் கீழ்ப்படியாதீர், (உமதிரட்சகனுக்குச்) சிரம் பணிவீராக! இன்னும், (அவனை வணக்கத்தின் மூலம்) நெருங்குவீராக!
Saheeh International
No! Do not obey him. But prostrate and draw near [to Allah].