97. ஸூரத்துல் கத்ரி(கண்ணியமிக்க இரவு)

மக்கீ, வசனங்கள்: 5

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِیْ لَیْلَةِ الْقَدْرِ ۟ۚۖ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَنْزَلْنٰهُஇதை இறக்கினோம்فِىْ لَيْلَةِஇரவில்الْقَدْرِ ۖ ۚ‏கத்ரு
இன்னா அன்Zஜல்னாஹு Fபீ லய்லதில் கத்ர்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் இந்த குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) லைலதுல் கத்ர் என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கிவைத்தோம்.
IFT
திண்ணமாக, நாம் இதனை (குர்ஆனை) மாட்சிமை மிக்க இரவில் இறக்கி வைத்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் (நம் வேதமாகிய) இதனை கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர் எனும்) இரவில் இறக்கி வைத்தோம்
Saheeh International
Indeed, We sent it [i.e., the Qur’an] down during the Night of Decree.
وَمَاۤ اَدْرٰىكَ مَا لَیْلَةُ الْقَدْرِ ۟ؕ
وَمَاۤஎதுاَدْرٰٮكَஉமக்கு அறிவித்ததுمَاஎன்ன(வென்று)لَيْلَةُ الْقَدْرِؕ‏லைலத்துல் கத்ரு
வமா அத்ராக ம லய்லதுல் கத்ர்
முஹம்மது ஜான்
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீர் அறிவீரா?
IFT
மாட்சிமை மிக்க இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! அந்த) கண்ணியமிக்க இரவு என்னவென்பது பற்றி உமக்கு அறிவித்தது எது?
Saheeh International
And what can make you know what is the Night of Decree?
لَیْلَةُ الْقَدْرِ ۙ۬ خَیْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ ۟ؕؔ
لَيْلَةُ الْقَدْرِ  ۙலைலத்துல் கத்ருخَيْرٌசிறந்ததுمِّنْவிடاَلْفِஆயிரம்شَهْرٍؕ‏மாதங்கள்
லய்லதுல் கத்ரி கய்ரும் மின் அல்Fபீ ஷஹ்ர்
முஹம்மது ஜான்
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.
IFT
மாட்சிமை மிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிகச் சிறந்ததாகும்.
Saheeh International
The Night of Decree is better than a thousand months.
تَنَزَّلُ الْمَلٰٓىِٕكَةُ وَالرُّوْحُ فِیْهَا بِاِذْنِ رَبِّهِمْ ۚ مِنْ كُلِّ اَمْرٍ ۟ۙۛ
تَنَزَّلُஇறங்குகிறார்கள்الْمَلٰٓٮِٕكَةُவானவர்களும்وَالرُّوْحُஜிப்ரீலும்فِيْهَاஅதில்بِاِذْنِஅனுமதி கொண்டுرَبِّهِمْ‌ۚதங்கள் இறைவனின்مِّنْஉடன்كُلِّஎல்லாاَمْرٍ ۛۙ‏கட்டளைகள்
தனZஜ் Zஜலுல் மலா-இகது வர் ரூஹு Fபீஹா Bபி இத்னி-ரBப் Bபிஹிம் மின் குல்லி அம்ர்
முஹம்மது ஜான்
அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
அதில் வானவர்களும், ஜிப்ரயீலும், தங்கள் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர்.
IFT
அதில் வானவர்களும் ரூஹும் தம் இறைவனின் அனுமதியுடன் அனைத்துக் கட்டளைகளையும் ஏந்திய வண்ணம் இறங்குகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதில் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய பரிசுத்த) ஆவியும் தங்கள் இரட்சகனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) ஒவ்வொரு காரியத்தின் நிமித்தம் இறங்குகின்றனர்.
Saheeh International
The angels and the Spirit [i.e., Gabriel] descend therein by permission of their Lord for every matter.
سَلٰمٌ ۛ۫ هِیَ حَتّٰی مَطْلَعِ الْفَجْرِ ۟۠
سَلٰمٌஈடேற்றம் உண்டாகுக ۛهِىَஅதுحَتّٰىவரைمَطْلَعِஉதயமாகும்الْفَجْرِ‏அதிகாலை
ஸலாமுன் ஹிய ஹத்தா மத் ல'இல் Fபஜ்ர்
முஹம்மது ஜான்
சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘ஸலாம்'' (ஈடேற்றம்) உண்டாகுக! (அவ்விரவின் இச்சிறப்பு) விடியற்காலை உதயமாகும் வரை (நீடிக்கிறது).
IFT
அந்த இரவு முழுவதும் நலம் பொருந்தியதாகத் திகழ்கின்றது, வைகறை உதயமாகும் வரை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அது) சாந்தியா(ன இரவாகும், அவ்விரவான)து அதிகாலை உதயமாகும் வரையிலாகும்.
Saheeh International
Peace it is until the emergence of dawn.