இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.
“ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?” என்று (இறைவன்) கூறினான்.
பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.
وَقُلْنَاஇன்னும் கூறினோம்یٰۤاٰدَمُஆதமேاسْكُنْவசிப்பீராகاَنْتَநீர்وَزَوْجُكَஇன்னும் உம் மனைவிالْجَـنَّةَசொர்க்கத்தில்وَكُلَاஇன்னும் இருவரும் சாப்பிடுங்கள்مِنْهَاஅதிலிருந்துرَغَدًاதாராளமாகحَيْثُவிதத்தில்شِئْتُمَاஇருவரும் நாடினீர்கள்وَلَا تَقْرَبَاஇன்னும் இருவரும் நெருங்காதீர்கள்هٰذِهِஇந்தالشَّجَرَةَமரத்தைفَتَكُوْنَاஇருவரும் ஆகிவிடுவீர்கள்مِنَ الظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களில்
மேலும் நாம், “ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்” என்று சொன்னோம்.
பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.
இன்ன மதல 'ஈஸா 'இன்தல் லாஹி கமதலி ஆதம கலகஹூ மின் துராBபின் தும்ம கால லஹூ குன் Fபயகூன்
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
வத்லு 'அலய்ஹிம் னBப அBப்னய் ஆதம Bபில்ஹக்க்; இத் கர்ரBபா குர்Bபானன் FபதுகுBப்Bபில மின் அஹதிஹிமா வ லம் யுதகBப்Bபல் மினல் ஆகரி கால ல அக்துலன்ன்னக கால இன்னமா யதகBப்Bபலுல் லாஹு மினல் முத்தகீன்
(நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (பின்னவர்) “நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று கூறினார். அதற்கு (முன்னவர்) “மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்” என்று கூறினார்.
நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.
கால மா மன'அக அல்லா தஸ்ஜுத இத் அமர்துக கால அன கய்ரும் மின்ஹு கலக்தனீ மின் னாரி(ன்)வ் வ கலக்தஹூ மின் தீன்
“நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.
கால FபBபிமா அக்வய் தனீ ல அக்'உதன்ன லஹும் ஸிராதகல் முஸ்தகீம்
(அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.
(பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) “ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்).
يٰبَنِىْۤசந்ததிகளேاٰدَمَஆதமின்لَاவேண்டாம்يَفْتِنَـنَّكُمُஉங்களை ஏமாற்றிவிடالشَّيْطٰنُஷைத்தான்كَمَاۤபோன்றுاَخْرَجَவெளியேற்றினான்اَبَوَيْكُمْஉங்கள் தாய் தந்தையைمِّنَ الْجَـنَّةِசொர்க்கத்திலிருந்துيَنْزِعُகழட்டுகிறான்عَنْهُمَاஅவ்விருவரை விட்டுلِبَاسَهُمَاஅவ்விருவரின் ஆடையைلِيُرِيَهُمَاஅவன் காண்பிப்பதற்காக/அவ்விருவருக்குسَوْءاٰتِهِمَا ؕஅவ்விருவருடைய வெட்கத்தலங்களைاِنَّهٗநிச்சயமாக அவன்يَرٰٮكُمْபார்க்கிறான்/உங்களைهُوَஅவன்وَقَبِيْلُهٗஇன்னும் அவனுடைய இனத்தார்مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ ؕநீங்கள் அவர்களைப் பார்க்காதவாறுاِنَّاநிச்சயமாக நாம்جَعَلْنَاஆக்கினோம்الشَّيٰطِيْنَஷைத்தான்களைاَوْلِيَآءَநண்பர்களாகلِلَّذِيْنَஎவர்களுக்குلَا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
யா Bபனீ ஆதம லா யFப்தினன்ன்னகுமுஷ் ஷய்தானு கமா அக்ரஜ அBபவய்கும் மினல் ஜன்னதி யன்Zஜி'உ 'அன்ஹுமா லிBபாஸஹுமா லியுரியஹுமா ஸவ் ஆதிஹிமா; இன்னஹூ யராகும் ஹுவ வ கBபீலுஹூ மின் ஹய்து லா தரவ்னஹும்; இன்னா ஜ'அல்னஷ் ஷயாதீன அவ்லியா'அ லில்லதீன லா யு'மினூன்
ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு; மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.
வ இத் அகத ரBப்Bபுக மின் Bபனீ ஆதம மின் ளுஹூரிஹிம் துர்ரிய்யதஹும் வ அஷ்ஹதஹும் 'அலா அன்Fபுஸிஹிம் அலஸ்து Bபி ரBப்Bபிகும் காலூ Bபலா ஷஹித்னா; அன் தகூலூ யவ்மல் கியாமதி இன்னா குன்னா 'அன் ஹாதா காFபிலீன்
உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: “நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக;(ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்.
وَاِذْ قُلْنَاநாம் கூறிய சமயம்لِلْمَلٰۤٮِٕكَةِவானவர்களுக்குاسْجُدُوْاசிரம் பணியுங்கள்لِاٰدَمَஆதமுக்குفَسَجَدُوْۤاசிரம் பணிந்தனர்اِلَّاۤதவிரاِبْلِيْسَஇப்லீஸ்قَالَகூறினான்ءَاَسْجُدُநான் சிரம் பணிவதா?لِمَنْஎவருக்குخَلَقْتَநீ படைத்தாய்طِيْنًا ۚமண்ணிலிருந்து
வ இத் குல்னா லில் மலா'இகதிஸ் ஜுதூ லி ஆதம Fபஸஜதூ இல்லா இBப்லீஸ கால 'அ-அஸ்ஜுது லிமன் கலக்த தீனா
இன்னும், (நினைவு கூர்வீராக!) நாம் மலக்குகளிடம் “ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்” என்று கூறிய போது, இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவனோ: “களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜூது செய்ய வேண்டும்?” என்று கூறினான்.
நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.
அன்றியும், “ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக; அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.
இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள் - இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.
முன்னர், நாம் ஆதமுக்கு நிச்சயமாக கட்டளையிட்டிருந்தோம்; ஆனால் (அதனை) அவர் மறந்து விட்டார்; (அக்கட்டளைபடி நடக்கும்) உறுதிப்பாட்டை நாம் அவரிடம் காணவில்லை.
“நீங்கள் ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, இப்லீஸை தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள். அவன் (அவ்வாறு செய்யாது) விலகிக் கொண்டான்.
فَقُلْنَاஆகவே நாம் கூறினோம்يٰۤاٰدَمُஆதமேاِنَّநிச்சயமாகهٰذَاஇவன்عَدُوٌّஎதிரிلَّكَஉமக்குوَلِزَوْجِكَஇன்னும் உமது மனைவிக்குفَلَا يُخْرِجَنَّكُمَاஆகவே, அவன் உங்கள் இருவரையும் வெளியேற்றிவிட வேண்டாம்مِنَ الْجَـنَّةِசொர்க்கத்திலிருந்துفَتَشْقٰىநீர்சிரமப்பட்டுவிடுவீர்
அப்பொழுது “ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனானான்; ஆதலால், உங்களிருவரையும் இச்சுவனபதியிலிருந்து திட்டமாக வெளியேற்ற (இடந்) தரவேண்டாம்; இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர்.
Fப வஸ்வஸ இலய்ஹிஷ் ஷய்தானு கால யா ஆதமு ஹல் அதுல்லுக 'அலா ஷஜரதில் குல்தி வ முல்கில் லா யBப்லா
ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி: “ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?” என்று கேட்டான்.
பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்.