">

தேடல் வார்த்தை: "இப்ராஹீ"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

75 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 2 (முடிவுகள் 1 - 50)

وَاِذِ ابْتَلٰۤی اِبْرٰهٖمَ رَبُّهٗ بِكَلِمٰتٍ فَاَتَمَّهُنَّ ؕ قَالَ اِنِّیْ جَاعِلُكَ لِلنَّاسِ اِمَامًا ؕ قَالَ وَمِنْ ذُرِّیَّتِیْ ؕ قَالَ لَا یَنَالُ عَهْدِی الظّٰلِمِیْنَ ۟
وَ اِذِஇன்னும் (நினைவுகூருங்கள்) எப்போதுابْتَلٰۤیசோதித்தானோاِبْرٰهٖمَஇப்ராஹீமைرَبُّهٗஅவருடைய இறைவன்بِكَلِمٰتٍசில வார்த்தைகளைக் கொண்டுفَاَتَمَّهُنَّ ؕஅப்போது அவற்றை அவர் முழுமையாக்கினார்قَالَஅவன் கூறினான்اِنِّیْநிச்சயமாக நான்جَاعِلُكَஉன்னை ஆக்குகிறேன்لِلنَّاسِமனிதர்களுக்குاِمَامًا ؕதலைவராகقَالَஅவர் கூறினார்وَ مِنْமேலும் (என்)ذُرِّیَّتِیْ ؕசந்ததியினரிலிருந்தும்قَالَஅவன் கூறினான்لَاஇல்லைیَنَالُஅடையும்عَهْدِیஎனது உடன்படிக்கைالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களை
வ இதிBப் தலா இBப்ராஹீம ரBப்Bபுஹூ Bபி கலிமாதின் Fப அதம்மஹுன்ன கால இன்னீ ஜா'இலுக லின்னாஸி இமாமன் கால வ மின் துர்ரிய்யதீ கால லா யனாலு 'அஹ்திள் ளாலிமீன்
(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.
وَاِذْ جَعَلْنَا الْبَیْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمْنًا ؕ وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّی ؕ وَعَهِدْنَاۤ اِلٰۤی اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ اَنْ طَهِّرَا بَیْتِیَ لِلطَّآىِٕفِیْنَ وَالْعٰكِفِیْنَ وَالرُّكَّعِ السُّجُوْدِ ۟
وَ اِذْமேலும் (நினைவு கூருங்கள்)جَعَلْنَاநாம் ஆக்கினோம்الْبَیْتَஅந்த வீட்டைمَثَابَةًதிரும்பி வரும் இடமாகلِّلنَّاسِமனிதர்களுக்குوَ اَمْنًا ؕமேலும் பாதுகாப்பானதாகவும்وَ اتَّخِذُوْاமேலும் ஆக்கிக்கொள்ளுங்கள்مِنْஇருந்துمَّقَامِநின்ற இடத்தைاِبْرٰهٖمَஇப்ராஹீமுடையمُصَلًّی ؕதொழும் இடமாகوَ عَهِدْنَاۤமேலும் நாம் கட்டளையிட்டோம்اِلٰۤیநோக்கிاِبْرٰهٖمَஇப்ராஹீமைوَ اِسْمٰعِیْلَமேலும் இஸ்மாயீலைاَنْஎன்றுطَهِّرَاநீங்கள் இருவரும் தூய்மைப்படுத்துங்கள்بَیْتِیَஎனது வீட்டைلِلطَّآىِٕفِیْنَசுற்றி வருபவர்களுக்காகوَ الْعٰكِفِیْنَமேலும் தங்கியிருப்பவர்களுக்காகوَ الرُّكَّعِமேலும் ருகூஃ செய்பவர்களுக்காகالسُّجُوْدِஸுஜூது செய்பவர்களுக்காக
வ இத் ஜ'அல்னல் Bபய்த மதாBபதல் லின்னாஸி வ அம்ன(ன்)வ் வத்தகிதூ மிம் மகாமி இBப்ராஹீம முஸல்லா; வ 'அஹித்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல அன் தஹ்ஹிரா Bபய்திய லித்தா'இFபீன வல்'ஆகிFபீன வர்ருக்க'இஸ் ஸுஜூத்
(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.
وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّارْزُقْ اَهْلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنْ اٰمَنَ مِنْهُمْ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ قَالَ وَمَنْ كَفَرَ فَاُمَتِّعُهٗ قَلِیْلًا ثُمَّ اَضْطَرُّهٗۤ اِلٰی عَذَابِ النَّارِ ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟
وَ اِذْமேலும் (நினைவுகூருங்கள்) எப்போதுقَالَகூறினார்اِبْرٰهٖمُஇப்ராஹீம்رَبِّஎன் இறைவனேاجْعَلْஆக்குவாயாகهٰذَاஇதனைبَلَدًاஒரு நகரமாகاٰمِنًاபாதுகாப்பானதாகوَّ ارْزُقْமேலும் உணவளிப்பாயாகاَهْلَهٗஅதன் மக்களுக்குمِنَஇலிருந்துالثَّمَرٰتِகனிகளைمَنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டாரோمِنْهُمْஅவர்களில்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ الْیَوْمِமேலும் நாளின் மீதுالْاَخِرِ ؕஇறுதிقَالَ(இறைவன்) கூறினான்وَ مَنْமேலும் எவர்كَفَرَநிராகரித்தானோفَاُمَتِّعُهٗஅவனுக்கு நான் சுகமளிப்பேன்قَلِیْلًاசிறிது காலம்ثُمَّபிறகுاَضْطَرُّهٗۤஅவனை நான் நிர்ப்பந்திப்பேன்اِلٰیபக்கம்عَذَابِவேதனையின்النَّارِ ؕநரக நெருப்பின்وَ بِئْسَமேலும் அது மிகக் கெட்டதுالْمَصِیْرُசேருமிடம்
வ இத் கால இBப்ராஹீமு ரBப்Bபிஜ் 'அல் ஹாதா Bபலதன் ஆமின(ன்)வ் வர்Zஜுக் அஹ்லஹூ மினத் தமராதி மன் ஆமன மின்ஹும் Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி கால வ மன் கFபர Fபஉமத்தி'உஹூ கலீலன் தும்ம அள்தர்ருஹூ இலா 'அதாBபின் னாரி வ Bபி'ஸல்மஸீர்
(இன்னும் நினைவு கூறுங்கள்:) இப்ராஹீம்: “இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று கூறினார்; அதற்கு இறைவன் கூறினான்: “(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்; பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன் - அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.”
وَاِذْ یَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَیْتِ وَاِسْمٰعِیْلُ ؕ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ؕ اِنَّكَ اَنْتَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
وَ اِذْஇன்னும், போதுیَرْفَعُஉயர்த்தியاِبْرٰهٖمُஇப்ராஹீம்الْقَوَاعِدَஅடித்தளங்களைمِنَஇருந்துالْبَیْتِஅந்த ஆலயத்தின்وَ اِسْمٰعِیْلُ ؕமேலும் இஸ்மாயீலும்رَبَّنَاஎங்கள் இறைவனேتَقَبَّلْஏற்றுக் கொள்வாயாகمِنَّا ؕஎங்களிடமிருந்துاِنَّكَநிச்சயமாக நீاَنْتَநீயேالسَّمِیْعُசெவியேற்பவன்الْعَلِیْمُநன்கறிந்தவன்
வ இத் யர்Fப'உ இBப்ராஹீமுல் கவா'இத மினல் Bபய்திவ இஸ்மா'ஈலு ரBப்Bபனா தகBப்Bபல் மின்னா இன்னக அன்தஸ் ஸமீ'உல் அலீம்
இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினார்)
وَمَنْ یَّرْغَبُ عَنْ مِّلَّةِ اِبْرٰهٖمَ اِلَّا مَنْ سَفِهَ نَفْسَهٗ ؕ وَلَقَدِ اصْطَفَیْنٰهُ فِی الدُّنْیَا ۚ وَاِنَّهٗ فِی الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِیْنَ ۟
وَ مَنْஇன்னும் எவர்یَّرْغَبُபுறக்கணிப்பாரோعَنْவிட்டுمِّلَّةِமார்க்கத்தைاِبْرٰهٖمَஇப்ராஹீமுடையاِلَّاதவிரمَنْஎவர்سَفِهَஅறிவீனமாக்கிக் கொண்டாரோنَفْسَهٗ ؕதன்னைத் தானேوَ لَقَدِஇன்னும் நிச்சயமாகاصْطَفَیْنٰهُநாம் அவரைத் தேர்ந்தெடுத்தோம்فِیஇல்الدُّنْیَا ۚஇவ்வுலகம்وَ اِنَّهٗஇன்னும் நிச்சயமாக அவர்فِیஇல்الْاٰخِرَةِமறுமைلَمِنَநிச்சயமாகالصّٰلِحِیْنَநல்லோர்களில்
வ மய் யர்கBபு 'அம்-மில்லதி இBப்ராஹீம இல்லா மன் ஸFபிஹ னFப்ஸஹ்; வ லகதிஸ் தFபய்னாஹு Fபித்-துன்யா வ இன்னஹூ Fபில் ஆகிரதி லமினஸ் ஸாலிஹீன்
இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.
وَوَصّٰی بِهَاۤ اِبْرٰهٖمُ بَنِیْهِ وَیَعْقُوْبُ ؕ یٰبَنِیَّ اِنَّ اللّٰهَ اصْطَفٰی لَكُمُ الدِّیْنَ فَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟ؕ
وَ وَصّٰیமேலும் அறிவுறுத்தினார்بِهَاۤஇதனைاِبْرٰهٖمُஇப்ராஹீம்بَنِیْهِதனது புதல்வர்களுக்குوَ یَعْقُوْبُ ؕமற்றும் யஃகூபும்یٰبَنِیَّஎன் புதல்வர்களேاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்اصْطَفٰیதேர்ந்தெடுத்துள்ளான்لَكُمُஉங்களுக்காகالدِّیْنَஇம்மார்க்கத்தைفَلَاஎனவே வேண்டாம்تَمُوْتُنَّநீங்கள் மரணிக்கاِلَّاதவிரوَ اَنْتُمْநீங்கள்مُّسْلِمُوْنَؕமுஸ்லிம்களாக
வ வஸ்ஸா Bபிஹா இBப்ராஹீமு Bபனீஹி வ யஃகூBப், யா Bபனிய்ய இன்னல் லாஹஸ் தFபா லகுமுத் தீன Fபலா தமூதுன்ன இல்லா வ அன்தும் முஸ்லிமூன்
இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்: “என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.”
اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ حَضَرَ یَعْقُوْبَ الْمَوْتُ ۙ اِذْ قَالَ لِبَنِیْهِ مَا تَعْبُدُوْنَ مِنْ بَعْدِیْ ؕ قَالُوْا نَعْبُدُ اِلٰهَكَ وَاِلٰهَ اٰبَآىِٕكَ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
اَمْஅல்லதுكُنْتُمْநீங்கள் இருந்தீர்களாشُهَدَآءَசாட்சிகளாகاِذْபோதுحَضَرَவந்தیَعْقُوْبَயஃகூபுக்குالْمَوْتُ ۙமரணம்اِذْஅப்போதுقَالَஅவர் கூறினார்لِبَنِیْهِதன் புதல்வர்களிடம்مَاஎதனைتَعْبُدُوْنَநீங்கள் வணங்குவீர்கள்مِنْۢஇருந்துبَعْدِیْ ؕஎனக்குப் பின்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்نَعْبُدُநாங்கள் வணங்குவோம்اِلٰهَكَஉமது இறைவனைوَ اِلٰهَமேலும் இறைவனைاٰبَآىِٕكَஉமது மூதாதையர்களின்اِبْرٰهٖمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَமற்றும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَமற்றும் இஸ்ஹாக்اِلٰهًاஇறைவனைوَّاحِدًا ۖۚஏகوَّ نَحْنُமேலும் நாங்கள்لَهٗஅவனுக்கேمُسْلِمُوْنَகீழ்ப்படிந்தவர்கள்
அம் குன்தும் ஷுஹதா'அ இத் ஹளர யஃகூBபல் மவ்து இத் கால லிBபனீஹி மா தஃBபுதூன மிம் Bபஃதீ காலூ னஃBபுது இலாஹக வ இலாஹ ஆBபா'இக இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஷ்ஹாக இலாஹ(ன்)வ் வாஹித(ன்)வ் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர்.
وَقَالُوْا كُوْنُوْا هُوْدًا اَوْ نَصٰرٰی تَهْتَدُوْا ؕ قُلْ بَلْ مِلَّةَ اِبْرٰهٖمَ حَنِیْفًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்كُوْنُوْاநீங்கள் ஆகுங்கள்هُوْدًاயூதர்களாகاَوْஅல்லதுنَصٰرٰیகிறிஸ்தவர்களாகتَهْتَدُوْا ؕநீங்கள் நேர்வழி பெறுவீர்கள்قُلْநீர் கூறுவீராகبَلْமாறாகمِلَّةَமார்க்கத்தைاِبْرٰهٖمَஇப்ராஹீமுடையحَنِیْفًا ؕநேர்வழியில் நின்றவரானوَ مَاமேலும் இல்லைكَانَஅவர் இருந்தார்مِنَசேர்ந்தவராகالْمُشْرِكِیْنَஇணைவைப்பாளர்களில்
வ காலூ கூனூ ஹூதன் அவ் னஸாரா தஹ்ததூ; குல் Bபல் மில்லத இBப்ராஹீம ஹனீFப(ன்)வ் வமா கான மினல் முஷ்ரிகீன்
“நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் - நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
قُوْلُوْۤا اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَیْنَا وَمَاۤ اُنْزِلَ اِلٰۤی اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَمَاۤ اُوْتِیَ النَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۚ لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ۖؗ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
قُوْلُوْۤاசொல்லுங்கள்اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ مَاۤஇன்னும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோاِلَیْنَاஎங்களுக்குوَ مَاۤஇன்னும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோاِلٰۤیபால்اِبْرٰهٖمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَஇன்னும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَ الْاَسْبَاطِஇன்னும் சந்ததியினர்وَ مَاۤஇன்னும் எதுاُوْتِیَவழங்கப்பட்டதோمُوْسٰیமூஸாவுக்குوَ عِیْسٰیஇன்னும் ஈஸாவுக்குوَ مَاۤஇன்னும் எதுاُوْتِیَவழங்கப்பட்டதோالنَّبِیُّوْنَநபிமார்களுக்குمِنْஇருந்துرَّبِّهِمْ ۚஅவர்களின் இறைவனிடம்لَاமாட்டோம்نُفَرِّقُநாங்கள் வேறுபடுத்தبَیْنَஇடையில்اَحَدٍஎவருக்கும்مِّنْهُمْ ۖؗஅவர்களில்وَ نَحْنُமேலும் நாங்கள்لَهٗஅவனுக்கேمُسْلِمُوْنَகீழ்ப்படிந்தவர்கள்
கூலூ ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில இலய்னா வ மா உன்Zஜில இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ மாஊதிய மூஸா வ 'ஈஸா வ மா ஊதியன் னBபிய்யூன மிர் ரBப்Bபிஹிம் லா னுFபர்ரிகூ Bபய்ன அஹதிம் மின்ஹும் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
(முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.
اَمْ تَقُوْلُوْنَ اِنَّ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطَ كَانُوْا هُوْدًا اَوْ نَصٰرٰی ؕ قُلْ ءَاَنْتُمْ اَعْلَمُ اَمِ اللّٰهُ ؕ وَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِنْدَهٗ مِنَ اللّٰهِ ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
اَمْஅல்லதுتَقُوْلُوْنَநீங்கள் கூறுகிறீர்களாاِنَّநிச்சயமாகاِبْرٰهٖمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَமற்றும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَமற்றும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَமற்றும் யஃகூப்وَ الْاَسْبَاطَமற்றும் சந்ததியினர்كَانُوْاஇருந்தார்கள்هُوْدًاயூதர்களாகاَوْஅல்லதுنَصٰرٰی ؕகிறிஸ்தவர்களாகقُلْநீர் கூறுவீராகءَاَنْتُمْநீங்களாاَعْلَمُமிக அறிந்தவர்கள்اَمِஅல்லதுاللّٰهُ ؕஅல்லாஹ்வாوَ مَنْமேலும் யார்اَظْلَمُமிக அநியாயக்காரன்مِمَّنْஎவனை விடكَتَمَமறைத்தானோشَهَادَةًசாட்சியத்தைعِنْدَهٗதன்னிடம் உள்ளمِنَஇருந்துاللّٰهِ ؕஅல்லாஹ்وَ مَاமேலும் இல்லைاللّٰهُஅல்லாஹ்بِغَافِلٍபராமுகமானவனாகعَمَّاஎதைப்பற்றிتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோ
அம் தகூலூன இன்ன இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஷ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாத கானூ ஹூதன் அவ் னஸாரா; குல் 'அ-அன்தும் அஃலமு அமில் லாஹ்; வ மன் அள்லமு மிம்மன் கதம ஷஹாததன் 'இன்தஹூ மினல்லாஹ்; வ மல்லாஹு BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நிச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே” என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக: “(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை.”
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْ حَآجَّ اِبْرٰهٖمَ فِیْ رَبِّهٖۤ اَنْ اٰتٰىهُ اللّٰهُ الْمُلْكَ ۘ اِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّیَ الَّذِیْ یُحْیٖ وَیُمِیْتُ ۙ قَالَ اَنَا اُحْیٖ وَاُمِیْتُ ؕ قَالَ اِبْرٰهٖمُ فَاِنَّ اللّٰهَ یَاْتِیْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَاْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِیْ كَفَرَ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟ۚ
اَلَمْநீர்تَرَகவனிக்கவில்லையாاِلَیபற்றிالَّذِیْஎவனைحَآجَّதர்க்கம் செய்தானோاِبْرٰهٖمَஇப்ராஹீமிடம்فِیْகுறித்துرَبِّهٖۤஅவருடைய இறைவனைப்اَنْஎன்பதால்اٰتٰىهُஅவனுக்கு வழங்கினான்اللّٰهُஅல்லாஹ்الْمُلْكَ ۘஆட்சியைاِذْஅப்போதுقَالَகூறினார்اِبْرٰهٖمُஇப்ராஹீம்رَبِّیَஎன் இறைவன்الَّذِیْஎத்தகையவன் என்றால்یُحْیٖஉயிர் கொடுக்கிறான்وَ یُمِیْتُ ۙமேலும் மரணிக்கச் செய்கிறான்قَالَஅவன் கூறினான்اَنَاநான்اُحْیٖஉயிர் கொடுக்கிறேன்وَ اُمِیْتُ ؕமேலும் மரணிக்கச் செய்கிறேன்قَالَகூறினார்اِبْرٰهٖمُஇப்ராஹீம்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَاْتِیْகொண்டு வருகிறான்بِالشَّمْسِசூரியனைمِنَஇருந்துالْمَشْرِقِகிழக்குفَاْتِஎனவே நீ கொண்டு வாبِهَاஅதனைمِنَஇருந்துالْمَغْرِبِமேற்குفَبُهِتَஅப்போது திகைத்துப்போனான்الَّذِیْஎவன்كَفَرَ ؕநிராகரித்தானோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்لَاமாட்டான்یَهْدِیநேர்வழி காட்டالْقَوْمَமக்களுக்குالظّٰلِمِیْنَۚஅநியாயக்கார
அலம் தர இலல் லதீ ஹாஜ்ஜ இBப்ராஹீம Fபீ ரBப்Bபிஹீ அன் ஆதாஹுல்லாஹுல் முல்க இத் கால இBப்ராஹீமு ரBப்Bபியல் லதீ யுஹ்யீ வ யுமீது கால அன உஹ்யீ வ உமீது கால இBப்ராஹீமு Fப இன்னல் லாஹ யாதீ Bபிஷ்ஷம்ஸி மினல் மஷ்ரிகி Fபாதி Bபிஹா மினல் மக்ரிBபி FபBபுஹிதல் லதீ கFபர்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.
وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِیْ كَیْفَ تُحْیِ الْمَوْتٰی ؕ قَالَ اَوَلَمْ تُؤْمِنْ ؕ قَالَ بَلٰی وَلٰكِنْ لِّیَطْمَىِٕنَّ قَلْبِیْ ؕ قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّیْرِ فَصُرْهُنَّ اِلَیْكَ ثُمَّ اجْعَلْ عَلٰی كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ یَاْتِیْنَكَ سَعْیًا ؕ وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟۠
وَ اِذْமேலும் (அப்போது)قَالَகூறினார்اِبْرٰهٖمُஇப்ராஹீம்رَبِّஎன் இறைவனேاَرِنِیْஎனக்குக் காண்பிப்பாயாகكَیْفَஎவ்வாறுتُحْیِநீ உயிர்ப்பிக்கிறாய்الْمَوْتٰی ؕஇறந்தவர்களைقَالَஅவன் கூறினான்اَوَ لَمْஎன்ன,تُؤْمِنْ ؕநீர் நம்பவில்லையாقَالَஅவர் கூறினார்بَلٰیஆம்وَ لٰكِنْஎனினும்لِّیَطْمَىِٕنَّஅமைதி பெறுவதற்காகவேقَلْبِیْ ؕஎன் இதயம்قَالَஅவன் கூறினான்فَخُذْஅப்படியானால் பிடிப்பீராகاَرْبَعَةًநான்கினைمِّنَஇருந்துالطَّیْرِபறவைகளில்فَصُرْهُنَّஆகவே அவற்றை பழக்கிக் கொள்வீராகاِلَیْكَஉம்மிடம்ثُمَّபின்னர்اجْعَلْவைப்பீராகعَلٰیமீதுكُلِّஒவ்வொருجَبَلٍமலையின்مِّنْهُنَّஅவற்றிலிருந்துجُزْءًاஒரு பகுதியைثُمَّபின்னர்ادْعُهُنَّஅவற்றைக் கூப்பிடுவீராகیَاْتِیْنَكَஅவை உம்மிடம் வரும்سَعْیًا ؕவிரைந்துوَ اعْلَمْமேலும் அறிந்து கொள்வீராகاَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَزِیْزٌமிகைத்தவன்حَكِیْمٌ۠ஞானமிக்கவன்
வ இத் கால இBப்ராஹீமு ரBப்Bபி அரினீ கய்Fப துஹ்யில் மவ்தா கால அவ லம் து'மின் கால Bபலா வ லாகின் லியத்ம'இன்ன கல்Bபீ கால Fபகுத் அர்Bப'அதன் மினத் தய்ரி Fபஸுர்ஹுன்ன இலய்க தும்மஜ் 'அல் 'அலா குல்லி ஜBபலின் மின்ஹுன்ன ஜுZஜ்'அன் தும்மத்'உ ஹுன்ன ய'தீனக ஸஃயா; வஃலம் அன்னல் லாஹ 'அZஜீZஜுன் ஹகீம்
இன்னும், இப்ராஹீம்: “என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!” எனக் கோரியபோது, அவன்,“நீர் (இதை) நம்ப வில்லையா?” எனக் கேட்டான்; “மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)” என்று கூறினார் “(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்; பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்” என்று (அல்லாஹ்) கூறினான்.
اِنَّ اللّٰهَ اصْطَفٰۤی اٰدَمَ وَنُوْحًا وَّاٰلَ اِبْرٰهِیْمَ وَاٰلَ عِمْرٰنَ عَلَی الْعٰلَمِیْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்اصْطَفٰۤیதேர்ந்தெடுத்தான்اٰدَمَஆதமைوَ نُوْحًاநூஹையும்وَّ اٰلَகுடும்பத்தாரையும்اِبْرٰهِیْمَஇப்ராஹீமின்وَ اٰلَகுடும்பத்தாரையும்عِمْرٰنَஇம்ரானின்عَلَیவிடالْعٰلَمِیْنَۙஅகிலத்தாரை
இன்னல் லாஹஸ் தFபா ஆதம வ னூஹ(ன்)வ் வ ஆல இBப்ராஹீம வ ஆல இம்ரான 'அலல் 'ஆலமீன்
ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.
یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تُحَآجُّوْنَ فِیْۤ اِبْرٰهِیْمَ وَمَاۤ اُنْزِلَتِ التَّوْرٰىةُ وَالْاِنْجِیْلُ اِلَّا مِنْ بَعْدِهٖ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟
یٰۤاَهْلَஓ உடையவர்களேالْكِتٰبِவேதத்தைلِمَஏன்تُحَآجُّوْنَதர்க்கம் செய்கிறீர்கள்فِیْۤபற்றிاِبْرٰهِیْمَஇப்ராஹீமைப்وَ مَاۤமேலும் இல்லைاُنْزِلَتِஅருளப்பட்டதுالتَّوْرٰىةُதவ்ராத்وَ الْاِنْجِیْلُமற்றும் இன்ஜீல்اِلَّاதவிரمِنْۢஇருந்துبَعْدِهٖ ؕஅவருக்குப் பின்اَفَلَاஅப்படியிருக்க நீங்கள்تَعْقِلُوْنَசிந்திக்க மாட்டீர்களா?
யா அஹ்லல் கிதாBபி லிமா துஹாஜ்ஜூன Fபீ இBப்ராஹீம வ மா உன்Zஜிலதித் தவ்ராது வல் இன்ஜீலு இல்லா மிம் Bபஃதிஹ்; அFபல தஃகிலூன்
வேதத்தையுடையோரே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறிஸ்தவரா என்று வீணாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லையே; (இதைக்கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா?
مَا كَانَ اِبْرٰهِیْمُ یَهُوْدِیًّا وَّلَا نَصْرَانِیًّا وَّلٰكِنْ كَانَ حَنِیْفًا مُّسْلِمًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
مَاஇல்லைكَانَஇருந்தார்اِبْرٰهِیْمُஇப்ராஹீம்یَهُوْدِیًّاயூதராகوَّ لَاமேலும் இல்லைنَصْرَانِیًّاகிறிஸ்தவராகوَّ لٰكِنْஆனால்كَانَஇருந்தார்حَنِیْفًاநேர்வழிநின்றவராகمُّسْلِمًا ؕமுஸ்லிமாகوَ مَاமேலும் இல்லைكَانَஇருந்தார்مِنَஒருவராகالْمُشْرِكِیْنَஇணைவைப்பாளர்களில்
மா கான இBப்ராஹீமு யஹூதிய்ய(ன்)வ் வலா னஸ்ரா னிய்ய(ன்)வ் வ லாகின் கான ஹனீFபம் முஸ்லிம(ன்)வ் வமா கான மினல் முஷ்ரிகீன்
இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை; ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்; அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.
اِنَّ اَوْلَی النَّاسِ بِاِبْرٰهِیْمَ لَلَّذِیْنَ اتَّبَعُوْهُ وَهٰذَا النَّبِیُّ وَالَّذِیْنَ اٰمَنُوْا ؕ وَاللّٰهُ وَلِیُّ الْمُؤْمِنِیْنَ ۟
اِنَّநிச்சயமாகاَوْلَیமிக நெருக்கமானவர்கள்النَّاسِமனிதர்களில்بِاِبْرٰهِیْمَஇப்ராஹீமுக்குلَلَّذِیْنَநிச்சயமாக எவர்கள்اتَّبَعُوْهُஅவரைப் பின்பற்றினார்களோوَ هٰذَاமேலும் இந்தالنَّبِیُّநபிوَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْا ؕஈமான் கொண்டார்களோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்وَلِیُّபாதுகாவலன்الْمُؤْمِنِیْنَமுஃமின்களின்
இன்னா அவ்லன் னாஸி Bபி இBப்ராஹீம லல்லதீனத் தBப 'ஊஹு வ ஹாதன் னBபிய்யு வல்லதீன ஆமனூ; வல்லாஹு வலிய்யுல் மு'மினீன்
நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார்; மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்.
قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ عَلَیْنَا وَمَاۤ اُنْزِلَ عَلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَالنَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۪ لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ؗ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
قُلْகூறுவீராகاٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ مَاۤமேலும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோعَلَیْنَاஎங்கள் மீதுوَ مَاۤமேலும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோعَلٰۤیமீதுاِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَமேலும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَமேலும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَமேலும் யஃகூப்وَ الْاَسْبَاطِமேலும் சந்ததியினர்وَ مَاۤமேலும் எதுاُوْتِیَவழங்கப்பட்டதோمُوْسٰیமூஸாவுக்குوَ عِیْسٰیமேலும் ஈஸாவுக்குوَ النَّبِیُّوْنَமேலும் நபிமார்களுக்குمِنْஇருந்துرَّبِّهِمْ ۪அவர்களின் இறைவனிடம்لَاமாட்டோம்نُفَرِّقُநாங்கள் வேறுபடுத்தبَیْنَஇடையில்اَحَدٍஎவருக்கும்مِّنْهُمْ ؗஅவர்களில்وَ نَحْنُமேலும் நாங்கள்لَهٗஅவனுக்கேمُسْلِمُوْنَகீழ்ப்படிந்தவர்கள்
குல் ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில 'அலய்னா வ மா உன்Zஜில 'அலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ மா ஊதிய மூஸா வ 'ஈஸா வன் னBபிய்யூன மிர் ரBப்Bபிஹிம் லா னுFபர்ரிகு Bபய்ன அஹதிம் மின்ஹும் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
قُلْ صَدَقَ اللّٰهُ ۫ فَاتَّبِعُوْا مِلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
قُلْகூறுவீராகصَدَقَமெய்யுரைத்தான்اللّٰهُ ۫அல்லாஹ்فَاتَّبِعُوْاஎனவே பின்பற்றுங்கள்مِلَّةَமார்க்கத்தைاِبْرٰهِیْمَஇப்ராஹீமுடையحَنِیْفًا ؕநேர்மையானவராகوَ مَاமேலும் இல்லைكَانَஅவர் இருந்தார்مِنَஉள்ளவர்களில்الْمُشْرِكِیْنَஇணைவைப்பாளர்கள்
குல் ஸதகல் லாஹ்; Fபத்தBபி'ஊ மில்லத இBப்ராஹீம ஹனீFப(ன்)வ் வமா கான மினல் முஷ் ரிகீன்
(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் (இவை பற்றி) உண்மையையே கூறுகிறான்; ஆகவே (முஃமின்களே!) நேர்வழி சென்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள்; அவர் முஷ்ரிக்குகளில் ஒருவராக இருக்கவில்லை.”
فِیْهِ اٰیٰتٌۢ بَیِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِیْمَ ۚ۬ وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ؕ وَلِلّٰهِ عَلَی النَّاسِ حِجُّ الْبَیْتِ مَنِ اسْتَطَاعَ اِلَیْهِ سَبِیْلًا ؕ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِیٌّ عَنِ الْعٰلَمِیْنَ ۟
فِیْهِஅதில்اٰیٰتٌۢஅத்தாட்சிகள்بَیِّنٰتٌதெளிவானவைمَّقَامُநின்ற இடம்اِبْرٰهِیْمَ ۚ۬இப்ராஹீமுடையوَ مَنْமேலும் எவர்دَخَلَهٗஅதில் நுழைகிறாரோكَانَஅவர் ஆகிவிடுவார்اٰمِنًا ؕபாதுகாப்பைப் பெற்றவராகوَ لِلّٰهِமேலும் அல்லாஹ்வுக்காகعَلَیமீதுالنَّاسِமனிதர்களின்حِجُّஹஜ் செய்வதுالْبَیْتِஅந்த ஆலயத்தைمَنِஎவர்اسْتَطَاعَசக்தி பெற்றாரோاِلَیْهِஅதன் பக்கம்سَبِیْلًا ؕவழிوَ مَنْமேலும் எவர்كَفَرَநிராகரிக்கிறாரோفَاِنَّஆகவே நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَنِیٌّதேவையற்றவன்عَنِவிட்டும்الْعٰلَمِیْنَஅகிலத்தாரை
Fபீஹி ஆயாதும் Bபய்யினாதும் மகாமு இBப்ராஹீம வ மன் தகலஹூ கான ஆமினா; வ லில்லாஹி 'அலன் னாஸி ஹிஜ்ஜுல் Bபய்தி மனிஸ் ததா'அ இலய்ஹி ஸBபீலா; வ மன் கFபர Fப இன்னல் லாஹ கனிய்யுன் 'அனில் 'ஆலமீன்
அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.
اَمْ یَحْسُدُوْنَ النَّاسَ عَلٰی مَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ۚ فَقَدْ اٰتَیْنَاۤ اٰلَ اِبْرٰهِیْمَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَیْنٰهُمْ مُّلْكًا عَظِیْمًا ۟
اَمْஅல்லதுیَحْسُدُوْنَஅவர்கள் பொறாமைப்படுகிறார்களாالنَّاسَமனிதர்கள்عَلٰیமீதுمَاۤஎதைاٰتٰىهُمُஅவர்களுக்கு வழங்கினானோاللّٰهُஅல்லாஹ்مِنْஇருந்துفَضْلِهٖ ۚஅவனது அருட்கொடைفَقَدْஆகவே நிச்சயமாகاٰتَیْنَاۤநாம் வழங்கினோம்اٰلَசந்ததியினருக்குاِبْرٰهِیْمَஇப்ராஹீமுடையالْكِتٰبَவேதத்தைوَ الْحِكْمَةَமேலும் ஞானத்தையும்وَ اٰتَیْنٰهُمْஇன்னும் அவர்களுக்கு வழங்கினோம்مُّلْكًاஓர் அரசாட்சியைعَظِیْمًاமகத்தான
அம் யஹ்ஸுதூனன் னாஸ 'அலா மா ஆதாஹுமுல் லாஹு மின் Fபள்லிஹீ Fபகத் ஆதய்னா ஆல இBப்ராஹீமல் கிதாBப வல் ஹிக்மத வ ஆதய்னாஹும் முல்கன் 'அளீமா
அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.
وَمَنْ اَحْسَنُ دِیْنًا مِّمَّنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ وَّاتَّبَعَ مِلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ؕ وَاتَّخَذَ اللّٰهُ اِبْرٰهِیْمَ خَلِیْلًا ۟
وَ مَنْமேலும் எவர்اَحْسَنُமிகச் சிறந்தவர்دِیْنًاமார்க்கத்தில்مِّمَّنْஎவரை விடاَسْلَمَஒப்படைத்தாரோوَجْهَهٗதன் முகத்தைلِلّٰهِஅல்லாஹ்வுக்குوَ هُوَமேலும் அவர்مُحْسِنٌநன்மை செய்பவராகوَّ اتَّبَعَமேலும் பின்பற்றினாரோمِلَّةَமார்க்கத்தைاِبْرٰهِیْمَஇப்ராஹீமின்حَنِیْفًا ؕநேரான வழியில் நின்றவராகوَ اتَّخَذَமேலும் ஆக்கிக்கொண்டான்اللّٰهُஅல்லாஹ்اِبْرٰهِیْمَஇப்ராஹீமைخَلِیْلًاஉற்ற நண்பராக
வ மன் அஹ்ஸனு தீனம் மிம்ம்மன் அஸ்லம வஜ்ஹஹூ லில்லாஹி வ ஹுவ முஹ்ஸினு(ன்)வ் வத்தBப'அ மில்லத இBப்ராஹீம ஹனீFபா; வத்தகதல் லாஹு இBப்ராஹீம கலீலா
மேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்ராஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? இன்னும் அல்லாஹ் இப்ராஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்.
اِنَّاۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ كَمَاۤ اَوْحَیْنَاۤ اِلٰی نُوْحٍ وَّالنَّبِیّٖنَ مِنْ بَعْدِهٖ ۚ وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِیْسٰی وَاَیُّوْبَ وَیُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَیْمٰنَ ۚ وَاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟ۚ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَوْحَیْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَیْكَஉமக்குكَمَاۤபோலவேاَوْحَیْنَاۤநாம் வஹீ அறிவித்தோமோاِلٰیபால்نُوْحٍநூஹ்وَّ النَّبِیّٖنَஇன்னும் நபிமார்களுக்கும்مِنْۢஇருந்துبَعْدِهٖ ۚஅவருக்குப் பின்وَ اَوْحَیْنَاۤஇன்னும் நாம் வஹீ அறிவித்தோம்اِلٰۤیபால்اِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَஇன்னும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَ الْاَسْبَاطِஇன்னும் சந்ததியினருக்கும்وَ عِیْسٰیஇன்னும் ஈஸாوَ اَیُّوْبَஇன்னும் அய்யூப்وَ یُوْنُسَஇன்னும் யூனுஸ்وَ هٰرُوْنَஇன்னும் ஹாரூன்وَ سُلَیْمٰنَ ۚஇன்னும் ஸுலைமான்وَ اٰتَیْنَاஇன்னும் நாம் வழங்கினோம்دَاوٗدَதாவூதுக்குزَبُوْرًاۚஜபூரை
இன்னா அவ்ஹய்னா இலய்க கமா அவ்ஹய்னா இலா னூஹி(ன்)வ் வன் னBபிய்யீன மிம் Bபஃதிஹ்; வ அவ்ஹய்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ 'ஈஸா வ அய்யூBப வ யூனுஸ வ ஹாரூன வ ஸுலய்மான்; வ ஆதய்னா தாவூத ZஜBபூரா
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
وَاِذْ قَالَ اِبْرٰهِیْمُ لِاَبِیْهِ اٰزَرَ اَتَتَّخِذُ اَصْنَامًا اٰلِهَةً ۚ اِنِّیْۤ اَرٰىكَ وَقَوْمَكَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
وَ اِذْஇன்னும்قَالَகூறினார்اِبْرٰهِیْمُஇப்ராஹீம்لِاَبِیْهِதன் தந்தையிடம்اٰزَرَஆஸரிடம்اَتَتَّخِذُநீர் ஆக்கிக் கொள்கிறீராاَصْنَامًاசிலைகளைاٰلِهَةً ۚதெய்வங்களாகاِنِّیْۤநிச்சயமாக நான்اَرٰىكَஉம்மைக் காண்கிறேன்وَ قَوْمَكَஉம்முடைய சமூகத்தாரையும்فِیْஇல்ضَلٰلٍவழிகேட்டில்مُّبِیْنٍதெளிவான
வ இத் கால இBப்ராஹீமு லி அBபீஹி ஆZஜர அ-தத்தகிது அஸ்னாமன் ஆலிஹதன் இன்னீ அராக வ கவ்மக Fபீ ளலாலிம் முBபீன்
இப்ராஹீம் தம் தகப்பனார் ஆஜரிடம், “விக்கிரகங்களையா நீர் தெய்வங்களாக எடுத்துக் கொள்கிறீர்? நான் உம்மையும் உம் சமூகத்தாரையும், பகிரங்கமான வழி கேட்டில் இருப்பதை நிச்சயமாக பார்க்கிறேன்” என்று கூறியதை நினைத்துப்பாரும்.
وَكَذٰلِكَ نُرِیْۤ اِبْرٰهِیْمَ مَلَكُوْتَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلِیَكُوْنَ مِنَ الْمُوْقِنِیْنَ ۟
وَ كَذٰلِكَஇவ்வாறேنُرِیْۤநாம் காண்பிக்கிறோம்اِبْرٰهِیْمَஇப்ராஹீமுக்குمَلَكُوْتَஆட்சியைالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِபூமியினதும்وَ لِیَكُوْنَஅவர் ஆவதற்காகவும்مِنَஇருந்துالْمُوْقِنِیْنَஉறுதி கொண்டவர்களில்
வ கதாலிக னுரீ இBப்ராஹீம மலகூதஸ் ஸமாவாதி வல் அர்ளி வ லியகூன மினல் மூகினீன்
அவர் உறுதியான நம்பிக்கையுடையவராய் ஆகும் பொருட்டு வானங்கள், பூமி இவற்றின் ஆட்சியை இப்ராஹீமுக்கு இவ்வாறு காண்பித்தோம்.
وَتِلْكَ حُجَّتُنَاۤ اٰتَیْنٰهَاۤ اِبْرٰهِیْمَ عَلٰی قَوْمِهٖ ؕ نَرْفَعُ دَرَجٰتٍ مَّنْ نَّشَآءُ ؕ اِنَّ رَبَّكَ حَكِیْمٌ عَلِیْمٌ ۟
وَ تِلْكَமேலும் அதுவேحُجَّتُنَاۤநம்முடைய ஆதாரம்اٰتَیْنٰهَاۤஅதனை நாம் வழங்கினோம்اِبْرٰهِیْمَஇப்ராஹீமுக்குعَلٰیஎதிராகقَوْمِهٖ ؕஅவருடைய சமுதாயத்திற்குنَرْفَعُநாம் உயர்த்துகிறோம்دَرَجٰتٍஅந்தஸ்துகளில்مَّنْஎவரைنَّشَآءُ ؕநாம் நாடுகிறோமோاِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்حَكِیْمٌஞானமிக்கவன்عَلِیْمٌநன்கு அறிந்தவன்
வ தில்க ஹுஜ்ஜதுனா ஆதய்னாஹா இBப்ராஹீம 'அலா கவ்மிஹ்; னர்Fப'உ தரஜாதிம் மன் னஷா'; இன்ன ரBப்Bபக ஹகீமுன் 'அலீம்
இவை நம்முடைய ஆதாரங்களாகும், நாம் இவற்றை இப்ராஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்கு பதவிகளை (மேலும் மேலும்) உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் பூரண ஞானமும் பேரறிவும் உள்ளவன்.
قُلْ اِنَّنِیْ هَدٰىنِیْ رَبِّیْۤ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۚ۬ دِیْنًا قِیَمًا مِّلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ۚ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
قُلْகூறுவீராகاِنَّنِیْநிச்சயமாக என்னைهَدٰىنِیْநேர்வழி காட்டினான்رَبِّیْۤஎன் இறைவன்اِلٰیபக்கம்صِرَاطٍபாதைمُّسْتَقِیْمٍ ۚ۬நேரானدِیْنًاமார்க்கம்قِیَمًاநிலையானمِّلَّةَவழிமுறைاِبْرٰهِیْمَஇப்ராஹீமுடையحَنِیْفًا ۚநேர்மையானவராகوَ مَاமேலும் இல்லைكَانَஅவர் இருந்தார்مِنَஇருந்துالْمُشْرِكِیْنَஇணைவைப்பவர்களில்
குல் இன்னனீ ஹதானீ ரBப்Bபீ இலா ஸிராதிம் முஸ்தகீமின் தீனன் கியமம் மில்லத இBப்ராஹீம ஹனீFபா; வமா கான மினல் முஷ்ரிகீன்
(நபியே!) நீர் கூறும்: “மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பால் வழி காட்டினான் - அது மிக்க உறுதியான மார்க்கமாகும்; இப்ராஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும், அவர் இணைவைப்பவர்களில் ஒருவராக இருக்கவில்லை.
اَلَمْ یَاْتِهِمْ نَبَاُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ۙ۬ وَقَوْمِ اِبْرٰهِیْمَ وَاَصْحٰبِ مَدْیَنَ وَالْمُؤْتَفِكٰتِ ؕ اَتَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ ۚ فَمَا كَانَ اللّٰهُ لِیَظْلِمَهُمْ وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
اَلَمْவரவில்லையாیَاْتِهِمْஅவர்களிடம்نَبَاُசெய்திالَّذِیْنَஎவர்களின்مِنْஇருந்துقَبْلِهِمْஅவர்களுக்கு முன்قَوْمِசமூகத்தாரானنُوْحٍநூஹ்وَّ عَادٍமற்றும் ஆதுوَّ ثَمُوْدَ ۙ۬மற்றும் ஸமூதுوَ قَوْمِமற்றும் சமூகத்தாரானاِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اَصْحٰبِமற்றும் வாசிகளானمَدْیَنَமத்யன்وَ الْمُؤْتَفِكٰتِ ؕமற்றும் தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊர்களின்اَتَتْهُمْஅவர்களிடம் வந்தார்கள்رُسُلُهُمْஅவர்களுடைய தூதர்கள்بِالْبَیِّنٰتِ ۚதெளிவான அத்தாட்சிகளுடன்فَمَاஎனவே இல்லைكَانَஇருந்தான்اللّٰهُஅல்லாஹ்لِیَظْلِمَهُمْஅவர்களுக்கு அநீதி இழைக்கوَ لٰكِنْஆனால்كَانُوْۤاஅவர்கள் இருந்தார்கள்اَنْفُسَهُمْதங்களுக்குத் தாங்களேیَظْلِمُوْنَஅநீதி இழைத்துக் கொண்டிருந்தார்கள்
அலம் ய'திஹிம் னBப உல் லதீன மின் கBப்லிஹிம் கவ்மி னூஹி(ன்)வ் வ 'ஆதி(ன்)வ் வ தமூத வ கவ்மி இBப்ராஹீம வ அஸ்ஹாBபி மத்யன வல் மு'தFபிகாத்; அதத்ஹும் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி Fபமா கானல் லாஹு லியள்லிமஹும் வ லாகின் கானூ அன்Fபுஸஹும் யள்லிமூன்
இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய சமுதாயம், ஆது, ஸமூதுடைய சமுதாயம் இப்ராஹீம் உடைய சமுதாயம் மத்யன் வாசிகள் தலைகீழாய்ப் புரண்டுபோன ஊரார் ஆகியவர்களின் வரலாறு அவர்களிடம் வரவில்லையா? அவர்களுக்கு (நாம் அனுப்பிய) அவர்களுக்குரிய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்தார்கள்; (தூதர்களை நிராகரித்ததினால் அவர்கள் அழிந்தனர்.) அல்லாஹ் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை; எனினும் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
وَمَا كَانَ اسْتِغْفَارُ اِبْرٰهِیْمَ لِاَبِیْهِ اِلَّا عَنْ مَّوْعِدَةٍ وَّعَدَهَاۤ اِیَّاهُ ۚ فَلَمَّا تَبَیَّنَ لَهٗۤ اَنَّهٗ عَدُوٌّ لِّلّٰهِ تَبَرَّاَ مِنْهُ ؕ اِنَّ اِبْرٰهِیْمَ لَاَوَّاهٌ حَلِیْمٌ ۟
وَ مَاமேலும் இல்லைكَانَஇருந்ததுاسْتِغْفَارُபாவமன்னிப்புத் தேடியதுاِبْرٰهِیْمَஇப்ராஹீம்لِاَبِیْهِதம் தந்தைக்காகاِلَّاதவிரعَنْகாரணமாகمَّوْعِدَةٍஒரு வாக்குறுதியின்وَّعَدَهَاۤஅதை அவர் அளித்திருந்தார்اِیَّاهُ ۚஅவருக்குفَلَمَّاபின்னர் எப்போதுتَبَیَّنَதெளிவாகியதோلَهٗۤஅவருக்குاَنَّهٗநிச்சயமாக அவர்عَدُوٌّபகைவன்لِّلّٰهِஅல்லாஹ்வுக்குتَبَرَّاَஅவர் விலகிக்கொண்டார்مِنْهُ ؕஅவரிடமிருந்துاِنَّநிச்சயமாகاِبْرٰهِیْمَஇப்ராஹீம்لَاَوَّاهٌஇளகிய மனம் கொண்டவர்حَلِیْمٌசகிப்புத்தன்மை உடையவர்
வமா கானஸ் திக்Fபாரு இBப்ராஹீம லி அBபீஹி இல்லா 'அன் மவ்'இததி(ன்)வ் வ 'அதஹா இய்யாஹு Fபலம்மா தBபய்யன லஹூ அன்னஹூ 'அதுவ்வுல் லில்லாஹி தBபர்ர அ மின்ஹ்; இன்ன இBப்ராஹீம ல அவ்வாஹுன் ஹலீம்
இப்ராஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவேயன்றி வேறில்லை; மெய்யாகவே, அவர் (தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்பது தெளிவாகியதும் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார் - நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.
وَلَقَدْ جَآءَتْ رُسُلُنَاۤ اِبْرٰهِیْمَ بِالْبُشْرٰی قَالُوْا سَلٰمًا ؕ قَالَ سَلٰمٌ فَمَا لَبِثَ اَنْ جَآءَ بِعِجْلٍ حَنِیْذٍ ۟
وَ لَقَدْநிச்சயமாகجَآءَتْவந்தார்கள்رُسُلُنَاۤநம் தூதர்கள்اِبْرٰهِیْمَஇப்ராஹீமிடம்بِالْبُشْرٰیநற்செய்தியுடன்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்سَلٰمًا ؕஸலாம்قَالَஅவர் கூறினார்سَلٰمٌஸலாம்فَمَاஎனவே இல்லைلَبِثَஅவர் தாமதித்தார்اَنْஎன்பதில்جَآءَஅவர் கொண்டு வந்தார்بِعِجْلٍஒரு கன்றுக்குட்டியைحَنِیْذٍபொரிக்கப்பட்ட
வ லகத் ஜா'அத் ருஸுலுனா இBப்ராஹீம Bபில்Bபுஷ்ரா காலூ ஸலாமன் கால ஸலாமுன் Fபமா லBபித அன் ஜா'அ Bபி'இஜ்லின் ஹனீத்
நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீமுக்கு நற்செய்தி (கொண்டு வந்து) “ஸலாம்” (சொன்னார்கள்; இப்ராஹீமும் “ஸலாம்” (என்று பதில்) சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை.
فَلَمَّا ذَهَبَ عَنْ اِبْرٰهِیْمَ الرَّوْعُ وَجَآءَتْهُ الْبُشْرٰی یُجَادِلُنَا فِیْ قَوْمِ لُوْطٍ ۟ؕ
فَلَمَّاஆகவே, எப்போதுذَهَبَநீங்கியதோعَنْவிட்டுاِبْرٰهِیْمَஇப்ராஹீமைالرَّوْعُஅச்சம்وَ جَآءَتْهُமேலும் அவருக்கு வந்ததோالْبُشْرٰیநற்செய்திیُجَادِلُنَاநம்மிடம் விவாதிக்கலானார்فِیْகுறித்துقَوْمِசமூகத்தாரைப்لُوْطٍؕலூத்தின்
Fபலம்மா தஹBப அன் இBப்ராஹீமர் ரவ்'உ வ ஜா'அத் ஹுல் Bபுஷ்ரா யுஜாதிலுனா Fபீ கவ்மி லூத்
(இது கேட்டு) இப்ராஹீமை விட்டுப் பயம் நீங்கி, நன்மாராயம் அவருக்கு வந்ததும் லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி நம்மிடம் வாதிடலானார்.
اِنَّ اِبْرٰهِیْمَ لَحَلِیْمٌ اَوَّاهٌ مُّنِیْبٌ ۟
اِنَّநிச்சயமாகاِبْرٰهِیْمَஇப்ராஹீம்لَحَلِیْمٌசகிப்புத்தன்மை மிக்கவர்اَوَّاهٌஉள்ளுருகக் கூடியவர்مُّنِیْبٌமீளக்கூடியவர்
இன்ன இBப்ராஹீம ல ஹலீமுன் அவ்வாஹுன் முனீBப்
நிச்சயமாக இப்ராஹீம் சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங்கொண்டவராகவும் (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார்.
یٰۤاِبْرٰهِیْمُ اَعْرِضْ عَنْ هٰذَا ۚ اِنَّهٗ قَدْ جَآءَ اَمْرُ رَبِّكَ ۚ وَاِنَّهُمْ اٰتِیْهِمْ عَذَابٌ غَیْرُ مَرْدُوْدٍ ۟
یٰۤاِبْرٰهِیْمُஇப்ராஹீமே!اَعْرِضْபுறக்கணித்து விடுங்கள்عَنْவிட்டுهٰذَا ۚஇதைاِنَّهٗநிச்சயமாகقَدْதிண்ணமாகجَآءَவந்துவிட்டதுاَمْرُகட்டளைرَبِّكَ ۚஉமது இறைவனின்وَ اِنَّهُمْமேலும் நிச்சயமாக அவர்களுக்குاٰتِیْهِمْவரக்கூடியதுعَذَابٌவேதனைغَیْرُஅல்லாதمَرْدُوْدٍதிருப்பப்படக்கூடியது
யா இBப்ராஹீமு அஃரிள் 'அன் ஹாதா இன்னஹூ கத் ஜா'அ அம்ரு ரBப்Bபிக வ இன்னஹும் ஆதீஹிம் 'அதாBபுன் கய்ருன் மர்தூத்
இப்ராஹீமே! (அம்மக்கள் மீது கொண்ட இரக்கத்தால் இதைப் பற்றி வாதிடாது) இ(வ்விஷயத்)தை நீர் புறக்கணியும்; ஏனெனில் உம்முடைய இறைவனின் கட்டளை நிச்சயமாக வந்துவிட்டது - மேலும், அவர்களுக்குத் தவிர்க்கமுடியாத வேதனை நிச்சயமாக வரக்கூடியதேயாகும்.
وَكَذٰلِكَ یَجْتَبِیْكَ رَبُّكَ وَیُعَلِّمُكَ مِنْ تَاْوِیْلِ الْاَحَادِیْثِ وَیُتِمُّ نِعْمَتَهٗ عَلَیْكَ وَعَلٰۤی اٰلِ یَعْقُوْبَ كَمَاۤ اَتَمَّهَا عَلٰۤی اَبَوَیْكَ مِنْ قَبْلُ اِبْرٰهِیْمَ وَاِسْحٰقَ ؕ اِنَّ رَبَّكَ عَلِیْمٌ حَكِیْمٌ ۟۠
وَ كَذٰلِكَஅவ்வாறேیَجْتَبِیْكَஉன்னைத் தேர்ந்தெடுப்பான்رَبُّكَஉனது இறைவன்وَ یُعَلِّمُكَமேலும் உனக்குக் கற்றுக்கொடுப்பான்مِنْஇருந்துتَاْوِیْلِவிளக்கத்தைالْاَحَادِیْثِகனவுகளின்وَ یُتِمُّமேலும் அவன் முழுமையாக்குவான்نِعْمَتَهٗதனது அருட்கொடையைعَلَیْكَஉன் மீதுوَ عَلٰۤیமேலும் மீதுاٰلِசந்ததியினர்یَعْقُوْبَயஃகூப்كَمَاۤஎவ்வாறுاَتَمَّهَاஅதனை முழுமையாக்கினானோعَلٰۤیமீதுاَبَوَیْكَஉனது இரு முன்னோர்கள்مِنْஇருந்துقَبْلُமுன்னர்اِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اِسْحٰقَ ؕமேலும் இஸ்ஹாக்اِنَّநிச்சயமாகرَبَّكَஉனது இறைவன்عَلِیْمٌநன்கறிந்தவன்حَكِیْمٌ۠ஞானமிக்கவன்
வ கதாலிக யஜ்தBபீக ரBப்Bபுக வ யு'அல்லிமுக மின் த'வீலில் அஹாதீதி வ யுதிம்மு னிஃமதஹூ 'அலய்க வ 'அலா ஆலி யஃகூBப கமா அதம்மஹா 'அலா அBபவய்க மின் கBப்லு இBப்ராஹீம வ இஸ்ஹாக்; இன்ன ரBப்Bபக 'அலீமுன் ஹகீம்
இவ்வாறு உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உன் மீதும், யஃகூபின் சந்ததியார் மீதும் நிரப்பமாக்கி வைப்பான் - இதற்கு முன்னர் உன்னுடைய மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் (ஆகிய) இருவர் மீதும் தன் அருளை அவன் நிரப்பமாக்கி வைத்தது போல், நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.”
وَاتَّبَعْتُ مِلَّةَ اٰبَآءِیْۤ اِبْرٰهِیْمَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ مَا كَانَ لَنَاۤ اَنْ نُّشْرِكَ بِاللّٰهِ مِنْ شَیْءٍ ؕ ذٰلِكَ مِنْ فَضْلِ اللّٰهِ عَلَیْنَا وَعَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَشْكُرُوْنَ ۟
وَ اتَّبَعْتُமேலும் நான் பின்பற்றினேன்مِلَّةَமார்க்கத்தைاٰبَآءِیْۤஎன் முன்னோர்களானاِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اِسْحٰقَமற்றும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَ ؕமற்றும் யஃகூப்مَاஇல்லைكَانَஆகுமானதுلَنَاۤஎங்களுக்குاَنْஎன்பதுنُّشْرِكَநாங்கள் இணைவைப்பதுبِاللّٰهِஅல்லாஹ்வுக்குمِنْஎந்தشَیْءٍ ؕஒன்றையும்ذٰلِكَஅதுمِنْஇருந்துள்ளفَضْلِஅருட்கொடையாகும்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْنَاஎங்கள் மீதும்وَ عَلَیமற்றும் மீதுالنَّاسِமனிதர்கள்وَ لٰكِنَّஆனால்اَكْثَرَபெரும்பாலானالنَّاسِமனிதர்கள்لَاஇல்லைیَشْكُرُوْنَநன்றி செலுத்துகிறார்கள்
வத்தBபஃது மில்லத ஆBபா'ஈ இBப்ராஹீம வ இஷ்ஹாக வ யஃகூBப்; மா கான லனா அன் னுஷ்ரிக Bபில்லாஹி மின் ஷய்'; தாலிகமின் Fபள்லில் லாஹி 'அலய்னா வ 'அலன் னாஸி வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஷ்குரூன்
“நான் என் மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல; இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை.
وَاِذْ قَالَ اِبْرٰهِیْمُ رَبِّ اجْعَلْ هٰذَا الْبَلَدَ اٰمِنًا وَّاجْنُبْنِیْ وَبَنِیَّ اَنْ نَّعْبُدَ الْاَصْنَامَ ۟ؕ
وَ اِذْஇன்னும் (நினைவு கூர்வீராக)قَالَகூறினார்اِبْرٰهِیْمُஇப்ராஹீம்رَبِّஎன் இறைவனேاجْعَلْஆக்குவாயாகهٰذَاஇந்தالْبَلَدَஊரைاٰمِنًاபாதுகாப்பானதாகوَّ اجْنُبْنِیْஇன்னும் என்னை விலக்கி வைப்பாயாகوَ بَنِیَّஎன் மக்களையும்اَنْநாங்கள்نَّعْبُدَவணங்குவதை விட்டும்الْاَصْنَامَؕசிலைகளை
வ இத் கால இBப்ராஹீமு ரBப்Bபிஜ் 'அல் ஹாதல் Bபலத ஆமின(ன்)வ் வஜ்னுBப்னீ வ Bபனிய்ய அன் னஃBபுதல் அஸ்னாம்
நினைவு கூறுங்கள்! “என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).
وَنَبِّئْهُمْ عَنْ ضَیْفِ اِبْرٰهِیْمَ ۟ۘ
وَ نَبِّئْهُمْமேலும் அவர்களுக்குத் தெரிவிப்பீராகعَنْபற்றிضَیْفِவிருந்தினர்களைப்اِبْرٰهِیْمَۘஇப்ராஹீமுடைய
வ னBப்Bபி'ஹும் 'அன் ளய்Fபி இBப்ராஹீம்
இன்னும், இப்ராஹீமின் விருந்தினர்களைப் பற்றியும் அவர்களுக்கு அறிவிப்பீராக!
قَالَ وَمَنْ یَّقْنَطُ مِنْ رَّحْمَةِ رَبِّهٖۤ اِلَّا الضَّآلُّوْنَ ۟
قَالَஅவர் கூறினார்وَ مَنْமேலும் யார்یَّقْنَطُநம்பிக்கையிழப்பார்مِنْஇருந்துرَّحْمَةِஅருளில்رَبِّهٖۤதன் இறைவனின்اِلَّاதவிரالضَّآلُّوْنَவழிகெட்டவர்கள்
கால வ மய் யக்னது மிர் ரஹ்மதி ரBப்Bபிஹீ இல்லள் ளாலூன்
“வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தம் இறைவனுடைய அருளைப்பற்றி நிராசை கொள்வர்” என்று (இப்ராஹீம் பதில்) சொன்னார்,
قَالَ فَمَا خَطْبُكُمْ اَیُّهَا الْمُرْسَلُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்فَمَاஅப்படியானால் என்னخَطْبُكُمْஉங்கள் காரியம்اَیُّهَاالْمُرْسَلُوْنَதூதர்களே
கால Fபமா கத்Bபுகும் அய்யுஹல் முர்ஸலூன்
“(அல்லாஹ்வின்) தூதர்களே! உங்களுடைய காரியமென்ன?” என்று (இப்ராஹீம்) கேட்டார்.
اِنَّ اِبْرٰهِیْمَ كَانَ اُمَّةً قَانِتًا لِّلّٰهِ حَنِیْفًا ؕ وَلَمْ یَكُ مِنَ الْمُشْرِكِیْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகاِبْرٰهِیْمَஇப்ராஹீம்كَانَஇருந்தார்اُمَّةًஒரு சமுதாயமாகقَانِتًاஅடிபணிந்தவராகلِّلّٰهِஅல்லாஹ்வுக்குحَنِیْفًا ؕநேர்வழி நின்றவராகوَ لَمْமேலும் இல்லைیَكُஇருந்தார்مِنَஒருவராகالْمُشْرِكِیْنَۙஇணைவைப்பாளர்களில்
இன்ன இBப்ராஹீம கான உம்மதன் கானிதல் லில்லாஹி ஹனீFப(ன்)வ் வ லம் யகுமினல் முஷ்ரிகீன்
நிச்சயமாக இப்ராஹீம் ஒரு வழிகாட்டியாகவும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராகவும் (நேரான பாதையில்) சார்ந்தவராகவும் இருந்தார்; மேலும், அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.
ثُمَّ اَوْحَیْنَاۤ اِلَیْكَ اَنِ اتَّبِعْ مِلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
ثُمَّபிறகுاَوْحَیْنَاۤநாம் வஹீ அறிவித்தோம்اِلَیْكَஉமக்குاَنِஎன்றுاتَّبِعْபின்பற்றுவீராகمِلَّةَமார்க்கத்தைاِبْرٰهِیْمَஇப்ராஹீமுடையحَنِیْفًا ؕநேர்மையானவராகوَ مَاமேலும் இல்லைكَانَஅவர் இருந்தார்مِنَஇருந்துالْمُشْرِكِیْنَஇணைவைப்பவர்களில்
தும்ம்ம அவ்ஹய்னா இலய்க அனித் தBபிஃ மில்லத இBப்ராஹீம ஹனீFபா; வமா கான மினல் முஷ்ரிகீன்
(நபியே!) பின்னர் “நேர்மையாளரான இப்ராஹீமின் சன்மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும்” என்று நாம் உமக்கு வஹீ அறிவித்தோம்; அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருந்ததில்லை.
وَاذْكُرْ فِی الْكِتٰبِ اِبْرٰهِیْمَ ؕ۬ اِنَّهٗ كَانَ صِدِّیْقًا نَّبِیًّا ۟
وَ اذْكُرْமேலும் நினைவு கூர்வீராகفِیஇல்الْكِتٰبِவேதத்தில்اِبْرٰهِیْمَ ؕ۬இப்ராஹீமைاِنَّهٗநிச்சயமாக அவர்كَانَஇருந்தார்صِدِّیْقًاமிக்க உண்மையாளராகنَّبِیًّاநபியாக
வத்குர் Fபில் கிதாBபி இBப்ராஹீம்; இன்னஹூ கான ஸித்தீகன் னBபிய்யா
(நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமைப்பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராகவும் - நபியாகவும் - இருந்தார்.
قَالَ اَرَاغِبٌ اَنْتَ عَنْ اٰلِهَتِیْ یٰۤاِبْرٰهِیْمُ ۚ لَىِٕنْ لَّمْ تَنْتَهِ لَاَرْجُمَنَّكَ وَاهْجُرْنِیْ مَلِیًّا ۟
قَالَஅவர் கூறினார்اَرَاغِبٌபுறக்கணிப்பவனாاَنْتَநீعَنْவிட்டுاٰلِهَتِیْஎன் தெய்வங்களைیٰۤاِبْرٰهِیْمُ ۚஇப்ராஹீமேلَىِٕنْஎன்றால்لَّمْஇல்லைتَنْتَهِவிலகிக்கொள்ளلَاَرْجُمَنَّكَநிச்சயமாக உன்னைக் கல்லால் எறிவேன்وَ اهْجُرْنِیْமேலும் என்னை விட்டு விலகிவிடுمَلِیًّاநெடுங்காலம்
கால அராகிBபுன் அன்த 'அன் ஆலிஹதீ யா இBப்ராஹீமு ல 'இல் லம் தன்தஹி ல அர்ஜுமன்னக வஹ்ஜுர்னீ மலிய்யா
(அதற்கு அவர்) “இப்ராஹீமே! நீர் என் தெய்வங்களை புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லெறிந்து கொல்வேன்; இனி நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்” என்றார்.
قَالَ سَلٰمٌ عَلَیْكَ ۚ سَاَسْتَغْفِرُ لَكَ رَبِّیْ ؕ اِنَّهٗ كَانَ بِیْ حَفِیًّا ۟
قَالَஅவர் கூறினார்سَلٰمٌஸலாம்عَلَیْكَ ۚஉம் மீதுسَاَسْتَغْفِرُநான் பாவமன்னிப்புத் தேடுவேன்لَكَஉமக்காகرَبِّیْ ؕஎன் இறைவனிடம்اِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருக்கிறான்بِیْஎன் மீதுحَفِیًّاமிக்க அன்புடையவனாக
கால ஸலாமுன் 'அலய்க ஸ அஸ்தக்Fபிரு லக ரBப்Bபீ இன்னஹூ கான Bபீ ஹFபிய்யா
(அதற்கு இப்ராஹீம்) “உம்மீது ஸலாம் உண்டாவதாக! மேலும் என் இறைவனிடம் உமக்காகப் பிழை பொறுக்கத் தேடுவேன்; நிச்சயமாக அவன் என் மீது கிருபையுடையவனாகவே இருக்கின்றான்” என்று கூறினார்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمْ مِّنَ النَّبِیّٖنَ مِنْ ذُرِّیَّةِ اٰدَمَ ۗ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ ؗ وَّمِنْ ذُرِّیَّةِ اِبْرٰهِیْمَ وَاِسْرَآءِیْلَ ؗ وَمِمَّنْ هَدَیْنَا وَاجْتَبَیْنَا ؕ اِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِیًّا ۟
اُولٰٓىِٕكَஅத்தகையோர்الَّذِیْنَஎவர்கள் என்றால்اَنْعَمَஅருள்புரிந்தானோاللّٰهُஅல்லாஹ்عَلَیْهِمْஅவர்கள் மீதுمِّنَ(அவர்கள்)النَّبِیّٖنَநபிமார்களில்مِنْஉள்ளவர்கள்;ذُرِّیَّةِசந்ததியினரில்اٰدَمَ ۗஆதமின்وَ مِمَّنْமேலும் எவர்களைحَمَلْنَاநாம் சுமந்தோமோمَعَஉடன்نُوْحٍ ؗநூஹ்وَّ مِنْமேலும்ذُرِّیَّةِசந்ததியினரில்اِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اِسْرَآءِیْلَ ؗமற்றும் இஸ்ராயீலின்وَ مِمَّنْமேலும் எவர்களில்هَدَیْنَاநாம் நேர்வழி காட்டினோமோوَ اجْتَبَیْنَا ؕமேலும் நாம் தேர்ந்தெடுத்தோமோاِذَاஎப்போதுتُتْلٰیஓதிக்காட்டப்படுகிறதோعَلَیْهِمْஅவர்களுக்குاٰیٰتُவசனங்கள்الرَّحْمٰنِஅளவற்ற அருளாளனின்خَرُّوْا(அப்போது) அவர்கள் விழுவார்கள்سُجَّدًاசிரம் பணிந்தவர்களாகوَّ بُكِیًّا۩மேலும் அழுதவர்களாக
உலா'இகல் லதீன அன்'அமல் லாஹு 'அலய்ஹிம் மினன் னBபிய்யீன மின் துர்ரிய்யதி ஆதம வ மிம்மன் ஹமல்னா ம'அ னூஹி(ன்)வ் வ மின் துர்ரிய்யதி இBப்ராஹீம வ இஸ்ரா'ஈல வ மிம்மன் ஹதய்னா வஜ்த Bபய்னா; இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுர் ரஹ்மானி கர்ரூ ஸுஜ்ஜத(ன்)வ் வ Bபுகிய்யா
இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள் - இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.
وَلَقَدْ اٰتَیْنَاۤ اِبْرٰهِیْمَ رُشْدَهٗ مِنْ قَبْلُ وَكُنَّا بِهٖ عٰلِمِیْنَ ۟ۚ
وَ لَقَدْநிச்சயமாகاٰتَیْنَاۤநாம் வழங்கினோம்اِبْرٰهِیْمَஇப்ராஹீமுக்குرُشْدَهٗஅவருடைய நேர்வழியைمِنْஇதற்குقَبْلُமுன்னரேوَ كُنَّاமேலும் நாம் இருந்தோம்بِهٖஅவரைப் பற்றிعٰلِمِیْنَۚநன்கறிந்தவர்களாக
வ லகத் ஆதய்னா இBப்ராஹீம ருஷ்தஹூ மின் கBப்லு வ குன்னா Bபிஹீ 'ஆலிமீன்
இன்னும், நாம் முன்னரே இப்ராஹீமுக்கு அவருக்குத் தகுந்த நேர்மையான வழியைத் திடனாக கொடுத்தோம் - அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம்.
قَالَ بَلْ رَّبُّكُمْ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ الَّذِیْ فَطَرَهُنَّ ۖؗ وَاَنَا عَلٰی ذٰلِكُمْ مِّنَ الشّٰهِدِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்بَلْமாறாகرَّبُّكُمْஉங்கள் இறைவன்رَبُّஇறைவன்السَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِமற்றும் பூமியின்الَّذِیْஎவன்فَطَرَهُنَّ ۖؗஅவற்றைப் படைத்தானோوَ اَنَاமேலும் நான்عَلٰیமீதுذٰلِكُمْஅதன்مِّنَஇருந்துالشّٰهِدِیْنَசாட்சியாளர்களில்
கால Bபர் ரBப்Bபுகும் ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளில் லதீ Fபதரஹுன்ன வ அன 'அலா தாலிகும் மினஷ் ஷாஹிதீன்
“அப்படியல்ல. உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்; இதற்குச் சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.
قَالُوْا سَمِعْنَا فَتًی یَّذْكُرُهُمْ یُقَالُ لَهٗۤ اِبْرٰهِیْمُ ۟ؕ
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்سَمِعْنَاநாங்கள் செவியுற்றோம்فَتًیஒரு இளைஞர்یَّذْكُرُهُمْஅவர்களைப் பற்றிப் பேசுவதைیُقَالُகூறப்படும்لَهٗۤஅவருக்குاِبْرٰهِیْمُؕஇப்ராஹீம்
காலூ ஸமிஃனா Fபத(ன்)ய் யத்குருஹும் யுகாலு லஹூ இBப்ராஹீம்
அதற்கு (அவர்களில் சிலர்) “இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்ராஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது” என்று கூறினார்கள்.
قَالُوْۤا ءَاَنْتَ فَعَلْتَ هٰذَا بِاٰلِهَتِنَا یٰۤاِبْرٰهِیْمُ ۟ؕ
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்ءَاَنْتَநீதானாفَعَلْتَசெய்தாய்هٰذَاஇதைبِاٰلِهَتِنَاஎங்கள் தெய்வங்களுக்குیٰۤاِبْرٰهِیْمُؕஇப்ராஹீமே
காலூ 'அ-அன்த Fப'அல்த ஹாதா Bபி ஆலிஹதினா யா இBப்ராஹீம்
இப்ராஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ?” என்று (அவர் வந்ததும்) கேட்டனர்.
اُفٍّ لَّكُمْ وَلِمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟
اُفٍّசீ!لَّكُمْஉங்களுக்கும்وَ لِمَاஇன்னும் எவற்றுக்கும்تَعْبُدُوْنَநீங்கள் வணங்குகிறீர்களோمِنْவிட்டுدُوْنِஅன்றிاللّٰهِ ؕஅல்லாஹ்வைاَفَلَاஅப்படியிருக்க,تَعْقِلُوْنَநீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
உFப்Fபில் லகும் வ லிமா தஃBபுதூன மின் தூனில் லாஹ்; அFபலா தஃகிலூன்
“சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்; நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?” (என்று இப்ராஹீம் கூறினார்).
قُلْنَا یٰنَارُ كُوْنِیْ بَرْدًا وَّسَلٰمًا عَلٰۤی اِبْرٰهِیْمَ ۟ۙ
قُلْنَاநாம் கூறினோம்یٰنَارُநெருப்பேكُوْنِیْஆகிவிடுبَرْدًاகுளிர்ச்சியாகوَّ سَلٰمًاசுகமளிப்பதாகவும்عَلٰۤیமீதுاِبْرٰهِیْمَۙஇப்ராஹீமின்
குல்னா யா னாரு கூனீ Bபர்த(ன்)வ் வ ஸலாமன் 'அலா இBப்ராஹீம்
(இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம்.