இஸ்லாம்
3:19   اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْيًا ۢ بَيْنَهُمْ‌ؕ وَمَنْ يَّكْفُرْ بِاٰيٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ‏
3:19. நிச்சயமாக இஸ்லாம்தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாகவேயன்றி (வேதத்தில்) மாறுபடவில்லை; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கிறாரோ - (அவரைப்பற்றி) நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் துரிதமானவன்.
3:85   وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ‌ ۚ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ‏
3:85. இன்னும், இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக்கொள்ளப்படமாட்டாது; மேலும், அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில்தான் இருப்பார்.
5:3   حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيْرِ وَمَاۤ اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوْذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيْحَةُ وَمَاۤ اَكَلَ السَّبُعُ اِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُ بِحَ عَلَى النُّصُبِ وَاَنْ تَسْتَقْسِمُوْا بِالْاَزْلَامِ‌ ؕ ذٰ لِكُمْ فِسْقٌ‌ ؕ اَلْيَوْمَ يَٮِٕسَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ دِيْـنِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ‌ ؕ اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌ ؕ فَمَنِ اضْطُرَّ فِىْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍ‌ۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏‏
5:3. (தானாக) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவருக்காக அறுக்கப்பட்டதும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழேவிழுந்து செத்ததும், கொம்பால் முட்டப்பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள்மீது விலக்கப்பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து முறைப்படி) அறுத்தீர்களோ அதைத்தவிர; (அதை உண்ணலாம்; அன்றியும், பிற வணக்கம் செய்வதற்காக) சின்னங்கள் வைக்கப்பட்ட இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன); - இவையாவும் (பெரும்) பாவமாகும்; இன்றைய தினம் நிராகரிப்போர் உங்களுடைய மார்க்கத்தை (அழித்துவிடலாம் என்பதை)ப் பற்றி நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்; எனவே, நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; என்னையே அஞ்சுங்கள்; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கிவிட்டேன்; மேலும், உங்கள்மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கிவிட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாமை மார்க்கமாகப் பொருந்திக்கொண்டேன்; ஆனால், உங்களில் எவரேனும் பாவம்செய்யும் நாட்டமின்றி, பசிக்கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட, விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது); நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.
6:125   فَمَنْ يُّرِدِ اللّٰهُ اَنْ يَّهْدِيَهٗ يَشْرَحْ صَدْرَهٗ لِلْاِسْلَامِ‌ۚ وَمَنْ يُّرِدْ اَنْ يُّضِلَّهٗ يَجْعَلْ صَدْرَهٗ ضَيِّقًا حَرَجًا كَاَنَّمَا يَصَّعَّدُ فِى السَّمَآءِ‌ؕ كَذٰلِكَ يَجْعَلُ اللّٰهُ الرِّجْسَ عَلَى الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ‏
6:125. அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்திற்காக (அதனை ஏற்றுக்கொள்வதற்காக) விசாலமாக்குகிறான்; யாரை அவன் வழிதவறச் செய்ய நாடுகிறானோ அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுகின்றவனைப் போல் சிரமத்துடன் கூடிய நெருக்கமானதாக ஆக்கிவிடுகிறான்; இவ்வாறே, நம்பிக்கை கொள்ளாதவர்களின் மீது தண்டனையை அல்லாஹ் ஏற்படுத்துகிறான்.
39:22   اَفَمَنْ شَرَحَ اللّٰهُ صَدْرَهٗ لِلْاِسْلَامِ فَهُوَ عَلٰى نُوْرٍ مِّنْ رَّبِّهٖ‌ؕ فَوَيْلٌ لِّلْقٰسِيَةِ قُلُوْبُهُمْ مِّنْ ذِكْرِ اللّٰهِ‌ؕ اُولٰٓٮِٕكَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏
39:22. அல்லாஹ் எவருடைய இதயத்தை இஸ்லாத்திற்காக விசாலமாக்குகிறானோ, அவர் தம் இறைவனின் ஒளியில் இருக்கிறார்; (ஆனால்,) அல்லாஹ்வுடைய நினைவைவிட்டும் விலகி எவர்களுடைய இதயங்கள் கடினமாகி விட்டனவோ, அவர்களுக்குக் கேடுதான்; இத்தகையோர் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள்.
49:17   يَمُنُّوْنَ عَلَيْكَ اَنْ اَسْلَمُوْا‌ ؕ قُلْ لَّا تَمُنُّوْا عَلَىَّ اِسْلَامَكُمْ‌ ۚ بَلِ اللّٰهُ يَمُنُّ عَلَيْكُمْ اَنْ هَدٰٮكُمْ لِلْاِيْمَانِ اِنْ كُنْـتُمْ صٰدِقِيْنَ‏
49:17. அவர்கள் இஸ்லாம் (மார்க்கத்)தைத் தழுவியதால், உமக்கு உபகாரம் செய்துவிட்டதாகக் கருதுகிறார்கள்; "நீங்கள் இஸ்லாம் (மார்க்கத்)தைத் தழுவியதால் எனக்கு உபகாரம் செய்துவிட்டதாகக் கருதாதீர்கள்! எனினும், நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் உங்களுக்கு நம்பிக்கையின்பால் வழிகாட்டியதால் அல்லாஹ்தான் உங்கள்மீது உபகாரம் செய்திருக்கிறான்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
61:7   وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ الْكَذِبَ وَهُوَ يُدْعٰٓى اِلَى الْاِسْلَامِ‌ ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏
61:7. மேலும், எவன் இஸ்லாத்தின்பால் அழைக்கப்பட்ட நிலையில், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? அன்றியும், அநியாயக்கார சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.