இஹ்ராம் அணிந்தவர்
5:1 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَوْفُوْا بِالْعُقُوْدِ ؕ اُحِلَّتْ لَـكُمْ بَهِيْمَةُ الْاَنْعَامِ اِلَّا مَا يُتْلٰى عَلَيْكُمْ غَيْرَ مُحِلِّى الصَّيْدِ وَاَنْـتُمْ حُرُمٌ ؕ اِنَّ اللّٰهَ يَحْكُمُ مَا يُرِيْدُ
5:1. நம்பிக்கையாளர்களே! (நீங்கள் செய்துகொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள்; உங்கள்மீது ஓதிக்காட்டப்படுகின்றவற்றைத் தவிர (மற்ற ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகள் உங்களுக்கு (உணவிற்காக) ஆகுமாக்கப்பட்டுள்ளன; ஆனால், நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் (அவற்றை) வேட்டையாடுவதை ஆகுமாக்கிக் கொள்ளாதவர்களாக (இருக்கவேண்டும்); நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைக் கட்டளையிடுகிறான்.
5:95 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْتُلُوا الصَّيْدَ وَاَنْـتُمْ حُرُمٌ ؕ وَمَنْ قَتَلَهٗ مِنْكُمْ مُّتَعَمِّدًا فَجَزَآءٌ مِّثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ يَحْكُمُ بِهٖ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ هَدْيًاۢ بٰلِغَ الْـكَعْبَةِ اَوْ كَفَّارَةٌ طَعَامُ مَسٰكِيْنَ اَوْ عَدْلُ ذٰ لِكَ صِيَامًا لِّيَذُوْقَ وَبَالَ اَمْرِهٖ ؕ عَفَا اللّٰهُ عَمَّا سَلَفَ ؕ وَمَنْ عَادَ فَيَنْتَقِمُ اللّٰهُ مِنْهُ ؕ وَاللّٰهُ عَزِيْزٌ ذُو انْتِقَامٍ
5:95. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராமிலிருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்; உங்களில் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்குச் சமமான ஒன்றை ஈடாகக் கொடுக்கவேண்டியது (அதற்கான) தண்டனையாகும்; அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும்; அது கஃபாவை அடைய வேண்டிய பலிப்பிராணியாகும்; அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்; அல்லது (பரிகாரம் அளிக்க ஏதும் இல்லையாயின்) தனது வினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்புகள் நோற்கவேண்டும்; முன்னர் நடந்ததை அல்லாஹ் மன்னித்து விட்டான்; எவர் மீண்டும் (இதைச்) செய்வாரோ அல்லாஹ் அவரைத் தண்டிப்பான்; அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோனாகவும், (குற்றம் செய்வோருக்குத் தக்க) தண்டனை கொடுக்க உரியோனாகவும் இருக்கின்றான்.
5:96 اُحِلَّ لَـكُمْ صَيْدُ الْبَحْرِ وَطَعَامُهٗ مَتَاعًا لَّـكُمْ وَلِلسَّيَّارَةِ ۚ وَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ الْبَـرِّ مَا دُمْتُمْ حُرُمًا ؕ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْۤ اِلَيْهِ تُحْشَرُوْنَ
5:96. உங்களுக்கும் (இதர) பயணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது. ஆனால், நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போதெல்லாம் தரையில் வேட்டையாடுவது உங்கள் மீது தடுக்கப்பட்டுள்ளது; எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.