இறைத்தூதர்கள்
2:61 وَاِذْ قُلْتُمْ يٰمُوْسٰى لَنْ نَّصْبِرَ عَلٰى طَعَامٍ وَّاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ مِنْۢ بَقْلِهَا وَقِثَّـآٮِٕهَا وَفُوْمِهَا وَعَدَسِهَا وَ بَصَلِهَاؕ قَالَ اَتَسْتَبْدِلُوْنَ الَّذِىْ هُوَ اَدْنٰى بِالَّذِىْ هُوَ خَيْرٌؕ اِهْبِطُوْا مِصْرًا فَاِنَّ لَـکُمْ مَّا سَاَلْتُمْؕ وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْکَنَةُ وَبَآءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِؕ ذٰلِكَ بِاَنَّهُمْ كَانُوْا يَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَيَقْتُلُوْنَ النَّبِيّٖنَ بِغَيْرِ الْحَـقِّؕ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّڪَانُوْا يَعْتَدُوْنَ
2:61. இன்னும், "மூஸாவே! ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்கமாட்டோம்; ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித் தருமாறு உம் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்" என்று நீங்கள் கூற, "நல்லதாக எது இருக்கிறதோ, அதற்குப் பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்ள நாடுகிறீர்களா? நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கிவிடுங்கள்; அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்" என்று அவர் கூறினார்; வறுமையும் இழிவும் அவர்கள்மீது சாட்டப்பட்டுவிட்டன; மேலும், அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால், திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலைசெய்து வந்ததும் தான்; இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறுசெய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டே இருந்ததினாலும் ஏற்பட்டது.
2:87 وَ لَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَقَفَّيْنَا مِنْۢ بَعْدِهٖ بِالرُّسُلِ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِؕ اَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰٓى اَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْۚ فَفَرِيْقًا كَذَّبْتُمْ وَفَرِيْقًا تَقْتُلُوْنَ
2:87. மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம்; அவருக்குப் பின் தொடர்ச்சியாகத் தூதர்களை நாம் அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்து, ரூஹுல் குதுஸ் (என்னும் தூய ஆத்மாவான ஜிப்ரீல்) மூலம் அவரை நாம் பலப்படுத்தினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம், நீங்கள் கர்வம் கொள்ளவில்லையா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரைக் கொன்றீர்கள்.
2:91 وَاِذَا قِيْلَ لَهُمْ اٰمِنُوْا بِمَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا نُؤْمِنُ بِمَآ اُنْزِلَ عَلَيْنَا وَيَكْفُرُوْنَ بِمَا وَرَآءَهٗ وَهُوَ الْحَـقُّ مُصَدِّقًا لِّمَا مَعَهُمْؕ قُلْ فَلِمَ تَقْتُلُوْنَ اَنْـــۢبِيَآءَ اللّٰهِ مِنْ قَبْلُ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
2:91. "அல்லாஹ் இறக்கிவைத்ததை (திருக்குர்ஆனை) நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டால், "எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீதுதான் நம்பிக்கை கொள்வோம்" என்று கூறுகிறார்கள்; அதற்குப் பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள்; ஆனால் இதுவோ, (குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்துகின்ற நிலையில் சத்திய(மான வேத)மாக இருக்கிறது; "நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், ஏன் அல்லாஹ்வின் முந்தைய நபிமார்களை நீங்கள் கொலை செய்தீர்கள்?" என்று அவர்களிடம் (நபியே!) நீர் கேட்பீராக!
2:101 وَلَمَّا جَآءَهُمْ رَسُوْلٌ مِّنْ عِنْدِ اللّٰهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ نَبَذَ فَرِيْقٌ مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَۙ کِتٰبَ اللّٰهِ وَرَآءَ ظُهُوْرِهِمْ كَاَنَّهُمْ لَا يَعْلَمُوْنَ
2:101. அவர்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்தபோது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்துவிட்டார்கள்.
2:108 اَمْ تُرِيْدُوْنَ اَنْ تَسْــٴَــلُوْا رَسُوْلَـكُمْ كَمَا سُٮِٕلَ مُوْسٰى مِنْ قَبْلُؕ وَمَنْ يَّتَبَدَّلِ الْکُفْرَ بِالْاِيْمَانِ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِيْلِ
2:108. இதற்கு முன்னர் மூஸாவிடம் (கேள்விகள்) கேட்கப்பட்ட மாதிரி, நீங்களும் உங்கள் தூதரிடம் கேட்க விரும்புகிறீர்களா? எவனொருவன் நம்பிக்கையை நிராகரிப்பைக் கொண்டு மாற்றுகிறானோ அவன் நிச்சயமாக நேர்வழியை விட்டும் தவறிவிட்டான்.
2:129 رَبَّنَا وَابْعَثْ فِيْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَ يُزَكِّيْهِمْؕ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
2:129. "எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுத்து, அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே நீ அனுப்புவாயாக! நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்" (என்றும் பிரார்த்தித்தார்).
2:136 قُوْلُوْٓا اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ اِلَيْنَا وَمَآ اُنْزِلَ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَ الْاَسْبَاطِ وَمَآ اُوْتِىَ مُوْسٰى وَعِيْسٰى وَمَآ اُوْتِىَ النَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْۚ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ
2:136. "நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயில், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும், இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்டமாட்டோம்; இன்னும், நாங்கள் அவனுக்கே வழிப்படுகிறோம்" என்று (நம்பிக்கை கொண்டோரே!) நீங்களும் கூறுங்கள்.
2:143 وَكَذٰلِكَ جَعَلْنٰكُمْ اُمَّةً وَّسَطًا لِّتَکُوْنُوْا شُهَدَآءَ عَلَى النَّاسِ وَيَكُوْنَ الرَّسُوْلُ عَلَيْكُمْ شَهِيْدًا ؕ وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِىْ كُنْتَ عَلَيْهَآ اِلَّا لِنَعْلَمَ مَنْ يَّتَّبِعُ الرَّسُوْلَ مِمَّنْ يَّنْقَلِبُ عَلٰى عَقِبَيْهِ ؕ وَاِنْ كَانَتْ لَكَبِيْرَةً اِلَّا عَلَى الَّذِيْنَ هَدَى اللّٰهُ ؕ وَمَا كَانَ اللّٰهُ لِيُضِيْعَ اِيْمَانَكُمْ ؕ اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِيْمٌ
2:143. இதே முறையில் நாம் உங்களை ஒரு நடுநிலையுள்ள சமுதாயமாக ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் (மற்ற) மனிதர்களுக்குச் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், தூதர் உங்களுக்குச் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்; யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள், யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங்கால்கள்மீது பின்திரும்பிச் செல்கிறார்கள் என்பதை நாம் அறிவிப்பதற்காகவேயன்றி, எதன் மீது (இதுவரை) நீர் இருந்து வந்தீரோ அந்தக் கிப்லாவை நாம் (மாற்றி) அமைக்கவில்லை; இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருக்கிறது; அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை வீணாக்கமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள்மீது கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.
2:151 كَمَآ اَرْسَلْنَا فِيْکُمْ رَسُوْلًا مِّنْکُمْ يَتْلُوْا عَلَيْكُمْ اٰيٰتِنَا وَيُزَكِّيْکُمْ وَيُعَلِّمُکُمُ الْكِتٰبَ وَالْحِکْمَةَ وَيُعَلِّمُكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ ؕۛ
2:151. இதே போன்று, நாம் உங்களிடையே, உங்களிலிருந்தே ஒரு தூதரை நம் வசனங்களை உங்களுக்கு ஓதிக்காண்பிப்பதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும், உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.
2:177 لَيْسَ الْبِرَّ اَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَ الْمَغْرِبِ وَلٰـكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰٓٮِٕکَةِ وَالْكِتٰبِ وَالنَّبِيّٖنَۚ وَاٰتَى الْمَالَ عَلٰى حُبِّهٖ ذَوِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنَ وَابْنَ السَّبِيْلِۙ وَالسَّآٮِٕلِيْنَ وَفِى الرِّقَابِۚ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّکٰوةَ ۚ وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عٰهَدُوْا ۚ وَالصّٰبِرِيْنَ فِى الْبَاْسَآءِ وَالضَّرَّآءِ وَحِيْنَ الْبَاْسِؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ صَدَقُوْا ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ
2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால், புண்ணியம் உடையவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாளின் மீதும், வானவர்கள் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் நம்பிக்கை கொண்டு, செல்வத்தைத் தம் விருப்பத்தின் மீது உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் யாசிப்பவர்களுக்கும், அடிமைகளின் மீட்புக்காகக் கொடுத்தவரும்; இன்னும், தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தையும் கொடுத்து, இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், பொறுமையுடன் இருந்தவர்களுமாவர்; அத்தகையோர்தாம் உண்மையாளர்கள்; இன்னும், அவர்கள்தாம் (இறைவனை) அஞ்சியவர்கள்.
2:213 كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً فَبَعَثَ اللّٰهُ النَّبِيّٖنَ مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَـقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيْمَا اخْتَلَفُوْا فِيْهِ ؕ وَمَا اخْتَلَفَ فِيْهِ اِلَّا الَّذِيْنَ اُوْتُوْهُ مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ بَغْيًا ۢ بَيْنَهُمْۚ فَهَدَى اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِيْهِ مِنَ الْحَـقِّ بِاِذْنِهٖ ؕ وَاللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
2:213. (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; பிறகு (நன்மை செய்வோருக்கு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீமை செய்வோருக்கு) அச்சமூட்டி எச்சரிப்போராகவும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும், அ(வ்வேதத்)தைக் கொடுக்கப்பட்டவர்களே அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும், உண்மையிலிருந்து எதில் அவர்கள் மாறுபட்டிருந்தார்களோ, அதன் பக்கம் தன் அருளினால் அல்லாஹ் நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்.
2:214 اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَـنَّةَ وَ لَمَّا يَاْتِكُمْ مَّثَلُ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْؕ مَسَّتْهُمُ الْبَاْسَآءُ وَالضَّرَّآءُ وَزُلْزِلُوْا حَتّٰى يَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ مَتٰى نَصْرُ اللّٰهِؕ اَلَاۤ اِنَّ نَصْرَ اللّٰهِ قَرِيْبٌ
2:214. உங்களுக்கு முன்னே சென்றவர்களுக்கு ஏற்பட்டதுபோல் (சோதனைகள்), உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தில் நீங்கள் நுழைந்துவிடலாம் என்று எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; "அல்லாஹ்வின் உதவி எப்பொழுது (வரும்)?" என்று தூதரும், அவரோடு நம்பிக்கை கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; அறிந்து கொள்ளுங்கள்! "நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது" (என்று நாம் ஆறுதல் கூறினோம்).
2:246 اَلَمْ تَرَ اِلَى الْمَلَاِ مِنْۢ بَنِىْٓ اِسْرَآءِيْلَ مِنْۢ بَعْدِ مُوْسٰىۘ اِذْ قَالُوْا لِنَبِىٍّ لَّهُمُ ابْعَثْ لَنَا مَلِکًا نُّقَاتِلْ فِىْ سَبِيْلِ اللّٰهِؕ قَالَ هَلْ عَسَيْتُمْ اِنْ کُتِبَ عَلَيْکُمُ الْقِتَالُ اَلَّا تُقَاتِلُوْا ؕ قَالُوْا وَمَا لَنَآ اَلَّا نُقَاتِلَ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَقَدْ اُخْرِجْنَا مِنْ دِيَارِنَا وَاَبْنَآٮِٕنَا ؕ فَلَمَّا کُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ تَوَلَّوْا اِلَّا قَلِيْلًا مِّنْهُمْؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِالظّٰلِمِيْنَ
2:246. (நபியே!) மூஸாவுக்குப் பின் இஸ்ராயீல்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம், "நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை அனுப்புங்கள" என்று கூறியபொழுது அவர், "போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப்பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்து விடலாம் அல்லவா?" என்று கேட்டார்; அதற்கவர்கள், "எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?" எனக் கூறினார்கள்; பின்னர், அவர்கள் மீது போர் கடமையாக்கப்பட்டபோது அவர்களில் ஒரு சிலரைத் தவிர (மற்றெல்லோரும்), புறமுதுகுக் காட்டி(த் திரும்பி) விட்டனர் - (இவ்வாறு) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.
2:247 وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ اِنَّ اللّٰهَ قَدْ بَعَثَ لَـکُمْ طَالُوْتَ مَلِكًا ؕ قَالُوْٓا اَنّٰى يَكُوْنُ لَهُ الْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ اَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِّنَ الْمَالِؕ قَالَ اِنَّ اللّٰهَ اصْطَفٰٮهُ عَلَيْکُمْ وَزَادَهٗ بَسْطَةً فِى الْعِلْمِ وَ الْجِسْمِؕ وَاللّٰهُ يُؤْتِىْ مُلْکَهٗ مَنْ يَّشَآءُ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ
2:247. அவர்களுடைய நபி அவர்களிடம், "நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்" என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், "எங்கள் மீது அவருக்கு எவ்வாறு ஆட்சியுரிமை ஏற்படும்? ஆட்சிக்கு அவரைவிட நாங்கள்தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!" என்று கூறினார்கள்; அதற்கவர், "நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும் அறிவிலும், உடலி(ன் வலிமையி)லும் விசாலத்தை அதிகமாக்கியுள்ளான்; அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தையும் வழங்குவான்; இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன், (யாவற்றையும்) நன்கறிபவன்" என்று கூறினார்.
2:248 وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ اِنَّ اٰيَةَ مُلْکِهٖۤ اَنْ يَّاْتِيَکُمُ التَّابُوْتُ فِيْهِ سَکِيْنَةٌ مِّنْ رَّبِّکُمْ وَبَقِيَّةٌ مِّمَّا تَرَكَ اٰلُ مُوْسٰى وَاٰلُ هٰرُوْنَ تَحْمِلُهُ الْمَلٰٓٮِٕكَةُ ؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيَةً لَّـکُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
2:248. இன்னும், அவர்களுடைய நபி அவர்களிடம், "நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு பேழை வரும்; அதில் உங்களுக்கு, உங்கள் இறைவனிடம் இருந்து அமைதியும், இன்னும் மூஸாவின் சந்ததியினரும், ஹாரூனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும்; அதை மலக்குகள் (வானவர்கள்) சுமந்து வருவார்கள்; நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது" என்று கூறினார்.
2:275 اَلَّذِيْنَ يَاْكُلُوْنَ الرِّبٰوا لَا يَقُوْمُوْنَ اِلَّا كَمَا يَقُوْمُ الَّذِىْ يَتَخَبَّطُهُ الشَّيْطٰنُ مِنَ الْمَسِّؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبٰوا ۘ وَاَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰوا ؕ فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰى فَلَهٗ مَا سَلَفَؕ وَاَمْرُهٗۤ اِلَى اللّٰهِؕ وَمَنْ عَادَ فَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
2:275. எவர்கள் வட்டியை உண்ணுகிறார்களோ, அவர்கள் - ஷைத்தான் தீண்டியதால் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறு விதமாய்) மறுமைநாளில் எழமாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், "நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே!" என்று கூறியதினாலேயாகும்; அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து, வட்டியைத் தடை செய்திருக்கிறான்; ஆயினும், யார் தன் இறைவனிடமிருந்து அறிவுரை வந்தபின் (அதை விட்டும்) விலகிவிடுகிறாரோ, அவருக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவருடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால், யார் (அறிவுரை வந்த பின்னர் இப்பாவத்தின்பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
2:285 اٰمَنَ الرَّسُوْلُ بِمَاۤ اُنْزِلَ اِلَيْهِ مِنْ رَّبِّهٖ وَ الْمُؤْمِنُوْنَؕ كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْ رُّسُلِهٖ وَقَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ
2:285. (நம்) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்புகிறார்: (அவ்வாறே) நம்பிக்கையாளர்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர் (மலக்கு)களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்; "அவனது தூதர்களில் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமை காண்பிக்கமாட்டோம்" (என்றும்); "இன்னும், நாங்கள் செவிமடுத்தோம்; நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடம் மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள்.
3:21 اِنَّ الَّذِيْنَ يَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَيَقْتُلُوْنَ النَّبِيّٖنَ بِغَيْرِ حَقٍّۙ وَّيَقْتُلُوْنَ الَّذِيْنَ يَاْمُرُوْنَ بِالْقِسْطِ مِنَ النَّاسِۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَ لِيْمٍ
3:21. "நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும், உரிமையின்றி நபிமார்களைக் கொலைசெய்து கொண்டும், மனிதர்களிலிருந்து நீதியைக்கொண்டு ஏவுவோரைக் கொலை செய்துகொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு நோவினைமிக்க வேதனையுண்டு" என்று (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!
3:23 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ اُوْتُوْا نَصِيْبًا مِّنَ الْكِتٰبِ يُدْعَوْنَ اِلٰى كِتٰبِ اللّٰهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ ثُمَّ يَتَوَلّٰى فَرِيْقٌ مِّنْهُمْ وَهُمْ مُّعْرِضُوْنَ
3:23. வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்(களான யூதர்)களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களிடையே (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றி) அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்படுகின்றனர்; ஆனால், அவர்களில் ஒரு பிரிவினர் (இதைப்) புறக்கணித்தவர்களாகத் திரும்பிச் செல்கின்றனர்.
3:32 قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ ۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْكٰفِرِيْنَ
3:32. (நபியே! இன்னும்) நீர் கூறும்: "அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்;" ஆனால், அவர்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை நேசிப்பதில்லை.
3:39 فَنَادَتْهُ الْمَلٰٓٮِٕكَةُ وَهُوَ قَآٮِٕمٌ يُّصَلِّىْ فِى الْمِحْرَابِۙ اَنَّ اللّٰهَ يُبَشِّرُكَ بِيَحْيٰى مُصَدِّقًۢا بِكَلِمَةٍ مِّنَ اللّٰهِ وَسَيِّدًا وَّحَصُوْرًا وَّنَبِيًّا مِّنَ الصّٰلِحِيْنَ
3:39. அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, வானவர் (மலக்கு)கள் அவரை சப்தமாக அழைத்து: "நிச்சயமாக அல்லாஹ் 'யஹ்யா' (எனும் மக)வைக் கொண்டு உமக்கு நன்மாராயம் கூறுகிறான்: அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை(க் கொண்டு உண்டாகக்கூடிய ஈஸா நபியை - முன்னறிக்கையாக) மெய்ப்பிப்பவராகவும், தலைவராகவும், ஒழுக்கநெறி பேணியவராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்" எனக் கூறினர்.
3:49 وَرَسُوْلًا اِلٰى بَنِىْۤ اِسْرٰٓءِيْلَ ۙ اَنِّىْ قَدْ جِئْتُكُمْ بِاٰيَةٍ مِّنْ رَّبِّكُمْ ۙۚ اَنِّىْۤ اَخْلُقُ لَـكُمْ مِّنَ الطِّيْنِ كَهَیْــٴَــةِ الطَّيْرِ فَاَنْفُخُ فِيْهِ فَيَكُوْنُ طَيْرًاۢ بِاِذْنِ اللّٰهِۚ وَاُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ وَاُحْىِ الْمَوْتٰى بِاِذْنِ اللّٰهِۚ وَ اُنَبِّئُكُمْ بِمَا تَاْكُلُوْنَ وَمَا تَدَّخِرُوْنَۙ فِىْ بُيُوْتِكُمْؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لَّـكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَۚ
3:49. இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் அவர்களிடம், அவர்:) "நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தைப்போல் உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக்கொண்டு (உயிருடைய) பறவையாகி விடும்; அல்லாஹ்வின் அனுமதியைக்கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டரோகியையும் குணப்படுத்துவேன்; இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேமித்துவைப்பவற்றையும் நான் உங்களுக்கு எடுத்துக்கூறுவேன்; நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் (திடமான) ஓர் அத்தாட்சி இருக்கிறது" (என்று கூறினார்).
3:68 اِنَّ اَوْلَى النَّاسِ بِاِبْرٰهِيْمَ لَـلَّذِيْنَ اتَّبَعُوْهُ وَهٰذَا النَّبِىُّ وَالَّذِيْنَ اٰمَنُوْا ؕ وَاللّٰهُ وَلِىُّ الْمُؤْمِنِيْنَ
3:68. நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும் (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) நம்பிக்கை கொண்டோருமே ஆவர். மேலும், அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்.
3:80 وَلَا يَاْمُرَكُمْ اَنْ تَتَّخِذُوا الْمَلٰٓٮِٕكَةَ وَالنَّبِيّٖنَ اَرْبَابًا ؕ اَيَاْمُرُكُمْ بِالْكُفْرِ بَعْدَ اِذْ اَنْـتُمْ مُّسْلِمُوْنَ
3:80. மேலும் அவர், ''வானவர்களையும், நபிமார்களையும் கடவுளர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள்'' என்றும் உங்களுக்குக் கட்டளையிடமாட்டார் - நீங்கள் முஸ்லிம்களாக ஆகிவிட்ட பின்னர் (ஏக இறைவனை) நிராகரிக்கும்படி அவர் உங்களுக்குக் கட்டளையிடுவாரா?
3:81 وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ النَّبِيّٖنَ لَمَاۤ اٰتَيْتُكُمْ مِّنْ كِتٰبٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَآءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَـتُؤْمِنُنَّ بِهٖ وَلَـتَـنْصُرُنَّهٗ ؕ قَالَ ءَاَقْرَرْتُمْ وَاَخَذْتُمْ عَلٰى ذٰ لِكُمْ اِصْرِىْؕ قَالُوْۤا اَقْرَرْنَا ؕ قَالَ فَاشْهَدُوْا وَاَنَا مَعَكُمْ مِّنَ الشّٰهِدِيْنَ
3:81. இன்னும், (நினைவுகூருங்கள்;) நபிமார்களிடம் உறுதிமொழி வாங்கியபோது, "நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன்; பின்னர், உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் தூதர் வருவார்; நீங்கள் அவர்மீது திடமாக நம்பிக்கை கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக!" (எனக் கூறினான்): "நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்கிறீர்களா?" என்றும் கேட்டான்; "நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்" என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) "நீங்கள் சாட்சியாக இருங்கள்; நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்" என்று கூறினான்.
3:84 قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ عَلَيْنَا وَمَاۤ اُنْزِلَ عَلٰٓى اِبْرٰهِيْمَ وَ اِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِىَ مُوْسٰى وَ عِيْسٰى وَالنَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ
3:84. "அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், (அவர்களின்) சந்ததியர் ஆகியோர் மீது அருளப்பட்டதையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும், (மற்ற) நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நாங்கள் விசுவாசம் கொள்கிறோம்; அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
3:86 كَيْفَ يَهْدِى اللّٰهُ قَوْمًا كَفَرُوْا بَعْدَ اِيْمَانِهِمْ وَشَهِدُوْۤا اَنَّ الرَّسُوْلَ حَقٌّ وَّجَآءَهُمُ الْبَيِّنٰتُؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ
3:86. தங்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து 'நிச்சயமாக இந்தத் தூதர் (முஹம்மது) உண்மையாளர்தான்!' என்று சாட்சியம் கூறி நம்பிக்கை கொண்ட பிறகு, நிராகரித்துவிட்ட கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்? அல்லாஹ் அநியாயக்காரக் கூட்டத்திற்கு நேர்வழி காட்டமாட்டான்.
3:101 وَكَيْفَ تَكْفُرُوْنَ وَاَنْـتُمْ تُتْلٰى عَلَيْكُمْ اٰيٰتُ اللّٰهِ وَفِيْكُمْ رَسُوْلُهٗ ؕ وَمَنْ يَّعْتَصِمْ بِاللّٰهِ فَقَدْ هُدِىَ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
3:101. மேலும், அல்லாஹ்வின் வசனங்கள் உங்களுக்கு ஓதிக்காட்டப்படும் நிலையிலும், அவனுடைய தூதர் (முஹம்மது) உங்களுக்கு மத்தியில் இருக்கும் நிலையிலும் நீங்கள் எவ்வாறு நிராகரிப்பீர்கள்? மேலும், எவர் அல்லாஹ்வை (அவன் மார்க்கத்தை) வலுவாகப் பற்றிக் கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக நேர்வழியில் செலுத்தப்பட்டுவிட்டார்.
3:112 ضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ اَيْنَ مَا ثُقِفُوْۤا اِلَّا بِحَبْلٍ مِّنَ اللّٰهِ وَحَبْلٍ مِّنَ النَّاسِ وَبَآءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَضُرِبَتْ عَلَيْهِمُ الْمَسْكَنَةُ ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ كَانُوْا يَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَيَقْتُلُوْنَ الْاَنْۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّؕ ذٰ لِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ
3:112. அவர்கள் எங்கிருப்பினும் அவர்கள்மீது இழிவு விதிக்கப்பட்டுள்ளது; அல்லாஹ்வின் ஒப்பந்தத்தைக் கொண்டும், மனிதர்களின் ஒப்பந்தத்தைக் கொண்டுமேயன்றி (அவர்கள் தப்ப முடியாது); அல்லாஹ்வின் கோபத்திற்கு அவர்கள் ஆளானார்கள்; ஏழ்மையும் அவர்கள்மீது விதிக்கப்பட்டுவிட்டது; இது ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும், உரிமையின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும் இருந்தார்கள்; இன்னும், அவர்கள் பாவம் செய்து கொண்டும், வரம்பு மீறிக் கொண்டும் இருந்ததுதான் (காரணமாகும்).
3:132 وَاَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَۚ
3:132. அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; நீங்கள் இதனால் கிருபை செய்யப்படுவீர்கள்.
3:144 وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ ۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُؕ اَفَا۟ٮِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْؕ وَمَنْ يَّنْقَلِبْ عَلٰى عَقِبَيْهِ فَلَنْ يَّضُرَّ اللّٰهَ شَيْئًا ؕ وَسَيَجْزِى اللّٰهُ الشّٰكِرِيْنَ
3:144. முஹம்மது, தூதரே அன்றி (வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் சென்றுவிட்டார்கள்; அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால், நீங்கள் உங்கள் குதிங்காலின் மீது (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும், தம் குதிங்கால்கள் மீது (புறங்காட்டித்) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்து விட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் (நற்)கூலியை வழங்குவான்.
3:146 وَكَاَيِّنْ مِّنْ نَّبِىٍّ قٰتَلَ ۙ مَعَهٗ رِبِّيُّوْنَ كَثِيْرٌ ۚ فَمَا وَهَنُوْا لِمَاۤ اَصَابَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَمَا ضَعُفُوْا وَمَا اسْتَكَانُوْا ؕ وَاللّٰهُ يُحِبُّ الصّٰبِرِيْنَ
3:146. மேலும், எத்தனையோ நபிமார்கள் - அவர்களுடன் அல்லாஹ்வின் நல்லடியார்கள் பெருமளவில் சேர்ந்து போர் செய்தனர்; எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்)திற்காக அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை; பலவீனம் அடைந்துவிடவுமில்லை; (எதிரிகளுக்குப்) பணிந்துவிடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.
3:164 لَقَدْ مَنَّ اللّٰهُ عَلَى الْمُؤْمِنِيْنَ اِذْ بَعَثَ فِيْهِمْ رَسُوْلًا مِّنْ اَنْفُسِهِمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ ۚ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ
3:164. நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு அருள்புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி வைத்தான்; அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கிறார்; இன்னும், அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்; மேலும், அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுக்கின்றார் - அவர்களோ, நிச்சயமாக இதற்குமுன் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.
3:172 اَلَّذِيْنَ اسْتَجَابُوْا لِلّٰهِ وَالرَّسُوْلِ مِنْۢ بَعْدِ مَاۤ اَصَابَهُمُ الْقَرْحُ ۛؕ لِلَّذِيْنَ اَحْسَنُوْا مِنْهُمْ وَاتَّقَوْا اَجْرٌ عَظِيْمٌۚ
3:172. அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுக்கு (போரில்) காயம் ஏற்பட்ட பின்னரும் அல்லாஹ் மற்றும் (அவனுடைய) தூதருடைய அழைப்பை ஏற்று (மீண்டும் போருக்குச் சென்று) அவர்களிலிருந்து நன்மை செய்து (அல்லாஹ்வை) அஞ்சியோருக்கு மகத்தான (நற்) கூலி இருக்கிறது.
3:181 لَقَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ فَقِيْرٌ وَّنَحْنُ اَغْنِيَآءُ ۘ سَنَكْتُبُ مَا قَالُوْا وَقَتْلَهُمُ الْاَنْۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّ ۙۚ وَّنَقُوْلُ ذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ
3:181. "நிச்சயமாக அல்லாஹ் ஏழை; நாங்கள்தான் செல்வந்தர்கள்" என்று கூறியவர்களின் சொல்லை திட்டமாக அல்லாஹ் கேட்டுக்கொண்டான்; (இவ்வாறு) அவர்கள் சொன்னதையும், அநியாயமாக நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவுசெய்து கொள்வோம்; "சுட்டெரிக்கும் (நரக நெருப்பின்) வேதனையைச் சுவையுங்கள்" என்று (அவர்களிடம் மறுமையில்) நாம் கூறுவோம்.
3:183 اَلَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ عَهِدَ اِلَيْنَاۤ اَلَّا نُؤْمِنَ لِرَسُوْلٍ حَتّٰى يَاْتِيَنَا بِقُرْبَانٍ تَاْكُلُهُ النَّارُؕ قُلْ قَدْ جَآءَكُمْ رُسُلٌ مِّنْ قَبْلِىْ بِالْبَيِّنٰتِ وَبِالَّذِىْ قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوْهُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
3:183. மேலும், அவர்கள் "எந்தத் தூதராக இருந்தாலும், அவர் எங்களிடம் ஒரு காணிக்கையைக் கொண்டு வந்து, அதை நெருப்பு சாப்பிடும் (வதை நமக்குக் காண்பிக்கும்) வரை அவர் மீது நாங்கள் விசுவாசம் கொள்ள வேண்டாம் என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்" என்று கூறுகிறார்கள்; (நபியே!) "எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும் இன்னும், நீங்கள் கேட்டுக்கொண்டதையும் திட்டமாகக் கொண்டு வந்தார்கள்; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்?" என்று நீர் கேட்பீராக!
4:13 تِلْكَ حُدُوْدُ اللّٰهِ ؕ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ يُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا ؕ وَذٰ لِكَ الْفَوْزُ الْعَظِيْمُ
4:13. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும்; எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்ப்படிகிறாரோ அவரை சுவனபதிகளில் அவன் பிரவேசிக்கச் செய்வான்; அதன் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்; இது மகத்தான வெற்றியாகும்.
4:42 يَوْمَٮِٕذٍ يَّوَدُّ الَّذِيْنَ كَفَرُوْا وَعَصَوُا الرَّسُوْلَ لَوْ تُسَوّٰى بِهِمُ الْاَرْضُ ؕ وَلَا يَكْتُمُوْنَ اللّٰهَ حَدِيْـثًا
4:42. அந்த நாளில், (அல்லாஹ்வை) நிராகரித்து, (அல்லாஹ்வின்) தூதருக்கும் மாறு செய்தவர்கள், பூமி தங்களுடன் சமமாக்கப்பட்டிருக்க வேண்டுமே! என்று விரும்புவார்கள்; ஆனால், அல்லாஹ்விடத்தில் எந்த விஷயத்தையும் அவர்கள் மறைக்க முடியாது.
4:59 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْۚ فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْـتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَـوْمِ الْاٰخِرِ ؕ ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا
4:59. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள்; இன்னும், (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேரிய) அதிகாரம் உடையவர்களுக்கும் கட்டுப்படுங்கள்; ஏதாவது ஒரு விஷயத்தில் நீங்கள் பிணங்கிக்கொண்டால் - (மெய்யாகவே) அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும் (அவன்) தூதரிடமும் திருப்பி விடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகச் சிறந்ததாகவும், அழகான முடிவாகவும் இருக்கும்.
4:61 وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰى مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَى الرَّسُوْلِ رَاَيْتَ الْمُنٰفِقِيْنَ يَصُدُّوْنَ عَنْكَ صُدُوْدًا ۚ
4:61. மேலும், அவர்களிடம் "அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும் (அவனுடைய) தூதரின் பக்கமும் (தீர்ப்புப் பெற) வாருங்கள்" என்று கூறப்பட்டால், அந்த நயவஞ்சகர்களை - அவர்கள் உம்மை முற்றிலும் புறக்கணித்து விடுவதையே காண்பீர்.
4:64 وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا لِـيُـطَاعَ بِاِذْنِ اللّٰهِ ؕ وَلَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْۤا اَنْفُسَهُمْ جَآءُوْكَ فَاسْتَغْفَرُوا اللّٰهَ وَاسْتَغْفَرَ لَـهُمُ الرَّسُوْلُ لَوَجَدُوا اللّٰهَ تَوَّابًا رَّحِيْمًا
4:64. அல்லாஹ்வின் கட்டளைப்படி அவர் பின்பற்றப்படுவதற்காகவே அன்றி, (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை; ஆகவே, அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்துகொண்ட நேரம், உம்மிடம் வந்து பின்னர், அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரி, அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூத(ராகிய நீ)ரும் மன்னிப்புக் கேட்டிருந்தால், அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.
4:69 وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓٮِٕكَ مَعَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِيْنَ ۚ وَحَسُنَ اُولٰٓٮِٕكَ رَفِيْقًا ؕ
4:69. யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்ப்படிகிறார்களோ, அவர்கள் அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள், நல்லவர்களுடன் இருப்பார்கள்; இவர்கள்தாம் மிக அழகான தோழர்கள் ஆவார்கள்.
4:79 مَاۤ اَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللّٰهِ وَمَاۤ اَصَابَكَ مِنْ سَيِّئَةٍ فَمِنْ نَّـفْسِكَ ؕ وَاَرْسَلْنٰكَ لِلنَّاسِ رَسُوْلًا ؕ وَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًا
4:79. "உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது; இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால்தான் (ஏற்பட்டது). நபியே! நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக்கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம்! (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்."
4:80 مَنْ يُّطِعِ الرَّسُوْلَ فَقَدْ اَطَاعَ اللّٰهَ ۚ وَمَنْ تَوَلّٰى فَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَيْهِمْ حَفِيْظًا ؕ
4:80. எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்ப்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிகிறார்; எவர் (இவ்வாறு கீழ்ப்படிவதை) புறக்கணித்தால் (அதற்காக நீர் வருந்த வேண்டியதில்லை; ஏனெனில்,) உம்மை அவர்களின் மீது கண்காணிப்பவராக நாம் அனுப்பவில்லை.
4:83 وَاِذَا جَآءَهُمْ اَمْرٌ مِّنَ الْاَمْنِ اَوِ الْخَـوْفِ اَذَاعُوْا بِهٖ ۚ وَلَوْ رَدُّوْهُ اِلَى الرَّسُوْلِ وَاِلٰٓى اُولِى الْاَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِيْنَ يَسْتَنْۢبِطُوْنَهٗ مِنْهُمْؕ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ لَاتَّبَعْتُمُ الشَّيْطٰنَ اِلَّا قَلِيْلًا
4:83. மேலும், பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய ஏதேனும் ஒரு செய்தி அவர்களுக்கு எட்டுமானால் உடனே, அவர்கள் அதைப் பரப்பிவிடுகிறார்கள்; அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமும் அவர்களில் அதிகாரமுடையவர்களிடமும் தெரிவித்திருந்தால், அவர்களிலிருந்து அதை ஆய்வு செய்பவர்கள் அதனை (நன்கு) அறிந்து கொள்வார்கள்; அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் உங்கள் மீதில்லாதிருந்தால், (உங்களில்) சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றி இருப்பீர்கள்.
4:115 وَمَنْ يُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَـهُ الْهُدٰى وَ يَـتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰى وَنُصْلِهٖ جَهَـنَّمَ ؕ وَسَآءَتْ مَصِيْرًا
4:115. எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதருக்கு மாறுசெய்து நம்பிக்கையாளர்களின் வழியல்லாத (வேறுவழியான)தைப் பின்பற்றுகின்றானோ அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே விட்டுவிடுவோம்; மேலும், நரகத்திலும் அவனை நுழையச்செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.
4:155 فَبِمَا نَقْضِهِمْ مِّيْثَاقَهُمْ وَكُفْرِهِمْ بِاٰيٰتِ اللّٰهِ وَقَتْلِهِمُ الْاَنْۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّ وَّقَوْلِهِمْ قُلُوْبُنَا غُلْفٌ ؕ بَلْ طَبَعَ اللّٰهُ عَلَيْهَا بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُوْنَ اِلَّا قَلِيْلًا
4:155. அவர்களுடைய வாக்குறுதியை அவர்கள் மீறியதாலும், அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்துவிட்டதாலும், நியாயமின்றி அவர்கள் நபிமார்களைக் கொலை செய்ததாலும், "எங்கள் இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன" (எனவே, எந்த உபதேசமும் அங்கே செல்லாது) என்று அவர்கள் கூறியதாலும் (அல்லாஹ் அவர்களை சபித்துவிட்டான்); மாறாக, அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் அவற்றின் மீது முத்திரையிட்டுவிட்டான்; ஆகவே, அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
4:157 وَّقَوْلِهِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِيْحَ عِيْسَى ابْنَ مَرْيَمَ رَسُوْلَ اللّٰهِ ۚ وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ وَلٰـكِنْ شُبِّهَ لَهُمْ ؕ وَاِنَّ الَّذِيْنَ اخْتَلَـفُوْا فِيْهِ لَفِىْ شَكٍّ مِّنْهُ ؕ مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ ۚ وَمَا قَتَلُوْهُ يَقِيْنًا ۢ ۙ
4:157. இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரர் ஈஸா மஸீஹை நாங்கள் கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை; அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை; ஆனால், அவர்களுக்கு (அவரைப்போன்ற) ஒருவர் ஒப்பாக்கப்பட்டார்; மேலும், இ(வ்விஷயத்)தில் அபிப்பிராயபேதம் கொண்டவர்கள் அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள்; வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; மேலும், உறுதியாக அவர்கள் அவரைக் கொல்லவே இல்லை.
4:163 اِنَّاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ كَمَاۤ اَوْحَيْنَاۤ اِلٰى نُوْحٍ وَّالنَّبِيّٖنَ مِنْۢ بَعْدِهٖ ۚ وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِيْسٰى وَاَيُّوْبَ وَيُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَيْمٰنَ ۚ وَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا ۚ
4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம்; மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயிலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவருடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும், நாம் தாவூதுக்கு ஜபூர் (என்னும்) வேதத்தைக் கொடுத்தோம்.
4:170 يٰۤـاَيُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمُ الرَّسُوْلُ بِالْحَـقِّ مِنْ رَّبِّكُمْ فَاٰمِنُوْا خَيْرًا لَّـكُمْ ؕ وَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا
4:170. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்) தூதர் உங்களிடம் வந்துள்ளார்; (அவர் மீது) நம்பிக்கை கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால், நீங்கள் நிராகரிப்பீர்களானால் (இறைவனுக்கு எதுவும் குறைந்துவிடாது; ஏனெனில்,) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானமிக்கோனும் ஆவான்.
5:15 يٰۤـاَهْلَ الْكِتٰبِ قَدْ جَآءَكُمْ رَسُوْلُـنَا يُبَيِّنُ لَـكُمْ كَثِيْرًا مِّمَّا كُنْتُمْ تُخْفُوْنَ مِنَ الْكِتٰبِ وَيَعْفُوْا عَنْ كَثِيْرٍ ؕ قَدْ جَآءَكُمْ مِّنَ اللّٰهِ نُوْرٌ وَّكِتٰبٌ مُّبِيْنٌ ۙ
5:15. வேதமுடையவர்களே! மெய்யாகவே உங்களிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார்; வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக்கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக்காட்டுவார்; இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார்; நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து ஒளியும், தெளிவுமுள்ள (குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.
5:19 يٰۤـاَهْلَ الْـكِتٰبِ قَدْ جَآءَكُمْ رَسُوْلُـنَا يُبَيِّنُ لَـكُمْ عَلٰى فَتْرَةٍ مِّنَ الرُّسُلِ اَنْ تَقُوْلُوْا مَا جَآءَنَا مِنْۢ بَشِيْرٍ وَّلَا نَذِيْرٍ فَقَدْ جَآءَكُمْ بَشِيْرٌ وَّنَذِيْرٌؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
5:19. வேதமுடையவர்களே! நிச்சயமாக (ஈஸாவுக்குப் பின் இதுவரையிலும்) தூதர்கள் வராது இடைப்பட்டிருந்த காலத்தில், "நன்மாராயம் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் ஆகிய எவரும் எங்களிடம் வரவேயில்லையே" என நீங்கள் கூறாதிருக்கும்பொருட்டு இப்பொழுது உங்களுக்கு (மார்க்கத்தைத்) தெளிவாக எடுத்துக் கூற, நம் தூதர் உங்களிடம் வந்துள்ளார்; எனவே, நன்மாராயம் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் உங்களிடம் நிச்சயமாக வந்துவிட்டார்; இன்னும், அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் வல்லமையுடையவனாக இருக்கின்றான்.
5:20 وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ جَعَلَ فِيْكُمْ اَنْۢـبِيَآءَ وَجَعَلَـكُمْ مُّلُوْكًا ۖ وَّاٰتٰٮكُمْ مَّا لَمْ يُؤْتِ اَحَدًا مِّنَ الْعٰلَمِيْنَ
5:20. அன்றி மூஸா தம் சமூகத்தாரை நோக்கி, "என் சமூகத்தாரே! அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; அவன் உங்களிடையே நபிமார்களை ஏற்படுத்தி உங்களை அரசர்களாகவும் ஆக்கினான்; உலக மக்களில் வேறு யாருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்தான்" என்று கூறியதை (நபியே! இவர்களுக்கு) நினைவுகூரும்.
5:41 يٰۤـاَيُّهَا الرَّسُوْلُ لَا يَحْزُنْكَ الَّذِيْنَ يُسَارِعُوْنَ فِى الْكُفْرِ مِنَ الَّذِيْنَ قَالُوْۤا اٰمَنَّا بِاَ فْوَاهِهِمْ وَلَمْ تُؤْمِنْ قُلُوْبُهُمْ ۛۚ وَمِنَ الَّذِيْنَ هَادُوْا ۛۚ سَمّٰعُوْنَ لِلْكَذِبِ سَمّٰعُوْنَ لِقَوْمٍ اٰخَرِيْنَۙ لَمْ يَاْتُوْكَؕ يُحَرِّفُوْنَ الْـكَلِمَ مِنْۢ بَعْدِ مَوَاضِعِهٖۚ يَقُوْلُوْنَ اِنْ اُوْتِيْتُمْ هٰذَا فَخُذُوْهُ وَاِنْ لَّمْ تُؤْتَوْهُ فَاحْذَرُوْا ؕ وَمَنْ يُّرِدِ اللّٰهُ فِتْنَـتَهٗ فَلَنْ تَمْلِكَ لَهٗ مِنَ اللّٰهِ شَيْــٴًـــاؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ لَمْ يُرِدِ اللّٰهُ اَنْ يُّطَهِّرَ قُلُوْبَهُمْ ؕ لَهُمْ فِىْ الدُّنْيَا خِزْىٌ ۚۖ وَّلَهُمْ فِىْ الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ
5:41. (நம்முடைய) தூதரே! அவர்களது இதயங்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க, தங்களது வாய்களினால், 'நம்பிக்கை கொண்டோம்!' என்று கூறியோர் குறித்தும், இன்னும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைக் குறித்தும் நீர் கவலை கொள்ளவேண்டாம்; அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றவர்கள்; உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றவர்கள்; மேலும், அவர்கள் (வேத)வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி "இ(ன்ன)து உங்களுக்குக் கொடுக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்; அது உங்களுக்கு கொடுக்கப்படாவிட்டால் (அதை) தவிர்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறுகிறார்கள்; மேலும், அல்லாஹ் எவரை வழிகேட்டிலாக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒருபோதும் சக்திபெறமாட்டீர்; இத்தகையோருடைய இதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை; இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.
5:44 اِنَّاۤ اَنْزَلْنَا التَّوْرٰٮةَ فِيْهَا هُدًى وَّنُوْرٌ ۚ يَحْكُمُ بِهَا النَّبِيُّوْنَ الَّذِيْنَ اَسْلَمُوْا لِلَّذِيْنَ هَادُوْا وَ الرَّبَّانِيُّوْنَ وَالْاَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوْا مِنْ كِتٰبِ اللّٰهِ وَكَانُوْا عَلَيْهِ شُهَدَآءَ ۚ فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ وَلَا تَشْتَرُوْا بِاٰيٰتِىْ ثَمَنًا قَلِيْلًا ؕ وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ
5:44. நிச்சயமாக நாம்தாம் தவ்ராத்தை இறக்கிவைத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன; (அல்லாஹ்வுக்கு) கட்டுப்பட்ட நபிமார்களும், யூத வணக்கசாலிகளும், மேதைகளும் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதாலும் இன்னும், அதற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தார்கள் என்பதாலும் அதனைக்கொண்டே யூதர்களுக்கு தீர்ப்பளித்துவந்தார்கள்; எனவே, நம்பிக்கையாளர்களே! நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்; என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்றுவிடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள்தாம் நிராகரிப்பவர்கள்.
5:52 فَتَـرَى الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ يُّسَارِعُوْنَ فِيْهِمْ يَقُوْلُوْنَ نَخْشٰٓى اَنْ تُصِيْبَـنَا دَآٮِٕرَةٌ ؕ فَعَسَى اللّٰهُ اَنْ يَّاْتِىَ بِالْفَتْحِ اَوْ اَمْرٍ مِّنْ عِنْدِهٖ فَيُصْبِحُوْا عَلٰى مَاۤ اَسَرُّوْا فِىْۤ اَنْفُسِهِمْ نٰدِمِيْنَ ؕ
5:52. எனவே, (நபியே!) எவர்களுடைய இதயங்களில் நோய் இருக்கின்றதோ அத்தகையவர்தாம் - அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர்; (அவர்களைப் பகைத்துக்கொண்டால்) "எங்களுக்கு ஏதாவது துன்பச்சூழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்" என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்)காரியத்தையோ கொடுத்து விடலாம்; அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்துவைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள்.
5:55 اِنَّمَا وَلِيُّكُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ وَالَّذِيْنَ اٰمَنُوا الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ رَاكِعُوْنَ
5:55. நிச்சயமாக உங்களுடைய உற்ற நண்பனெல்லாம் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், இன்னும், நம்பிக்கை கொண்டார்களே அவர்களும்தான்; அவர்கள் எத்தகையோரெனில் (அல்லாஹ்வின் கட்டளைக்கு) பணிந்தவர்களாக இருக்கும் நிலையில் தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்.
5:67 يٰۤـاَيُّهَا الرَّسُوْلُ بَلِّغْ مَاۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ ؕ وَاِنْ لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسٰلَـتَهٗ ؕ وَاللّٰهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الْـكٰفِرِيْنَ
5:67. தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக மாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
5:70 لَقَدْ اَخَذْنَا مِيْثَاقَ بَنِىْۤ اِسْرَآءِيْلَ وَاَرْسَلْنَاۤ اِلَيْهِمْ رُسُلًا ؕ كُلَّمَا جَآءَهُمْ رَسُوْلٌ ۢ بِمَا لَا تَهْوٰٓى اَنْفُسُهُمْۙ فَرِيْقًا كَذَّبُوْا وَفَرِيْقًا يَّقْتُلُوْنَ
5:70. திட்டமாக நாம் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் உறுதிமொழி வாங்கினோம்; அவர்களிடம் தூதர்களையும் அனுப்பிவைத்தோம்; எனினும், அவர்கள் மனம் விரும்பாதவற்றை (கட்டளைகளை நம்) தூதர் அவர்களிடம் கொண்டுவந்தபோதெல்லாம், (தூதர்களில்) ஒரு பிரிவினரைப் பொய்ப்பித்தும் இன்னும், ஒரு பிரிவினரைக் கொலை செய்தும் வந்தார்கள்.
5:75 مَا الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ اِلَّا رَسُوْلٌ ۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُؕ وَاُمُّهٗ صِدِّيْقَةٌ ؕ كَانَا يَاْكُلٰنِ الطَّعَامَؕ اُنْظُرْ كَيْفَ نُبَيِّنُ لَهُمُ الْاٰيٰتِ ثُمَّ انْظُرْ اَ نّٰى يُؤْفَكُوْنَ
5:75. மர்யமுடைய குமாரர் மஸீஹ் தூதரேயன்றி வேறில்லை; இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் திட்டமாகச் சென்றுவிட்டனர்; இவருடைய தாயார் மிக்க உண்மையானவர்; இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப்போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர்; அவர்களுக்கு (நம்முடைய) அத்தாட்சிகளை எவ்வாறு தெளிவுபடுத்துகிறோம் என்பதை (நபியே!) கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக!
5:81 وَلَوْ كَانُوْا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالنَّبِىِّ وَمَاۤ اُنْزِلَ اِلَيْهِ مَا اتَّخَذُوْهُمْ اَوْلِيَآءَ وَلٰـكِنَّ كَثِيْرًا مِّنْهُمْ فٰسِقُوْنَ
5:81. அவர்கள் அல்லாஹ்வின் மீதும், நபியின் மீதும், அவர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்களானால், அவர்கள் (நிராகரிப்பாளர்களாகிய) அவர்களை (தங்களின்) உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால், அவர்களில் அநேகர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
5:83 وَاِذَا سَمِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَى الرَّسُوْلِ تَرٰٓى اَعْيُنَهُمْ تَفِيْضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوْا مِنَ الْحَـقِّۚ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ
5:83. இன்னும், (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதைச் செவியேற்றால், உண்மையை அவர்கள் அறிந்துகொண்ட (காரணத்)தால் அவர்களுடைய கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர்: "எங்கள் இறைவனே! நாங்கள் (இவ்வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவுசெய்து கொள்வாயாக!" என்றும் அவர்கள் கூறுவார்கள்.
5:92 وَاَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ وَاحْذَرُوْا ۚ فَاِنْ تَوَلَّيْتُمْ فَاعْلَمُوْۤا اَنَّمَا عَلٰى رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِيْنُ
5:92. இன்னும், அல்லாஹ்வுக்கும் வழிப்படுங்கள்; (அவன்) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; (இதற்கு மாறுசெய்வதைவிட்டு) எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்து விட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எத்திவைப்பதே நம் தூதர் மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.
5:99 مَا عَلَى الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ ؕ وَاللّٰهُ يَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ
5:99. (நம் தூதை) எத்திவைப்பதைத் தவிர இத்தூதர் மீது (வேறு கடமை) இல்லை; இன்னும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் இன்னும், நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும் அல்லாஹ் அறிவான்.
5:104 وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰى مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَى الرَّسُوْلِ قَالُوْا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْلَمُوْنَ شَيْــٴًـــا وَّلَا يَهْتَدُوْنَ
5:104. "அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின் பாலும், இத்தூதரின் பாலும் வாருங்கள்!" என அவர்களுக்குக் கூறப்பட்டால், "எங்களுடைய மூதாதையர்களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது" என்று அவர்கள் கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய மூதாதையர்கள் ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்).
6:112 وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيٰطِيْنَ الْاِنْسِ وَالْجِنِّ يُوْحِىْ بَعْضُهُمْ اِلٰى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُوْرًا ؕ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوْهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُوْنَ
6:112. இவ்வாறே, ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும் ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கியிருந்தோம்; அவர்களில் சிலர் ஏமாற்றும் பொருட்டு அலங்காரமான வார்த்தைகளை மற்ற சிலரிடம் இரகசியமாக அறிவிக்கின்றார்கள்; (நபியே!) உம்முடைய இறைவன் நாடியிருந்தால் அதனை அவர்கள் செய்திருக்கமாட்டார்கள்; எனவே, அவர்களையும் அவர்கள் இட்டுக்கட்டுபவற்றையும் விட்டு விடுவீராக!
7:67 قَالَ يٰقَوْمِ لَـيْسَ بِىْ سَفَاهَةٌ وَّلٰـكِنِّىْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ
7:67. அதற்கு அவர், "என் சமூகத்தாரே! எந்த மடமையும் என்னிடம் இல்லை; மாறாக, நான் அகிலத்தாரின் இறைவனுடைய தூதன் ஆவேன்" என்று கூறினார்.
7:104 وَ قَالَ مُوْسٰى يٰفِرْعَوْنُ اِنِّىْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَۙ
7:104. "ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலத்தாரின் இறைவனிடமிருந்து (வந்து)ள்ள தூதன் ஆவேன்" என்று மூஸா கூறினார்.
7:157 اَ لَّذِيْنَ يَتَّبِعُوْنَ الرَّسُوْلَ النَّبِىَّ الْاُمِّىَّ الَّذِىْ يَجِدُوْنَهٗ مَكْتُوْبًا عِنْدَهُمْ فِى التَّوْرٰٮةِ وَالْاِنْجِيْلِ يَاْمُرُهُمْ بِالْمَعْرُوْفِ وَيَنْهٰٮهُمْ عَنِ الْمُنْكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبٰتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبٰۤٮِٕثَ وَيَضَعُ عَنْهُمْ اِصْرَهُمْ وَالْاَغْلٰلَ الَّتِىْ كَانَتْ عَلَيْهِمْ ؕ فَالَّذِيْنَ اٰمَنُوْا بِهٖ وَعَزَّرُوْهُ وَنَصَرُوْهُ وَ اتَّبَـعُوا النُّوْرَ الَّذِىْۤ اُنْزِلَ مَعَهٗ ۤ ۙ اُولٰۤٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
7:157. அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள்; அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் இவரைப்பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையைக் கொண்டும் ஏவுவார்; இன்னும், தீமையை விட்டும் அவர்களை அவர் விலக்குவார்; தூய்மையானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்துவிடுவார்; இன்னும், அவர்களை விட்டு அவர்களுடைய சுமைகளையும், அவர்கள்மீது இருந்த விலங்குகளையும் (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே, எவர்கள் அவரை நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளியை (வேதத்தை)யும் பின்பற்றுகிறார்களோ, அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.
7:158 قُلْ يٰۤاَيُّهَا النَّاسُ اِنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ جَمِيْعَاْ ۨالَّذِىْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ يُحْىٖ وَيُمِيْتُ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهِ النَّبِىِّ الْاُمِّىِّ الَّذِىْ يُؤْمِنُ بِاللّٰهِ وَكَلِمٰتِهٖ وَاتَّبِعُوْهُ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ
7:158. (நபியே!) நீர் கூறுவீராக: "மனிதர்களே! நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது; அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) கடவுள் (வேறு) யாருமில்லை; அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கிறான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப் படிக்கத் தெரியாத நபியாகிய அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்: அவரும் அல்லாஹ்வின் மீதும் அவனது வார்த்தைகளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்: அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்."
7:194 اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ عِبَادٌ اَمْثَالُـكُمْ فَادْعُوْهُمْ فَلْيَسْتَجِيْبُوْا لَـكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
7:194. நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்குப் பதில் அளிக்கட்டும்!
8:1 يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْاَنْفَالِ ؕ قُلِ الْاَنْفَالُ لِلّٰهِ وَالرَّسُوْلِ ۚ فَاتَّقُوا اللّٰهَ وَاَصْلِحُوْا ذَاتَ بَيْنِكُمْ وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗۤ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
8:1. போரில் கிடைத்த வெற்றிப் பொருட்களைப்பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள்: (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக! "போரில் கிடைத்த வெற்றிப் பொருட்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்: உங்களிடையே (உங்களுடைய) நிலைகளை சீராக்கிக்கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்."
8:24 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَجِيْبُوْا لِلّٰهِ وَلِلرَّسُوْلِ اِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيْكُمْۚ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ يَحُوْلُ بَيْنَ الْمَرْءِ وَقَلْبِهٖ وَاَنَّهٗۤ اِلَيْهِ تُحْشَرُوْنَ
8:24. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் - உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியத்தின்பால் உங்களை அவர் அழைத்தால் - நீங்கள் பதிலளியுங்கள்; இன்னும், நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இதயத்திற்குமிடையேயும் சூழ்ந்து இருக்கிறான் என்பதையும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.
8:27 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَخُوْنُوا اللّٰهَ وَالرَّسُوْلَ وَتَخُوْنُوْۤا اَمٰنٰتِكُمْ وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ
8:27. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள்; நீங்கள் அறிந்துகொண்டே, உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசம் செய்யாதீர்கள்.
8:41 وَاعْلَمُوْۤا اَنَّمَا غَنِمْتُمْ مِّنْ شَىْءٍ فَاَنَّ لِلّٰهِ خُمُسَهٗ وَ لِلرَّسُوْلِ وَلِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ ۙ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ وَمَاۤ اَنْزَلْنَا عَلٰى عَبْدِنَا يَوْمَ الْفُرْقَانِ يَوْمَ الْتَقَى الْجَمْعٰنِ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
8:41. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் (போரில்) பெற்ற வெற்றிப் பொருட்களிலிருந்து நிச்சயமாக ஐந்தில் ஒருபங்கு அல்லாஹ்வுக்கும், (அவனது) தூதருக்கும், (அவருடைய) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். நீங்கள் அல்லாஹ்வின் மீதும், (சத்தியத்துக்கும், அசத்தியத்துக்குமிடையே) தீர்ப்பளித்த (பத்ருப் போரின்) நாளில் - இரு படையினர் சந்தித்துக்கொண்ட நாளில், நம் அடியாரின் மீது நாம் இறக்கிவைத்த (உதவி முதலிய)வற்றின் மீதும் நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், (மேற்கூறியது பற்றி) உறுதியாக அறிந்துகொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
8:64 يٰۤـاَيُّهَا النَّبِىُّ حَسْبُكَ اللّٰهُ وَ مَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِيْنَ
8:64. நபியே! உமக்கும், நம்பிக்கையாளர்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.
8:65 يٰۤـاَيُّهَا النَّبِىُّ حَرِّضِ الْمُؤْمِنِيْنَ عَلَى الْقِتَالِ ؕ اِنْ يَّكُنْ مِّنْكُمْ عِشْرُوْنَ صَابِرُوْنَ يَغْلِبُوْا مِائَتَيْنِ ۚ وَاِنْ يَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ يَّغْلِبُوْۤا اَ لْفًا مِّنَ الَّذِيْنَ كَفَرُوْا بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُوْنَ
8:65. நபியே! நீர் நம்பிக்கையாளர்களைப் போருக்கு ஆர்வமூட்டுவீராக! உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இரு நூறு பேர்களை அவர்கள் வெற்றி கொள்வார்கள்; இன்னும், உங்களில் நூறு பேர் இருந்தால், அவர்கள் நிராகரிப்பவர்களிலிருந்து ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்: (இது) நிச்சயமாக அவர்கள் விளங்காத கூட்டத்தினராக இருக்கின்ற காரணத்தினாலாகும்.
8:67 مَا كَانَ لِنَبِىٍّ اَنْ يَّكُوْنَ لَهٗۤ اَسْرٰى حَتّٰى يُثْخِنَ فِى الْاَرْضِؕ تُرِيْدُوْنَ عَرَضَ الدُّنْيَا ۖ وَاللّٰهُ يُرِيْدُ الْاٰخِرَةَ ؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ
8:67. (விஷமங்கள் அடங்க) பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைப்பிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை; நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருட்களை விரும்புகிறீர்கள்; அல்லாஹ்வோ (உங்களுக்கு நிலையான) மறுமையை நாடுகிறான்; அல்லாஹ் மிகைத்தோனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
8:70 يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّمَنْ فِىْۤ اَيْدِيْكُمْ مِّنَ الْاَسْرٰٓىۙ اِنْ يَّعْلَمِ اللّٰهُ فِىْ قُلُوْبِكُمْ خَيْرًا يُّؤْتِكُمْ خَيْرًا مِّمَّاۤ اُخِذَ مِنْكُمْ وَيَغْفِرْ لَـكُمْؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
8:70. நபியே! உங்கள் வசத்தில் இருக்கும் கைதிகளை நோக்கிக் கூறுவீராக! "உங்களுடைய உள்ளங்களில் ஏதாவது ஒரு நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்தால், உங்களிடமிருந்து (ஈட்டுத் தொகையாக) எடுத்துக்கொள்ளப்பட்டதை விட (இவ்வுலகத்தில்) மேலானது உங்களுக்கு அவன் கொடுப்பான்; உங்களை அவன் மன்னிப்பான்; அல்லாஹ் மன்னிப்போனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்."
9:13 اَلَا تُقَاتِلُوْنَ قَوْمًا نَّكَثُوْۤا اَيْمَانَهُمْ وَهَمُّوْا بِاِخْرَاجِ الرَّسُوْلِ وَهُمْ بَدَءُوْكُمْ اَوَّلَ مَرَّةٍ ؕ اَتَخْشَوْنَهُمْ ۚ فَاللّٰهُ اَحَقُّ اَنْ تَخْشَوْهُ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
9:13. தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்துக்கொண்டு, (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் திட்டமிட்ட மக்களுடன் நீங்கள் போர்புரியவேண்டாமா? அவர்களே (வாக்குறுதி மீறி உங்களைத் தாக்க) முதல்முறையாகத் துவங்கினர்: நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? (அப்படியல்ல!) நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருப்பீர்களானால் அப்போது அல்லாஹ் - அவனே நீங்கள் அஞ்சுவதற்கு மிகத் தகுதியுடையவன்.
9:61 وَمِنْهُمُ الَّذِيْنَ يُؤْذُوْنَ النَّبِىَّ وَيَقُوْلُوْنَ هُوَ اُذُنٌ ؕ قُلْ اُذُنُ خَيْرٍ لَّـكُمْ يُؤْمِنُ بِاللّٰهِ وَيُؤْمِنُ لِلْمُؤْمِنِيْنَ وَرَحْمَةٌ لِّـلَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ؕ وَالَّذِيْنَ يُؤْذُوْنَ رَسُوْلَ اللّٰهِ لَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ
9:61. "(இந்த நபியிடம் யார் எதைச் சொன்னாலும்) அவர் கேட்டுக்கொள்பவராகவே இருக்கிறார்" எனக் கூறி நபியைத் துன்புறுத்துவோரும் அவர்களில் இருக்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்: "உங்களுக்கு நன்மை தருபவற்றையே அவர் கேட்கிறார்; அவர் அல்லாஹ்வை நம்புகிறார்; நம்பிக்கையாளர்களின் கூற்றையும் நம்புகிறார்; அன்றியும், உங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் மீது அவர் அருளாகவும் இருக்கின்றார்;" எனவே, எவர்கள் அல்லாஹ்வின் தூதரைத் துன்புறுத்துகிறார்களோ, அவர்களுக்கு நோவினைதரும் வேதனையுண்டு.
9:73 يٰۤاَيُّهَا النَّبِىُّ جَاهِدِ الْـكُفَّارَ وَالْمُنٰفِقِيْنَ وَاغْلُظْ عَلَيْهِمْؕ وَ مَاْوٰٮهُمْ جَهَـنَّمُؕ وَبِئْسَ الْمَصِيْرُ
9:73. நபியே! நிராகரிப்பாளர்களுடனும், நயவஞ்சகர்களுடனும் நீர் போர் செய்வீராக! மேலும், அவர்கள் மீது கண்டிப்பாக நடந்து கொள்வீராக! (மறுமையில்) அவர்களுடைய புகலிடம் நரகமே; தங்குமிடங்களிலெல்லாம் அது மிகவும் கெட்டது.
9:81 فَرِحَ الْمُخَلَّفُوْنَ بِمَقْعَدِهِمْ خِلٰفَ رَسُوْلِ اللّٰهِ وَكَرِهُوْۤا اَنْ يُّجَاهِدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَقَالُوْا لَا تَنْفِرُوْا فِى الْحَـرِّؕ قُلْ نَارُ جَهَـنَّمَ اَشَدُّ حَرًّاؕ لَوْ كَانُوْا يَفْقَهُوْنَ
9:81. (தபூக் போரில் கலந்துகொள்ளாமல்) பின்தங்கி விட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விரோதமாக (தம் வீடுகளில்) இருந்து கொண்டதைப்பற்றி மகிழ்ச்சியடைகின்றனர்; அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் தங்களுடைய செல்வங்களாலும், தங்களுடைய உயிர்களாலும் போர்புரிவதையும் வெறுத்து, (மற்றவர்களை நோக்கி): "இந்த வெப்ப(கால)த்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்!" என்றும் அவர்கள் கூறுகின்றனர். (அவர்களிடம்) "நரகநெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது" என்று (நபியே!) நீர் கூறுவீராக! (இதை) அவர்கள் விளங்கியிருந்தால் (பின்தங்கி இருக்கமாட்டார்கள்).
9:88 لٰـكِنِ الرَّسُوْلُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ جَاهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْؕ وَاُولٰۤٮِٕكَ لَهُمُ الْخَيْـرٰتُ وَاُولٰۤٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
9:88. எனினும், (அல்லாஹ்வின்) தூதரும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் தங்கள் செல்வங்களாலும், தங்கள் உயிர்களாலும் போர் புரிகிறார்கள்; அவர்களுக்கே எல்லா நன்மைகளும் உண்டு; இன்னும், அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.
9:99 وَمِنَ الْاَعْرَابِ مَنْ يُّؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَيَتَّخِذُ مَا يُنْفِقُ قُرُبٰتٍ عِنْدَ اللّٰهِ وَصَلَوٰتِ الرَّسُوْلِؕ اَلَاۤ اِنَّهَا قُرْبَةٌ لَّهُمْؕ سَيُدْخِلُهُمُ اللّٰهُ فِىْ رَحْمَتِهٖ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
9:99. (அரபிகளிலுள்ள) கிராமவாசிகளில் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொள்பவர்களும் இருக்கின்றார்கள்: தாம் (தர்மத்திற்காகச்) செலவு செய்வதை அல்லாஹ்விடத்தில் நெருக்கங்களாகவும், (அவனுடைய) தூதரின் பிரார்த்தனைகளுக்குரியதாகவும் ஆக்கிக்கொள்கின்றனர்; நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வுக்கு) சமீபமாக்கிவைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அதி சீக்கிரத்தில் அல்லாஹ் அவர்களைத் தன் அருளில் புகுத்துவான்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பெருங்கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
9:113 مَا كَانَ لِلنَّبِىِّ وَالَّذِيْنَ اٰمَنُوْاۤ اَنْ يَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِيْنَ وَ لَوْ كَانُوْۤا اُولِىْ قُرْبٰى مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِيْمِ
9:113. இணைவைப்பவர்களுக்காக - அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாசிகள் என்று தெளிவானபின், மன்னிப்புக் கோருவது நபிக்கும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல.
9:117 لَـقَدْ تَّابَ اللّٰهُ عَلَى النَّبِىِّ وَالْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ الَّذِيْنَ اتَّبَعُوْهُ فِىْ سَاعَةِ الْعُسْرَةِ مِنْۢ بَعْدِ مَا كَادَ يَزِيْغُ قُلُوْبُ فَرِيْقٍ مِّنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْؕ اِنَّهٗ بِهِمْ رَءُوْفٌ رَّحِيْمٌۙ
9:117. நிச்சயமாக அல்லாஹ் நபியையும், முஹாஜிர்களையும், அன்சாரிகளையும் மன்னித்தான்; அவர்களில் ஒரு பிரிவினருடைய இதயங்கள் சறுகிவிடுவதற்கு நெருங்கிய பின்னர், கஷ்டமான காலத்தில் (நமது நபியாகிய) அவரை அவர்கள் பின்பற்றினர்; பின்னரும், அவர்களை மன்னித்(து அருள் புரிந்)தான்; நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான்.
9:120 مَا كَانَ لِاَهْلِ الْمَدِيْنَةِ وَمَنْ حَوْلَهُمْ مِّنَ الْاَعْرَابِ اَنْ يَّتَخَلَّفُوْا عَنْ رَّسُوْلِ اللّٰهِ وَ لَا يَرْغَبُوْا بِاَنْفُسِهِمْ عَنْ نَّـفْسِهٖ ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ لَا يُصِيْبُهُمْ ظَمَاٌ وَّلَا نَصَبٌ وَّلَا مَخْمَصَةٌ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَطَــٴُـــوْنَ مَوْطِئًا يَّغِيْظُ الْكُفَّارَ وَلَا يَنَالُوْنَ مِنْ عَدُوٍّ نَّيْلاً اِلَّا كُتِبَ لَهُمْ بِهٖ عَمَلٌ صَالِحٌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَۙ
9:120. மதீனா வாசிகளுக்கும், அவர்களைச் சுற்றியுள்ள கிராமவாசிகளுக்கும் - அல்லாஹ்வின் தூதரைவிட்டு அவர்கள் பின்தங்குவதும், அவரின் உயிரைவிடத் தம் உயிர்களையே (பெரிதென) ஆசைவைப்பதும் தகுதியானதல்ல; இது ஏனென்றால், அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்), பசி, நிராகரிப்பவர்களை ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால்வைத்து, அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவும் இவர்களுக்கு நற்செயலாகவே பதிவுசெய்யப்படுகின்றன; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்கமாட்டான்.
9:128 لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ
9:128. (நம்பிக்கையாளர்களே) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்: நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கும்; அன்றி, உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர்; நம்பிக்கையாளர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவராக இருக்கின்றார்.
10:47 وَلِكُلِّ اُمَّةٍ رَّسُوْلٌ ۚ فَاِذَا جَآءَ رَسُوْلُهُمْ قُضِىَ بَيْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُوْنَ
10:47. ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாம் அனுப்பிய) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும்; அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
13:38 وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ وَ جَعَلْنَا لَهُمْ اَزْوَاجًا وَّذُرِّيَّةً ؕ وَمَا كَانَ لِرَسُوْلٍ اَنْ يَّاْتِىَ بِاٰيَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ لِكُلِّ اَجَلٍ كِتَابٌ
13:38. (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும் நாம் தூதர்களை அனுப்பிவைத்தோம்; அவர்களுக்கு மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம்; மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவர முடியாது: ஒவ்வொரு தவணைக்கும் ஓர் (பதிவு) ஏடு உள்ளது.
14:4 وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا بِلِسَانِ قَوْمِهٖ لِيُبَيِّنَ لَهُمْؕ فَيُضِلُّ اللّٰهُ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْ مَنْ يَّشَآءُ ؕ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
14:4. எந்தத் தூதரையும் அவருடைய சமுதாயத்தின் மொழியைக் கொண்டே தவிர நாம் அனுப்பவில்லை, அவர்களுக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான்; தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
15:11 وَمَا يَاْتِيْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ
15:11. எனினும், அவர்களிடம் (நம்முடைய) எந்தத் தூதர் வந்தாலும், அவரை அவர்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை.
16:36 وَلَـقَدْ بَعَثْنَا فِىْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَۚ فَمِنْهُمْ مَّنْ هَدَى اللّٰهُ وَمِنْهُمْ مَّنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلٰلَةُ ؕ فَسِيْرُوْا فِىْ الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ
16:36. மெய்யாக நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், "அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களைவிட்டும் நீங்கள் விலகிச்செல்லுங்கள்" என்று (போதிக்குமாறு) நம் தூதரை அனுப்பிவைத்தோம்; எனவே, அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழிகாட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று? என்பதைக் கவனியுங்கள்.
17:15 مَنِ اهْتَدٰى فَاِنَّمَا يَهْتَدِىْ لِنَفْسِهٖ ۚ وَمَنْ ضَلَّ فَاِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ؕ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى ؕ وَمَا كُنَّا مُعَذِّبِيْنَ حَتّٰى نَبْعَثَ رَسُوْلًا
17:15. எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர்வழியில் செல்கிறான்; எவன் வழிகேட்டில் செல்கின்றானோ அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்; (நம்) தூதரை அனுப்பாதவரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை.
17:33 وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ ؕ وَمَنْ قُتِلَ مَظْلُوْمًا فَقَدْ جَعَلْنَا لِـوَلِيِّهٖ سُلْطٰنًا فَلَا يُسْرِفْ فِّى الْقَتْلِ ؕ اِنَّهٗ كَانَ مَنْصُوْرًا
17:33. மேலும், (கொலை செய்யக்கூடாது என்று) தடுத்துள்ள எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்துவிடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டுவிட்டால் அவருடைய வாரிசுக்கு நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால், கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்துவிடக்கூடாது: நிச்சயமாக (கொலையுண்டவரின் வாரிசான) அவர் (நீதியைக்கொண்டு) உதவி செய்யப்பட்டவராவார்.
17:55 وَرَبُّكَ اَعْلَمُ بِمَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ وَلَقَدْ فَضَّلْنَا بَعْضَ النَّبِيّٖنَ عَلٰى بَعْضٍ وَّاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا
17:55. உம்முடைய இறைவன் வானங்களிலும், பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்கிறோம்; இன்னும், தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.
17:95 قُلْ لَّوْ كَانَ فِى الْاَرْضِ مَلٰۤٮِٕكَةٌ يَّمْشُوْنَ مُطْمَٮِٕنِّيْنَ لَـنَزَّلْنَا عَلَيْهِمْ مِّنَ السَّمَآءِ مَلَـكًا رَّسُوْلًا
17:95. (நபியே!) நீர் கூறும்: "பூமியில் வானவர்களே வசித்து (இருந்து, அதில்) அவர்களே நிம்மதியாக நடமாடிக்கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் அவர்களிடம் ஒரு வானவரையே வானத்திலிருந்து (நம்) தூதராக இறக்கியிருப்போம்" என்று.
19:19 قَالَ اِنَّمَاۤ اَنَا رَسُوْلُ رَبِّكِ ۖ لِاَهَبَ لَـكِ غُلٰمًا زَكِيًّا
19:19. "நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு நன்கொடை அளிக்க (வந்துள்ளேன்)" என்று கூறினார்.
19:30 قَالَ اِنِّىْ عَبْدُ اللّٰهِ ؕ اٰتٰٮنِىَ الْكِتٰبَ وَجَعَلَنِىْ نَبِيًّا ۙ
19:30. "நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கிறேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாகவும் ஆக்கியிருக்கிறான்."
19:41 وَاذْكُرْ فِى الْكِتٰبِ اِبْرٰهِيْمَ ۙ اِنَّهٗ كَانَ صِدِّيْقًا نَّبِيًّا
19:41. (நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார்.
19:49 فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا يَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۙ وَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ ؕ وَكُلًّا جَعَلْنَا نَبِيًّا
19:49. (இவ்வாறு) அவர் அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலக்கிக் கொண்ட போது, இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும், (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.
19:51 وَاذْكُرْ فِى الْكِتٰبِ مُوْسٰٓى اِنَّهٗ كَانَ مُخْلَصًا وَّكَانَ رَسُوْلًا نَّبِيًّا
19:51. (நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக (தூயவராக) இருந்தார்; இன்னும், நம்முடைய தூதராகவும் அவர் நபியாகவும் இருந்தார்.
19:53 وَ وَهَبْنَا لَهٗ مِنْ رَّحْمَتِنَاۤ اَخَاهُ هٰرُوْنَ نَبِيًّا
19:53. மேலும், நம்முடைய அருளிலிருந்து அவருடைய சகோதரர் ஹாரூனையும் நபியாக அவருக்கு நன்கொடையளித்தோம்.
19:54 وَاذْكُرْ فِى الْـكِتٰبِ اِسْمٰعِيْلَ اِنَّهٗ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُوْلًا نَّبِيًّا ۚ
19:54. (நபியே) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; இன்னும், அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
19:56 وَاذْكُرْ فِى الْكِتٰبِ اِدْرِيْسَ اِنَّهٗ كَانَ صِدِّيْقًا نَّبِيًّا ۙ
19:56. (நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் உண்மையாளராக, நபியாக இருந்தார்.
19:58 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ مِنْ ذُرِّيَّةِ اٰدَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ وَّمِنْ ذُرِّيَّةِ اِبْرٰهِيْمَ وَاِسْرَآءِيْلَ وَمِمَّنْ هَدَيْنَا وَاجْتَبَيْنَا ؕ اِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِيًّا ۩
19:58. இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக்கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் செலுத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள்; இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அளவற்ற அருளாளனின் வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.
20:96 قَالَ بَصُرْتُ بِمَا لَمْ يَـبْصُرُوْا بِهٖ فَقَبَـضْتُ قَبْضَةً مِّنْ اَثَرِ الرَّسُوْلِ فَنَبَذْتُهَا وَكَذٰلِكَ سَوَّلَتْ لِىْ نَفْسِى
20:96. "அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்தத் தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று" என (ஸாமிரி பதில்) சொன்னான்.
20:134 وَلَوْ اَنَّاۤ اَهْلَكْنٰهُمْ بِعَذَابٍ مِّنْ قَبْلِهٖ لَـقَالُوْا رَبَّنَا لَوْلَاۤ اَرْسَلْتَ اِلَـيْنَا رَسُوْلًا فَنَتَّبِعَ اٰيٰتِكَ مِنْ قَبْلِ اَنْ نَّذِلَّ وَنَخْزٰى
20:134. இன்னும், (நம் தூதர்) வருவதற்கு முன், நாம் இவர்களை வேதனை செய்து அழித்திருந்தால், அவர்கள், "எங்கள் இறைவா! நீ எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருக்க வேண்டாமா? (அவ்வாறு அனுப்பியிருந்தால்,) நாங்கள் சிறுமைப்படுவதற்கும், கேவலப்படுவதற்கும் முன் உன் வசனங்களைப் பின்பற்றியிருப்போமே!" என்று கூறுவார்கள்.
21:25 وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ اِلَّا نُوْحِىْۤ اِلَيْهِ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعْبُدُوْنِ
21:25. (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும் "நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) இறைவன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்" என்று நாம் வஹீ அறிவிக்காமல் இல்லை.
22:52 وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ وَّلَا نَبِىٍّ اِلَّاۤ اِذَا تَمَنّٰٓى اَلْقَی الشَّيْطٰنُ فِىْۤ اُمْنِيَّتِهٖ ۚ فَيَنْسَخُ اللّٰهُ مَا يُلْقِى الشَّيْطٰنُ ثُمَّ يُحْكِمُ اللّٰهُ اٰيٰتِهٖ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ۙ
22:52. (நபியே!) உமக்கு முன்னர் எந்தத் தூதரையும் எந்த நபியையும் - அவர் ஓதினால், அவருடைய ஓதுதலில் ஷைத்தான் (நிராகரிப்போரின் நெஞ்சில்) குழப்பத்தைப் போட்டே அல்லாமல் - நாம் அனுப்பவில்லை; எனினும், ஷைத்தான் எறிந்த (குழப்பத்)தை அல்லாஹ் நீக்கிய பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான்; மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவனாகவும், ஞானமிக்கோனாகவும் இருக்கின்றான்.
22:78 وَجَاهِدُوْا فِى اللّٰهِ حَقَّ جِهَادِهٖؕ هُوَ اجْتَبٰٮكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِى الدِّيْنِ مِنْ حَرَجٍؕ مِلَّةَ اَبِيْكُمْ اِبْرٰهِيْمَؕ هُوَ سَمّٰٮكُمُ الْمُسْلِمِيْنَ ۙ مِنْ قَبْلُ وَفِىْ هٰذَا لِيَكُوْنَ الرَّسُوْلُ شَهِيْدًا عَلَيْكُمْ وَتَكُوْنُوْا شُهَدَآءَ عَلَى النَّاسِ ۖۚ فَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاعْتَصِمُوْا بِاللّٰهِؕ هُوَ مَوْلٰٮكُمْۚ فَنِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ
22:78. இன்னும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராடவேண்டிய முறைப்படி போராடுங்கள்: அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கத்தை(ப் பின்பற்றுங்கள்); அவன்தான் (இதற்கு) முன்னர் உங்களுக்கு 'முஸ்லிம்கள்' எனப் பெயரிட்டான்; இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப்பட்டுள்ளது; இது ஏனெனில் நம்முடைய) இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருப்பதற்காகவும், நீங்கள் (மற்ற) மனிதர்களின் மீது சாட்சியாக இருப்பதற்காகவும்; எனவே, நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள்; இன்னும், ஜகாத்தைக் கொடுங்கள், அல்லாஹ்வைப் பலமாகப் பிடித்துக்கொள்ளுங்கள்; அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும், அவனே மிகச்சிறந்த பாதுகாவலன்; இன்னும், மிகச்சிறந்த உதவியாளன்.
23:32 فَاَرْسَلْنَا فِيْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ اَنِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ اَفَلَا تَتَّقُوْنَ
23:32. அவர்களிலிருந்தே ஒரு தூதரையும் அவர்களிடையே நாம் அனுப்பினோம்; "அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு (வேறு) தெய்வம் இல்லை; நீங்கள் (அவனுக்கு) அஞ்சவேண்டாமா?" (என்றும் அவர் கூறினார்).
24:54 قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُمْ مَّا حُمِّلْتُمْؕ وَاِنْ تُطِيْعُوْهُ تَهْتَدُوْاؕ وَمَا عَلَى الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ
24:54. "அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்ப்படியுங்கள்; இன்னும், (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக! ஆனால், நீங்கள் புறக்கணித்தால் அவர்மீதுள்ள கடமையெல்லாம் தம்மீது சுமத்தப்பட்ட (தூதுச் செய்தியை உங்களிடம் அறிவிப்ப)துதான்; இன்னும் உங்கள் மீதுள்ள (கடமையான)து, உங்கள்மீது சுமத்தப்பட்ட (படி வழிப்படுவ)துதான்; எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்ப்படிந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்; இன்னும், (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர் மீது கடமையில்லை.
24:63 لَا تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا ؕ قَدْ يَعْلَمُ اللّٰهُ الَّذِيْنَ يَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا ۚ فَلْيَحْذَرِ الَّذِيْنَ يُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ اَوْ يُصِيْبَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ
24:63. (நம்பிக்கையாளர்களே!) உங்களில் சிலர் சிலரை (பெயர் கூறி) அழைப்பதுபோல் உங்களுக்கிடையில் (அல்லாஹ்வுடைய) தூதரின் அழைப்பை ஆக்காதீர்கள்; உங்களிலிருந்து (அவருடைய சபையிலிருந்து) எவர்கள் மறைவாக நழுவுகிறார்களோ அவர்களைத் திடமாக அல்லாஹ் (நன்கு) அறிவான்; ஆகவே, எவர்கள் அவருடைய கட்டளைக்கு மாறுசெய்கிறார்களோ அவர்கள் தங்களைச் சோதனை பிடித்துக்கொள்வதையோ, அல்லது தங்களை நோவினைதரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக்கொள்ளட்டும்.
25:7 وَقَالُوْا مَالِ هٰذَا الرَّسُوْلِ يَاْكُلُ الطَّعَامَ وَيَمْشِىْ فِى الْاَسْوَاقِ ؕ لَوْلَاۤ اُنْزِلَ اِلَيْهِ مَلَكٌ فَيَكُوْنَ مَعَهٗ نَذِيْرًا ۙ
25:7. மேலும், அவர்கள் கூறுகிறார்கள்: "இந்தத் தூதருக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார்; கடைவீதிகளில் நடக்கிறார்; இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக மலக்கு (வானவர்) அனுப்பப்பட்டிருக்க வேண்டாமா?"
25:27 وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلٰى يَدَيْهِ يَقُوْلُ يٰلَيْتَنِى اتَّخَذْتُ مَعَ الرَّسُوْلِ سَبِيْلًا
25:27. அந்நாளில் அநியாயக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக்கொண்டு: "அத்தூதருடன் நானும் (நேரான) வழியை எடுத்துக்கொண்டிருக்க வேண்டுமே!" எனக் கூறுவான்.
25:30 وَقَالَ الرَّسُوْلُ يٰرَبِّ اِنَّ قَوْمِى اتَّخَذُوْا هٰذَا الْقُرْاٰنَ مَهْجُوْرًا
25:30. "என்னுடைய இறைவா! நிச்சயமாக என் சமூகத்தார் குர்ஆனை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கிவிட்டார்கள்" என்று (நம்) தூதர் கூறுவார்.
25:31 وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا مِّنَ الْمُجْرِمِيْنَؕ وَكَفٰى بِرَبِّكَ هَادِيًا وَّنَصِيْرًا
25:31. மேலும், இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளிலிருந்து பகைவரை உண்டாக்கினோம்; இன்னும், உம்முடைய இறைவன் (உமக்கு) நேர்வழி காட்டுபவனாகவும், உதவி புரிபவனாகவும் இருக்கப் போதுமானவன்.
25:41 وَاِذَا رَاَوْكَ اِنْ يَّتَّخِذُوْنَكَ اِلَّا هُزُوًا ؕ اَهٰذَا الَّذِىْ بَعَثَ اللّٰهُ رَسُوْلًا
25:41. "இவரைத்தானா அல்லாஹ் தூதராக அனுப்பியிருக்கிறான்!" (என்று கூறி), உம்மை அவர்கள் காணும்பொழுது உம்மைக் கேலிக்குரியவராகவே அவர்கள் கருதுகின்றனர்.
26:16 فَاْتِيَا فِرْعَوْنَ فَقُوْلَاۤ اِنَّا رَسُوْلُ رَبِّ الْعٰلَمِيْنَۙ
26:16. ஆதலின், நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; அவனிடம் கூறுங்கள்: "நிச்சயமாக நாங்கள் இருவரும் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்கள்."
26:27 قَالَ اِنَّ رَسُوْلَـكُمُ الَّذِىْۤ اُرْسِلَ اِلَيْكُمْ لَمَجْنُوْنٌ
26:27. (அதற்கு ஃபிர்அவ்ன்) "நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறாரே உங்களுடைய தூதர் (அவர்) ஒரு பைத்தியக்காரரே ஆவார்" எனக் கூறினான்.
26:107 اِنِّىْ لَـكُمْ رَسُوْلٌ اَمِيْنٌۙ
26:107. "நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதன் ஆவேன்."
26:125 اِنِّىْ لَـكُمْ رَسُوْلٌ اَمِيْنٌۙ
26:125. "நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறைத்) தூதன் ஆவேன்."
28:41 وَجَعَلْنٰهُمْ اَٮِٕمَّةً يَّدْعُوْنَ اِلَى النَّارِۚ وَيَوْمَ الْقِيٰمَةِ لَا يُنْصَرُوْنَ
28:41. மேலும், (மக்களை) நரகத்தின்பால் அழைக்கும் தலைவர்களாகவே நாம் அவர்களை ஆக்கியிருந்தோம்; இன்னும், மறுமை நாளன்று அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள்.
28:59 وَ مَا كَانَ رَبُّكَ مُهْلِكَ الْقُرٰى حَتّٰى يَبْعَثَ فِىْۤ اُمِّهَا رَسُوْلًا يَّتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِنَا ۚ وَمَا كُنَّا مُهْلِكِى الْقُرٰٓى اِلَّا وَاَهْلُهَا ظٰلِمُوْنَ
28:59. (நபியே!) நம் வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும் தூதர் ஒருவரை அவர்களுடைய தலைநகருக்கு அனுப்பி வைக்காதவரையில், எந்த ஊர்களையும் உம்முடைய இறைவன் அழிப்பவனாக இல்லை; மேலும், அந்த ஊர்களையும் அதன் மக்கள் அக்கிரமக்காரர்களாக இல்லாத வரையில் நாம் அழிப்போராகவும் இல்லை.
29:18 وَاِنْ تُكَذِّبُوْا فَقَدْ كَذَّبَ اُمَمٌ مِّنْ قَبْلِكُمْؕ وَمَا عَلَى الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ
29:18. இன்னும், நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டால் (தளர்ந்து போவதில்லை; ஏனெனில்,) உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தவரும் (அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களை இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; ஆகவே, (இறைத்) தூதரின் கடமை (தம் தூதை) பகிரங்கமாக எடுத்துரைப்பதன்றி (வேறு) இல்லை.
33:1 يٰۤـاَيُّهَا النَّبِىُّ اتَّقِ اللّٰهَ وَلَا تُطِعِ الْكٰفِرِيْنَ وَالْمُنٰفِقِيْنَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا ۙ
33:1. நபியே! அல்லாஹ்வையே அஞ்சுவீராக! நிராகரிப்பாளர்களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிபவன், ஞானம் மிக்கவன்.
33:6 اَلنَّبِىُّ اَوْلٰى بِالْمُؤْمِنِيْنَ مِنْ اَنْفُسِهِمْ وَاَزْوَاجُهٗۤ اُمَّهٰتُهُمْ ؕ وَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰى بِبَعْضٍ فِىْ كِتٰبِ اللّٰهِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُهٰجِرِيْنَ اِلَّاۤ اَنْ تَفْعَلُوْۤا اِلٰٓى اَوْلِيٰٓٮِٕكُمْ مَّعْرُوْفًا ؕ كَانَ ذٰ لِكَ فِى الْكِتٰبِ مَسْطُوْرًا
33:6. இந்த நபி நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர்; (ஒரு விசுவாசியின் சொத்தை அடைவதற்கு) மற்ற நம்பிக்கையாளர்களைவிடவும், (நாடு துறந்த) முஹாஜிர்களைவிடவும் உறவினர்களே சிலரைவிட சிலர் நெருங்கிய (உரிமையுடைய) வர்களாவார்கள்; இதுதான் அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளது; என்றாலும், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்ய நாடினால் தவிர (முறைப்படி செய்யலாம்); இது, வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும்.
33:7 وَاِذْ اَخَذْنَا مِنَ النَّبِيّٖنَ مِيْثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُّوْحٍ وَّاِبْرٰهِيْمَ وَمُوْسٰى وَعِيْسَى ابْنِ مَرْيَمَ وَاَخَذْنَا مِنْهُمْ مِّیْثَاقًاغَلِيْظًا ۙ
33:7. (நபியே! நம் கட்டளைகளை எடுத்துக்கூறுமாறு) நபிமார்கள் (அனைவர்களிடமும்), (சிறப்பாக) உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் நாம் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.
33:13 وَاِذْ قَالَتْ طَّآٮِٕفَةٌ مِّنْهُمْ يٰۤـاَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوْا ۚ وَيَسْتَاْذِنُ فَرِيْقٌ مِّنْهُمُ النَّبِىَّ يَقُوْلُوْنَ اِنَّ بُيُوْتَنَا عَوْرَةٌ ۛؕ وَمَا هِىَ بِعَوْرَةٍ ۛۚ اِنْ يُّرِيْدُوْنَ اِلَّا فِرَارًا
33:13. மேலும், அவர்களில் ஒரு கூட்டத்தார் (மதீனாவாசிகளை நோக்கி) "யஸ்ரிப் வாசிகளே! (பகைவர்களை எதிர்த்து) உங்களால் (உறுதியாக) நிற்க முடியாது; ஆதலால், நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்" என்று கூறியபோது, அவர்களில் (மற்றும்) ஒரு பிரிவினர்: "நிச்சயமாக எங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றன" என்று - அவை பாதுகாப்பற்றதாக இல்லாத நிலையிலும் - கூறி (போர்க் களத்திலிருந்து சென்று விட) நபியிடம் அனுமதி கோரினார்கள்; இவர்கள் (போர்க் களத்திலிருந்து தப்பி) ஓடுவதைத் தவிர (வேறெதையும்) நாடவில்லை.
33:28 يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزْوَاجِكَ اِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَيٰوةَ الدُّنْيَا وَزِيْنَتَهَا فَتَعَالَيْنَ اُمَتِّعْكُنَّ وَاُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِيْلًا
33:28. நபியே! உம்முடைய மனைவிகளிடம் நீர் கூறுவீராக! "நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன்."
33:30 يٰنِسَآءَ النَّبِىِّ مَنْ يَّاْتِ مِنْكُنَّ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ يُّضٰعَفْ لَهَا الْعَذَابُ ضِعْفَيْنِ ؕ وَكَانَ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرًا
33:30. நபியுடைய மனைவியரே! உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடான காரியத்தைச் செய்வீராயின், அவருக்கு (மறுமையில்) இரு மடங்காக வேதனை இரட்டிக்கப்படும்; இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமேயாகும்!
33:31 وَمَنْ يَّقْنُتْ مِنْكُنَّ لِلّٰهِ وَرَسُوْلِهٖ وَتَعْمَلْ صَالِحًـا نُّؤْتِهَـآ اَجْرَهَا مَرَّتَيْنِۙ وَاَعْتَدْنَا لَهَا رِزْقًا كَرِيْمًا
33:31. அன்றியும், உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நற்செயல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும், அவருக்குக் கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம்.
33:32 يٰنِسَآءَ النَّبِىِّ لَسْتُنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَآءِ اِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَـطْمَعَ الَّذِىْ فِىْ قَلْبِهٖ مَرَضٌ وَّقُلْنَ قَوْلًا مَّعْرُوْفًا ۚ
33:32. நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல; நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள்; ஏனென்றால், எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அ(த்தகைய)வன் சபலம் கொள்வான்; இன்னும், நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.
33:38 مَا كَانَ عَلَى النَّبِىِّ مِنْ حَرَجٍ فِيْمَا فَرَضَ اللّٰهُ لَهٗ ؕ سُنَّةَ اللّٰهِ فِى الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلُ ؕ وَكَانَ اَمْرُ اللّٰهِ قَدَرًا مَّقْدُوْرَا ۙ
33:38. நபியின் மீது - அல்லாஹ் அவருக்கு விதியாக்கியதில் (அதை அவர் நிறைவேற்றுவதில்) எந்தக் குற்றமும் இல்லை; இதற்குமுன் சென்று போனவர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும்; இன்னும், அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட முடிவாகும்.
33:40 مَا كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰـكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيّٖنَ ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا
33:40. முஹம்மது உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால், அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை) யாகவும் இருக்கின்றார்; மேலும், அல்லாஹ் எல்லாப் பொருட்கள் பற்றியும் நன்கறிந்தவன்.
33:45 يٰۤـاَيُّهَا النَّبِىُّ اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا ۙ
33:45. நபியே! நாம் நிச்சயமாக உம்மைச் சாட்சியாளராகவும், நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்.
33:50 يٰۤاَيُّهَا النَّبِىُّ اِنَّاۤ اَحْلَلْنَا لَـكَ اَزْوَاجَكَ الّٰتِىْۤ اٰتَيْتَ اُجُوْرَهُنَّ وَمَا مَلَـكَتْ يَمِيْنُكَ مِمَّاۤ اَفَآءَ اللّٰهُ عَلَيْكَ وَبَنٰتِ عَمِّكَ وَبَنٰتِ عَمّٰتِكَ وَبَنٰتِ خَالِكَ وَبَنٰتِ خٰلٰتِكَ الّٰتِىْ هَاجَرْنَ مَعَكَ وَامْرَاَةً مُّؤْمِنَةً اِنْ وَّهَبَتْ نَفْسَهَا لِلنَّبِىِّ اِنْ اَرَادَ النَّبِىُّ اَنْ يَّسْتَـنْكِحَهَا خَالِصَةً لَّـكَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ ؕ قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِىْۤ اَزْوَاجِهِمْ وَمَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ لِكَيْلَا يَكُوْنَ عَلَيْكَ حَرَجٌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا
33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரைக் கொடுத்துவிட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்டவர்களையும், உம்முடன் ஹிஜ்ரத் செய்துவந்தார்களே அத்தகைய உம் தந்தையின் சகோதரருடைய மகள்களையும், உம் தந்தையின் சகோதரிகளின் மகள்களையும், உம் தாயின் சகோதரருடைய மகள்களையும், உம் தாயின் சகோதரிகளின் மகள்களையும் நாம் உமக்கு அனுமதித்துள்ளோம்; அன்றியும், நம்பிக்கைகொண்ட ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்துகொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது, மற்ற நம்பிக்கையாளர்களுக்கன்றி உமக்கு (மட்டுமே) பிரத்தியேகமாக உள்ளதாகும்; (மற்ற நம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும் அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக்கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்: உமக்கு ஏதும் சிரமம் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதிவிலக்களித்தோம்); மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க அன்புடையவன்.
33:53 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتَ النَّبِىِّ اِلَّاۤ اَنْ يُّؤْذَنَ لَـكُمْ اِلٰى طَعَامٍ غَيْرَ نٰظِرِيْنَ اِنٰٮهُ وَلٰـكِنْ اِذَا دُعِيْتُمْ فَادْخُلُوْا فَاِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوْا وَلَا مُسْتَاْنِسِيْنَ لِحَـدِيْثٍ ؕ اِنَّ ذٰلِكُمْ كَانَ يُؤْذِى النَّبِىَّ فَيَسْتَحْىٖ مِنْكُمْ وَاللّٰهُ لَا يَسْتَحْىٖ مِنَ الْحَـقِّ ؕ وَاِذَا سَاَ لْتُمُوْهُنَّ مَتَاعًا فَسْــٴَــــلُوْهُنَّ مِنْ وَّرَآءِ حِجَابٍ ؕ ذٰ لِكُمْ اَطْهَرُ لِقُلُوْبِكُمْ وَقُلُوْبِهِنَّ ؕ وَمَا كَانَ لَـكُمْ اَنْ تُؤْذُوْا رَسُوْلَ اللّٰهِ وَلَاۤ اَنْ تَـنْكِحُوْۤا اَزْوَاجَهٗ مِنْۢ بَعْدِهٖۤ اَبَدًا ؕ اِنَّ ذٰ لِكُمْ كَانَ عِنْدَ اللّٰهِ عَظِيْمًا
33:53. நம்பிக்கை கொண்டோரே! உணவின்பால் (அதை உண்ண) உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலன்றி, அது சமையலாவதை எதிர்பார்த்து (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும், நீங்கள் உணவருந்திவிட்டால் (உடனே) கலைந்து போய்விடுங்கள்; பேச்சில் மூழ்கி விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாக இருக்கிறது; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார்; ஆனால், உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; (நபியுடைய மனைவியர்களாகிய) அவர்களிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டு)க் கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள்; அதுவே, உங்களுடைய இதயங்களுக்கும், அவர்களுடைய இதயங்களுக்கும் தூய்மையானதாகும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அன்றியும், அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் (பாவத்தால்) மகத்தானதாக இருக்கிறது.
33:56 اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ ؕ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا
33:56. நிச்சயமாக இந்த நபியின் மீது அல்லாஹ் அருள்புரிகிறான்; வானவர்களும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர்; நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவர் மீது ஸலவாத்துச் சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.
33:59 يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزْوَاجِكَ وَبَنٰتِكَ وَنِسَآءِ الْمُؤْمِنِيْنَ يُدْنِيْنَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيْبِهِنَّ ؕ ذٰ لِكَ اَدْنٰٓى اَنْ يُّعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا
33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முன்றானைகளைத் தங்கள் மீது தொங்கவிட்டுக் கொள்ளுமாறு கூறுவீராக! அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்; மேலும், அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்!
33:66 يَوْمَ تُقَلَّبُ وُجُوْهُهُمْ فِى النَّارِ يَقُوْلُوْنَ يٰلَيْتَـنَاۤ اَطَعْنَا اللّٰهَ وَاَطَعْنَا الرَّسُوْلَا
33:66. நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், "ஆ, கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே! இத்தூதருக்கும் நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே!" என்று கூறுவார்கள்.
36:30 يٰحَسْرَةً عَلَى الْعِبَادِ ؔۚ مَا يَاْتِيْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ
36:30. அந்தோ! அடியார்கள் மீது கைசேதமே! அவர்களிடம் எந்தத் தூதர் வந்தாலும், அவரை அவர்கள் பரிகாசம் செய்யாதிருந்ததில்லை.
37:112 وَبَشَّرْنٰهُ بِاِسْحٰقَ نَبِيًّا مِّنَ الصّٰلِحِيْنَ
37:112. நல்லோர்களிலுள்ள நபியாக இஸ்ஹாக்கை அவருக்கு (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்.
39:69 وَاَشْرَقَتِ الْاَرْضُ بِنُوْرِ رَبِّهَا وَوُضِعَ الْكِتٰبُ وَجِآىْ َٔ بِالنَّبِيّٖنَ وَالشُّهَدَآءِ وَقُضِىَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُوْنَ
39:69. மேலும், பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்; (அவர்களுடைய) குறிப்பேடு (அவர்கள் முன்) வைக்கப்படும்; இன்னும் நபிமார்களும், சாட்சியாளர்களும் கொண்டுவரப்படுவார்கள்; அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
40:34 وَلَقَدْ جَآءَكُمْ يُوْسُفُ مِنْ قَبْلُ بِالْبَيِّنٰتِ فَمَا زِلْـتُمْ فِىْ شَكٍّ مِّمَّا جَآءَكُمْ بِهٖ ؕ حَتّٰٓى اِذَا هَلَكَ قُلْتُمْ لَنْ يَّبْعَثَ اللّٰهُ مِنْۢ بَعْدِهٖ رَسُوْلًا ؕ كَذٰلِكَ يُضِلُّ اللّٰهُ مَنْ هُوَ مُسْرِفٌ مُّرْتَابٌ ۚ ۖ
40:34. "மேலும், முற்காலத்தில் திட்டமாக யூஸுஃப் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வந்தார்; எனினும், அவர் உங்களிடம் கொண்டுவந்ததைப் பற்றி நீங்கள் சந்தேகத்திலேயே இருந்தீர்கள்; இறுதியில், அவர் இறந்தபோது 'அவருக்குப்பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்' என்றும் கூறினீர்கள்; இவ்வாறே, எவர் வரம்புமீறிச் சந்தேகிக்கிறாரோ அவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறான்."
40:79 اَللّٰهُ الَّذِىْ جَعَلَ لَكُمُ الْاَنْعَامَ لِتَرْكَبُوْا مِنْهَا وَمِنْهَا تَاْكُلُوْنَ
40:79. அல்லாஹ்தான் கால்நடைகளை உங்களுக்காக உண்டாக்கியிருக்கிறான்; அவற்றில் சிலவற்றின் மீது நீங்கள் சவாரி செய்கிறீர்கள்; இன்னும், அவற்றில் (சிலவற்றிலிருந்து) நீங்கள் புசிக்கிறீர்கள்.
42:51 وَمَا كَانَ لِبَشَرٍ اَنْ يُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْيًا اَوْ مِنْ وَّرَآىٴِ حِجَابٍ اَوْ يُرْسِلَ رَسُوْلًا فَيُوْحِىَ بِاِذْنِهٖ مَا يَشَآءُؕ اِنَّهٗ عَلِىٌّ حَكِيْمٌ
42:51. அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ, அல்லது திரைக்கப்பால் இருந்தோ, அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியைக் கொண்டு வஹீ அறிவிக்கக்கூடிய ஒரு தூதரை (- வானவரை) அனுப்பியோ அன்றி (நேரடியாகப்) பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன்.
43:6 وَكَمْ اَرْسَلْنَا مِنْ نَّبِىٍّ فِى الْاَوَّلِيْنَ
43:6. அன்றியும், முன்னிருந்தோர்களிடமும் நாம் எத்தனையோ நபிமார்களை அனுப்பியிருக்கிறோம்.
43:7 وَمَا يَاْتِيْهِمْ مِّنْ نَّبِىٍّ اِلَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ
43:7. எனினும், அவர்களிடம் எந்த நபி வந்தபோதிலும், அவர்கள் பரிகாசம் செய்யாது இருக்கவில்லை.
43:29 بَلْ مَتَّعْتُ هٰٓؤُلَاۤءِ وَاٰبَآءَهُمْ حَتّٰى جَآءَهُمُ الْحَقُّ وَرَسُوْلٌ مُّبِيْنٌ
43:29. எனினும், இவர்களிடம் உண்மையும் தெளிவான தூதரும் வரும் வரையில், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும் சுகமனுபவிக்க விட்டுவைத்தேன்.
43:46 وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰى بِاٰيٰتِنَاۤ اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۫ٮِٕه فَقَالَ اِنِّىْ رَسُوْلُ رَبِّ الْعٰلَمِيْنَ
43:46. மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும், அவனுடைய பிரமுகர்களிடமும் திட்டமாக நாம் அனுப்பிவைத்தோம்; அவர் (அவர்களை நோக்கி): "நிச்சயமாக நான் அகிலத்தாரின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்" என்று கூறினார்.
44:13 اَنّٰى لَهُمُ الذِّكْرٰى وَقَدْ جَآءَهُمْ رَسُوْلٌ مُّبِيْنٌۙ
44:13. உபதேசம் அவர்களுக்கு எவ்வாறு (அந்நேரம்) பயனளிக்கும்? (முன்னமேயே சத்தியத்தை) விளக்குபவரான தூதர் அவர்களிடம் வந்திருக்கின்றார்.
44:17 وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَ جَآءَهُمْ رَسُوْلٌ كَرِيْمٌۙ
44:17. அன்றியும், நாம் இவர்களுக்கு முன்னரே ஃபிர்அவ்னுடைய சமூகத்தவரை நிச்சயமாகச் சோதித்தோம்; கண்ணியமான தூதரும் அவர்களிடம் வந்தார்.
44:18 اَنْ اَدُّوْۤا اِلَىَّ عِبَادَ اللّٰهِؕ اِنِّىْ لَـكُمْ رَسُوْلٌ اَمِيْنٌۙ
44:18. அவர் (கூறினார்): "என்னிடம் நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களை ஒப்படைத்து விடுங்கள்; நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறைத்)தூதனாவேன்."
47:32 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ وَشَآقُّوا الرَّسُوْلَ مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْهُدٰىۙ لَنْ يَّضُرُّوا اللّٰهَ شَيْئًا ؕ وَسَيُحْبِطُ اَعْمَالَهُمْ
47:32. நிச்சயமாக எவர்கள் நிராகரித்து (பிறரை) அல்லாஹ்வின் பாதையைவிட்டுத் தடுத்தும், நேர்வழி தங்களுக்குத் தெளிவான பிறகு (நம்) தூதரை எதிர்த்துக்கொண்டும் இருக்கின்றனரோ - அவர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வித தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அவர்களுடைய செயல்களை அவன் அழித்தும் விடுவான்.
47:33 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ وَلَا تُبْطِلُوْۤا اَعْمَالَـكُمْ
47:33. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள்; இன்னும், இத்தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; உங்கள் செயல்களைப் பாழாக்கிவிடாதீர்கள்.
48:12 بَلْ ظَنَـنْـتُمْ اَنْ لَّنْ يَّـنْقَلِبَ الرَّسُوْلُ وَالْمُؤْمِنُوْنَ اِلٰٓى اَهْلِيْهِمْ اَبَدًا وَّزُيِّنَ ذٰ لِكَ فِىْ قُلُوْبِكُمْ وَظَنَنْتُمْ ظَنَّ السَّوْءِ ۖۚ وَكُنْـتُمْ قَوْمًا ۢ بُوْرًا
48:12. (நீங்கள் கூறுவதுபோல்) அல்ல; (அல்லாஹ்வின்) தூதரும், நம்பிக்கையாளர்களும் தங்கள் குடும்பத்தாரிடம் ஒருபோதும் திரும்பமாட்டார்கள் என்று நீங்கள் நிச்சயமாக எண்ணிக் கொண்டிருந்தீர்கள்; இதுவே, உங்கள் இதயங்களில் அழகாக்கப்பட்டது: ஆதலால், நீங்கள் ஒரு கெட்ட எண்ணத்தை எண்ணிக்கொண்டிருந்தீர்கள்; அதனால், நீங்கள் அழிந்துவிடும் சமூகத்தினராகி விட்டீர்கள்.
48:29 مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ ؕ وَالَّذِيْنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَى الْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ تَرٰٮهُمْ رُكَّعًا سُجَّدًا يَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًاسِيْمَاهُمْ فِىْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ ؕ ذٰ لِكَ مَثَلُهُمْ فِى التَّوْرٰٮةِ ۛ ۖۚ وَمَثَلُهُمْ فِى الْاِنْجِيْلِ ۛۚ كَزَرْعٍ اَخْرَجَ شَطْئَـهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰى عَلٰى سُوْقِهٖ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَـغِيْظَ بِهِمُ الْكُفَّارَ ؕ وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنْهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا
48:29. முஹம்மது, அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், நிராகரிப்பாளர்கள் மீது கண்டிப்பானவர்கள்; தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள்; ருகூஉ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும், அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது, அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே, தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலிலுள்ள அவர்களுக்குரிய உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர், அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து நிற்கிறது; இவற்றைக்கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோபமூட்டுகிறான்; ஆனால், அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கின்றான்.
49:2 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَرْفَعُوْۤا اَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِىِّ وَلَا تَجْهَرُوْا لَهٗ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ اَنْ تَحْبَطَ اَعْمَالُكُمْ وَاَنْـتُمْ لَا تَشْعُرُوْنَ
49:2. நம்பிக்கையாளர்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள். மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் உரக்கப் பேசுவதைப்போல அவரிடம் நீங்கள் உரக்கப் பேசாதீர்கள். (இவற்றால்) நீங்கள் அறிந்துகொள்ள முடியாத நிலையில் உங்கள் (நற்)செயல்கள் அழிந்துபோகும்.
49:6 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ ۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا ۢ بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ
49:6. நம்பிக்கையாளர்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்: (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்துவிடலாம்: பின்னர், நீங்கள் செய்தவைப் பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
49:7 وَاعْلَمُوْۤا اَنَّ فِيْكُمْ رَسُوْلَ اللّٰهِؕ لَوْ يُطِيْعُكُمْ فِىْ كَثِيْرٍ مِّنَ الْاَمْرِ لَعَنِتُّمْ وَ لٰـكِنَّ اللّٰهَ حَبَّبَ اِلَيْكُمُ الْاِيْمَانَ وَزَيَّنَهٗ فِىْ قُلُوْبِكُمْ وَكَرَّهَ اِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوْقَ وَالْعِصْيَانَؕ اُولٰٓٮِٕكَ هُمُ الرّٰشِدُوْنَۙ
49:7. அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்: அநேக காரியங்களில் அவர் உங்களுக்குக் கீழ்ப்படிந்தால், திடமாக நீங்கள்தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள்; எனினும், அல்லாஹ் நம்பிக்கையை உங்களுக்குப் பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களில் அதனை அழகாக்கியும் வைத்தான்; அன்றியும், நிராகரிப்பையும் பாவத்தையும், மாறுசெய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள்தாம் நேர்வழியில் நடப்பவர்கள்.
57:8 وَمَا لَـكُمْ لَا تُؤْمِنُوْنَ بِاللّٰهِۚ وَالرَّسُوْلُ يَدْعُوْكُمْ لِتُؤْمِنُوْا بِرَبِّكُمْ وَقَدْ اَخَذَ مِيْثَاقَكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
57:8. உங்கள் இறைவன்மீது நம்பிக்கைகொள்ள (நம்) தூதர் உங்களை அழைக்கையில் - இன்னும் திட்டமாய் ஏற்கனவே (அவன்) உங்களிடம் உறுதிமொழி வாங்கியிருக்கும்போது, அல்லாஹ்வின் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருப்பீர்களாயின் (இறைப் போதனைப்படி நடங்கள்).
58:8 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ نُهُوْا عَنِ النَّجْوٰى ثُمَّ يَعُوْدُوْنَ لِمَا نُهُوْا عَنْهُ وَيَتَنٰجَوْنَ بِالْاِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِيَتِ الرَّسُوْلِ وَاِذَا جَآءُوْكَ حَيَّوْكَ بِمَا لَمْ يُحَيِّكَ بِهِ اللّٰهُۙ وَيَقُوْلُوْنَ فِىْۤ اَنْفُسِهِمْ لَوْلَا يُعَذِّبُنَا اللّٰهُ بِمَا نَقُوْلُؕ حَسْبُهُمْ جَهَنَّمُۚ يَصْلَوْنَهَاۚ فَبِئْسَ الْمَصِيْرُ
58:8. இரகசியம் பேசுவதை விட்டுத் தடுக்கப்பட்டிருந்தும் எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதன்பால் மீண்டு பாவத்தையும், வரம்பு மீறுதலையும், தூதருக்கு மாறுசெய்வதையும் கொண்டு இரகசியமாக ஆலோசனை செய்கிறார்களே அவர்களை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? பின்னர், அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் உம்மை எ(வ்வாசகத்)தைக்கொண்டு (ஸலாம்) முகமன் கூறவில்லையோ, அதைக் கொண்டு முகமன் கூறுகிறார்கள்; பிறகு, அவர்கள் தங்களுக்குள் "நாம் (இவ்வாறு) சொல்லியதற்காக ஏன் அல்லாஹ் நம்மை வேதனைக்குள்ளாக்கவில்லை" என்றும் கூறிக்கொள்கின்றனர்; நரகமே அவர்களுக்குப் போதுமானதாகும்; அவர்கள் அதில் நுழைவார்கள்; மீளும் தலத்தில் அது மிகக்கெட்டதாகும்.
58:9 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا تَنَاجَيْتُمْ فَلَا تَـتَـنَاجَوْا بِالْاِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِيَتِ الرَّسُوْلِ وَتَنَاجَوْا بِالْبِرِّ وَالتَّقْوٰىؕ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْۤ اِلَيْهِ تُحْشَرُوْنَ
58:9. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இரகசியம் பேசிக்கொண்டால், பாவத்தையும் வரம்பு மீறுதலையும், (நம்) தூதருக்கு மாறுசெய்வதையும் கொண்டு இரகசியம் பேசாதீர்கள்; ஆனால், நன்மையையும், இறையச்சத்தையும் கொண்டு இரகசியம் பேசிக்கொள்ளுங்கள். மேலும், எவன்பால் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்களோ அத்தகைய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.
58:12 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نَاجَيْتُمُ الرَّسُوْلَ فَقَدِّمُوْا بَيْنَ يَدَىْ نَجْوٰٮكُمْ صَدَقَةً ؕ ذٰ لِكَ خَيْرٌ لَّكُمْ وَاَطْهَرُ ؕ فَاِنْ لَّمْ تَجِدُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
58:12. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் (நம்) தூதருடன் இரகசியம் பேசினால், உங்கள் இரகசியத்திற்கு முன்னர் ஏதேனும் தானதர்மத்தை முற்படுத்துங்கள்; இது உங்களுக்கு நன்மையாகவும், (உள்ளத்திற்குத்) தூய்மையாகவும் இருக்கும்; ஆனால், (தான தர்மம் செய்வதற்கு) நீங்கள் (வசதி) பெற்றிராவிடின், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
59:7 مَاۤ اَفَآءَ اللّٰهُ عَلٰى رَسُوْلِهٖ مِنْ اَهْلِ الْقُرٰى فَلِلّٰهِ وَلِلرَّسُوْلِ وَلِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِۙ كَىْ لَا يَكُوْنَ دُوْلَةًۢ بَيْنَ الْاَغْنِيَآءِ مِنْكُمْ ؕ وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا نَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا ۚ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِۘ
59:7. (வெற்றி கொள்ளப்படும் அனைத்து) ஊரார்களிடமிருந்து அல்லாஹ் தன் தூதருக்கு மீட்டுக் கொடுத்தவை - அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும்; உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக்கொடுக்கக் கட்டளையிடப்பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்கினாரோ (அதை விட்டும்) விலகிக்கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.
60:1 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا عَدُوِّىْ وَعَدُوَّكُمْ اَوْلِيَآءَ تُلْقُوْنَ اِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوْا بِمَا جَآءَكُمْ مِّنَ الْحَـقِّ ۚ يُخْرِجُوْنَ الرَّسُوْلَ وَاِيَّاكُمْ اَنْ تُؤْمِنُوْا بِاللّٰهِ رَبِّكُمْ ؕ اِنْ كُنْـتُمْ خَرَجْتُمْ جِهَادًا فِىْ سَبِيْلِىْ وَ ابْتِغَآءَ مَرْضَاتِىْ ۖ تُسِرُّوْنَ اِلَيْهِمْ بِالْمَوَدَّةِ ۖ وَاَنَا اَعْلَمُ بِمَاۤ اَخْفَيْتُمْ وَمَاۤ اَعْلَنْتُمْؕ وَمَنْ يَّفْعَلْهُ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِيْلِ
60:1. நம்பிக்கை கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களை, அவர்கள்பால் (உங்கள்) நேசத்தைச் சேர்த்துவைக்கின்ற உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்,) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரித்துவிட்டார்கள்: நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொண்டதற்காக, இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகிறார்கள்: என் பாதையில் போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை நாடியும், நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்: ஆனால், நீங்களோ) அவர்கள்பால் நேசத்தின் காரணமாக (செய்திகளை) மறைமுகமாகச் சேர்த்துவைக்கிறீர்கள்; நீங்கள் மறைத்து வைப்பதையும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன்; மேலும், உங்களிலிருந்தும் எவர் இதைச்செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவறிவிட்டார்.
60:12 يٰۤاَيُّهَا النَّبِىُّ اِذَا جَآءَكَ الْمُؤْمِنٰتُ يُبَايِعْنَكَ عَلٰٓى اَنْ لَّا يُشْرِكْنَ بِاللّٰهِ شَيْــٴًــا وَّلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِيْنَ وَلَا يَقْتُلْنَ اَوْلَادَهُنَّ وَلَا يَاْتِيْنَ بِبُهْتَانٍ يَّفْتَرِيْنَهٗ بَيْنَ اَيْدِيْهِنَّ وَاَرْجُلِهِنَّ وَلَا يَعْصِيْنَكَ فِىْ مَعْرُوْفٍ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللّٰهَؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
60:12. நபியே! நம்பிக்கையாளர்களான பெண்கள் - அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லையென்றும், திருடுவதில்லை என்றும், விபசாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளைக் கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக்கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறுசெய்வதில்லையென்றும் அவர்கள் உடன்படிக்கை செய்ய உம்மிடம் வந்தால், அவர்களுடன் உடன்படிக்கை செய்வீராக! மேலும், அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக! நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; கிருபையுடையவன்.
61:5 وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ لِمَ تُؤْذُوْنَنِىْ وَقَدْ تَّعْلَمُوْنَ اَنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْؕ فَلَمَّا زَاغُوْۤا اَزَاغَ اللّٰهُ قُلُوْبَهُمْؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ
61:5. மேலும், மூஸா தம் சமூகத்தாரிடம்: "என் சமூகத்தாரே! நிச்சயமாக நான், உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதன் என்பதை நீங்கள் திடமாக அறிந்துகொண்டே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறீர்கள்?" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவுகூர்வீராக!); ஆகவே, அவர்கள் (நேர்வழியிலிருந்து) சறுகிய பொழுது, அல்லாஹ் அவர்களுடைய இதயங்களை (நேர்வழியிலிருந்து) சறுகச் செய்தான்; அன்றியும், பாவம் செய்வோரான சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.
61:6 وَاِذْ قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اِنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَىَّ مِنَ التَّوْرٰٮةِ وَمُبَشِّرًۢا بِرَسُوْلٍ يَّاْتِىْ مِنْۢ بَعْدِى اسْمُهٗۤ اَحْمَدُؕ فَلَمَّا جَآءَهُمْ بِالْبَيِّنٰتِ قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِيْنٌ
61:6. மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: "இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹ்மது' என்னும் பெயருடைய தூதரைப்பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில், நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்" என்று கூறியவேளையை (நபியே! நீர் நினைவுகூர்வீராக!); எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டுவந்தபோது அவர்கள், "இது தெளிவான சூனியமாகும்" என்று கூறினார்கள்.
62:2 هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ
62:2. அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும்படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பிவைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.
63:5 وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَـكُمْ رَسُوْلُ اللّٰهِ لَـوَّوْا رُءُوْسَهُمْ وَرَاَيْتَهُمْ يَصُدُّوْنَ وَهُمْ مُّسْتَكْبِرُوْنَ
63:5. இன்னும், "வாருங்கள், அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காக (இறைவனிடம்) பாவமன்னிப்புத் தேடுவார்" என்று இவர்களிடம் கூறப்பட்டால், இவர்கள் தங்கள் தலைகளைச் சாய்த்துக்கொண்டு, பெருமை கொண்டவர்களாகத் திரும்பிச் செல்வதை நீர் காண்பீர்.
64:12 وَاَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَۚ فَاِنْ تَوَلَّيْتُمْ فَاِنَّمَا عَلٰى رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِيْنُ
64:12. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள்; (அவனுடைய இத்) தூதருக்கும் கட்டுப்படுங்கள். இதை நீங்கள் புறக்கணித்தால் (உங்களுக்கே இழப்பாகும்); நம் தூதர் மீதுள்ள கடமை, தெளிவாக எடுத்துரைப்பதுதான்.
65:1 يٰۤاَيُّهَا النَّبِىُّ اِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَطَلِّقُوْهُنَّ لِعِدَّتِهِنَّ وَاَحْصُوا الْعِدَّةَ ۚ وَاتَّقُوا اللّٰهَ رَبَّكُمْ ۚ لَا تُخْرِجُوْهُنَّ مِنْۢ بُيُوْتِهِنَّ وَلَا يَخْرُجْنَ اِلَّاۤ اَنْ يَّاْتِيْنَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ ؕ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ ؕ وَمَنْ يَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ ؕ لَا تَدْرِىْ لَعَلَّ اللّٰهَ يُحْدِثُ بَعْدَ ذٰ لِكَ اَمْرًا
65:1. நபியே! நீங்கள் பெண்களைத் 'தலாக்' சொல்வீர்களானால், அவர்களின் 'இத்தா'வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள்; இன்னும், இத்தாவைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள், உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்; தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான, மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெளியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது; இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள்: எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திட்டமாகத் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டார்: (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை நீர் அறியமாட்டீர்.
65:11 رَّسُوْلًا يَّتْلُوْا عَلَيْكُمْ اٰيٰتِ اللّٰهِ مُبَيِّنٰتٍ لِّيُخْرِجَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِؕ وَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ وَيَعْمَلْ صَالِحًـا يُّدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًاؕ قَدْ اَحْسَنَ اللّٰهُ لَهٗ رِزْقًا
65:11. அன்றியும், ஒரு தூதரையும் (அவன் அனுப்பி வைத்தான்); அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக்காண்பிக்கிறார்; நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்பவர்களை இருள்களிலிருந்து, ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக; மேலும், எவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு நற்செயல் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; அவற்றில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள்; அல்லாஹ் அவருக்காக திடமாக உணவை அழகாக்கினான்.
66:1 يٰۤاَيُّهَا النَّبِىُّ لِمَ تُحَرِّمُ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَـكَۚ تَبْتَغِىْ مَرْضَاتَ اَزْوَاجِكَؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
66:1. நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும், அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
66:3 وَاِذْ اَسَرَّ النَّبِىُّ اِلٰى بَعْضِ اَزْوَاجِهٖ حَدِيْثًاۚ فَلَمَّا نَـبَّاَتْ بِهٖ وَاَظْهَرَهُ اللّٰهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهٗ وَاَعْرَضَ عَنْۢ بَعْضٍۚ فَلَمَّا نَـبَّاَهَا بِهٖ قَالَتْ مَنْ اَنْۢبَاَكَ هٰذَاؕ قَالَ نَـبَّاَنِىَ الْعَلِيْمُ الْخَبِیْرُ
66:3. மேலும், நபி தம் மனைவியர் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக ஆக்கிவைத்தபோது அவர் (மற்றொருவருக்கு) அதை அறிவித்ததும், அ(வ்விஷயத்)தை அல்லாஹ் (நபியாகிய) அவருக்கு வெளியாக்கிவைத்தான்; அவர், அதில் சிலதை தெரிவித்தும், சிலதை(த் தெரிவிக்காது) புறக்கணித்தும் இருந்தார்; (இவ்வாறு) அவர் அதைத் தெரிவித்தபோது, "உங்களுக்கு இதைத் தெரிவித்தவர் யார்?" என்று அவர் (- அந்த மனைவி) கேட்டார்; அதற்கு அவர்: "(யாவற்றையும்) நன்கறிந்தோனும் உணர்ந்தோனும் (ஆகிய அல்லாஹ்) எனக்குத் தெரிவித்தான்" என்று (பதில்) கூறினார்.
66:8 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا تُوْبُوْۤا اِلَى اللّٰهِ تَوْبَةً نَّصُوْحًا ؕ عَسٰى رَبُّكُمْ اَنْ يُّكَفِّرَ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَيُدْخِلَـكُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ يَوْمَ لَا يُخْزِى اللّٰهُ النَّبِىَّ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ ۚ نُوْرُهُمْ يَسْعٰى بَيْنَ اَيْدِيْهِمْ وَبِاَيْمَانِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَ تْمِمْ لَـنَا نُوْرَنَا وَاغْفِرْ لَـنَا ۚ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
66:8. நம்பிக்கை கொண்டவர்களே! கலப்பற்ற முறையில் நீங்கள் அல்லாஹ்விடம் (தவ்பா செய்து) பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி, உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் நம்பிக்கை கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னும், அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்துகொண்டிருக்கும்; அவர்கள் "எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்" என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து)கொண்டு இருப்பார்கள்.
66:9 يٰۤاَيُّهَا النَّبِىُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنٰفِقِيْنَ وَاغْلُظْ عَلَيْهِمْؕ وَمَاْوٰٮهُمْ جَهَنَّمُؕ وَبِئْسَ الْمَصِيْرُ
66:9. நபியே! நிராகரிப்பாளர்களுடனும் நயவஞ்சகர்களுடனும் நீர் போரிடுவீராக! அவர்களிடம் கண்டிப்புடன் இருப்பீராக! அன்றியும், அவர்கள் ஒதுங்குமிடம் நரகமேயாகும்; அது மிகவும் கெட்ட சேருமிடம் ஆகும்.
69:40 اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِيْمٍۚ ۙ
69:40. நிச்சயமாக இது (நாம் அருளியவாறு ஓதிவரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.
72:27 اِلَّا مَنِ ارْتَضٰى مِنْ رَّسُوْلٍ فَاِنَّهٗ يَسْلُكُ مِنْۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهٖ رَصَدًا ۙ
72:27. "தூதரில், தான் பொருந்திக்கொண்டவருக்குத் தவிர; எனவே, அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாவலர்களை (மலக்குகளை) நிச்சயமாக நடத்தாட்டுகிறான்."
73:15 اِنَّاۤ اَرْسَلْنَاۤ اِلَيْكُمْ رَسُوْلًا ۙ شَاهِدًا عَلَيْكُمْ كَمَاۤ اَرْسَلْنَاۤ اِلٰى فِرْعَوْنَ رَسُوْلًا ؕ
73:15. நிச்சயமாக ஃபிர்அவ்னிடம் தூதரை நாம் அனுப்பியது போல், உங்களிடமும் உங்கள் மீது சாட்சி சொல்பவராகிய தூதரை நாம் அனுப்பிவைத்தோம்.
73:16 فَعَصٰى فِرْعَوْنُ الرَّسُوْلَ فَاَخَذْنٰهُ اَخْذًا وَّبِيْلًا
73:16. எனினும், ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான்; எனவே, அவனைக் கடினமான பிடியாக நாம் பிடித்துக் கொண்டோம்.
81:19 اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِيْمٍۙ
81:19. நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதர் (ஜிப்ரீல் மூலம் வந்த) சொல்லாகும்.
91:13 فَقَالَ لَهُمْ رَسُوْلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَسُقْيٰهَا ؕ
91:13. அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி, "இப்பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது; இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டுவிடுங்கள்" என்று கூறினார்.
98:2 رَسُوْلٌ مِّنَ اللّٰهِ يَتْلُوْا صُحُفًا مُّطَهَّرَةً ۙ
98:2. (அத்தெளிவான ஆதாரம் -) அல்லாஹ்விடமிருந்து வந்த தூதர், (அவர்களுக்கு) பரிசுத்தமான ஆகமங்களை ஓதிக்காண்பிக்கிறார் (என்பது).