எதிர்ப்பு
4:84 فَقَاتِلْ فِىْ سَبِيْلِ اللّٰهِ ۚ لَا تُكَلَّفُ اِلَّا نَـفْسَكَ وَحَرِّضِ الْمُؤْمِنِيْنَ ۚ عَسَی اللّٰهُ اَنْ يَّكُفَّ بَاْسَ الَّذِيْنَ كَفَرُوْا ؕ وَاللّٰهُ اَشَدُّ بَاْسًا وَّاَشَدُّ تَـنْكِيْلًا
4:84. எனவே, நீர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவீராக! உம்மைத் தவிர, (வேறு எவரும் இவ்விஷயத்தில்) கட்டாயப்படுத்தப்படுவதில்லை; எனினும், நம்பிக்கையாளர்களுக்கு ஆர்வமூட்டுவீராக! நிராகரிப்போரின் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்துவிடுவான்; ஏனெனில், அல்லாஹ் வலிமை மிக்கோன்; இன்னும், தண்டனை கொடுப்பதிலும் கடுமையானவன்.
4:90 اِلَّا الَّذِيْنَ يَصِلُوْنَ اِلٰى قَوْمٍۢ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌ اَوْ جَآءُوْكُمْ حَصِرَتْ صُدُوْرُهُمْ اَنْ يُّقَاتِلُوْكُمْ اَوْ يُقَاتِلُوْا قَوْمَهُمْ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَسَلَّطَهُمْ عَلَيْكُمْ فَلَقٰتَلُوْكُمْ ۚ فَاِنِ اعْتَزَلُوْكُمْ فَلَمْ يُقَاتِلُوْكُمْ وَاَلْقَوْا اِلَيْكُمُ السَّلَمَ ۙ فَمَا جَعَلَ اللّٰهُ لَـكُمْ عَلَيْهِمْ سَبِيْلًا
4:90. எவர்களுக்கும் உங்களுக்குமிடையே (சமாதான) உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதோ, அத்தகைய கூட்டத்தாரிடையே சென்று சேர்ந்துகொண்டவர்களையும், அல்லது உங்களுடன் போர் புரிவதையோ, அல்லது தங்கள் கூட்டத்தினருடன் போர்புரிவதையோ, அவர்களுடைய மனங்கள் (விரும்பாமல்) நெருக்கடியாகி விட்ட நிலையில் உங்களிடம் வந்துவிட்டவர்களையும் தவிர; (அவர்களைச் சிறைப் பிடிக்காதீர்கள்; கொல்லாதீர்கள்;) இன்னும், அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது சாட்டியிருப்பான்; அப்பொழுது அவர்கள் உங்களை எதிர்த்தே போர்புரிந்திருப்பார்கள்; எனவே, அவர்கள் உங்களைவிட்டு விலகி உங்களுடன் போர்புரியாமல் உங்களிடம் சமாதானம் செய்துகொள்ள விரும்பினால் (அதை ஒப்புக் கொள்ளுங்கள்; ஏனென்றால்,) அவர்களுக்கு எதிராகப் போர்புரிய யாதொரு வழியையும் அல்லாஹ் உங்களுக்கு உண்டாக்கவில்லை.
5:23 قَالَ رَجُلٰنِ مِنَ الَّذِيْنَ يَخَافُوْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمَا ادْخُلُوْا عَلَيْهِمُ الْبَابَۚ فَاِذَا دَخَلْتُمُوْهُ فَاِنَّكُمْ غٰلِبُوْنَ ۚ وَعَلَى اللّٰهِ فَتَوَكَّلُوْۤا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
5:23. (அல்லாஹ்வை) பயந்துகொண்டிருந்தோரிடையே இருந்த இரண்டு மனிதர்கள் - அவ்விருவரின் மீது அல்லாஹ் அருட்கொடையைப் பொழிந்தான்; அவர்கள் (மற்றவர்களை நோக்கி): "அவர்களை எதிர்த்து வாயில்வரை நுழையுங்கள்; அதுவரை நீங்கள் நுழைந்துவிட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள்; நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருங்கள்" என்று கூறினர்.
22:3 وَمِنَ النَّاسِ مَنْ يُّجَادِلُ فِى اللّٰهِ بِغَيْرِ عِلْمٍ وَّيَـتَّبِعُ كُلَّ شَيْطٰنٍ مَّرِيْدٍ ۙ
22:3. இன்னும், எத்தகைய அறிவும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவரும், மனமுரண்டான ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவரும் மனிதர்களில் இருக்கிறார்கள்.
27:37 اِرْجِعْ اِلَيْهِمْ فَلَنَاْتِيَنَّهُمْ بِجُنُوْدٍ لَّا قِبَلَ لَهُمْ بِهَا وَلَـنُخْرِجَنَّهُمْ مِّنْهَاۤ اَذِلَّةً وَّهُمْ صٰغِرُوْنَ
27:37. "அவர்களிடமே திரும்பிச் செல்க! நிச்சயமாக நாம் அவர்களால் எதிர்க்க முடியாத (பலமுள்ள ஒரு பெரும்) படைகளுடன் அவர்களிடம் வருவோம்; இன்னும், அவர்கள் சிறுமையடைந்தவர்களாயிருக்கும் நிலையில் கேவலமானவர்களாக அதைவிட்டும் அவர்களைத் திண்ணமாக நாம் வெளியேற்றுவோம்."