எதிரி
2:97   قُلْ مَنْ كَانَ عَدُوًّا لِّجِبْرِيْلَ فَاِنَّهٗ نَزَّلَهٗ عَلٰى قَلْبِكَ بِاِذْنِ اللّٰهِ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَهُدًى وَّبُشْرٰى لِلْمُؤْمِنِيْنَ‏
2:97. யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான் என்று நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி, உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கிவைக்கிறார்; அது, தனக்கு முன்னுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடியதாகவும், வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.
8:17   فَلَمْ تَقْتُلُوْهُمْ وَلٰـكِنَّ اللّٰهَ قَتَلَهُمْ وَمَا رَمَيْتَ اِذْ رَمَيْتَ وَ لٰـكِنَّ اللّٰهَ رَمٰى‌ ۚ وَلِيُبْلِىَ الْمُؤْمِنِيْنَ مِنْهُ بَلَاۤءً حَسَنًا‌ ؕ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ‏
8:17. (பத்ருப் போரில்) எதிரிகளாகிய அவர்களை நீங்கள் கொல்லவில்லை; அல்லாஹ்தான் அவர்களைக் கொன்றான்; (நபியே! பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; நம்பிக்கையாளர்களை தன்புறத்திலிருந்து அழகான முறையில் அவன் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்); நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
8:69   فَكُلُوْا مِمَّا غَنِمْتُمْ حَلٰلاً طَيِّبًا ۖ  وَّاتَّقُوا اللّٰهَ‌ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
8:69. ஆகவே, போரில் நீங்கள் அடைந்த வெற்றிப் பொருட்களில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதைப் புசியுங்கள்; அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
16:4   خَلَقَ الْاِنْسَانَ مِنْ نُّـطْفَةٍ فَاِذَا هُوَ خَصِيْمٌ مُّبِيْنٌ‏
16:4. அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்; அப்படியிருந்தும் அவன் பகிரங்கமான தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்.
33:22   وَلَمَّا رَاَ الْمُؤْمِنُوْنَ الْاَحْزَابَ ۙ قَالُوْا هٰذَا مَا وَعَدَنَا اللّٰهُ وَرَسُوْلُهٗ وَ صَدَقَ اللّٰهُ وَرَسُوْلُهٗ وَمَا زَادَهُمْ اِلَّاۤ اِيْمَانًـا وَّتَسْلِيْمًا ؕ‏
33:22. அன்றியும், நம்பிக்கையாளர்கள் (எதிரிகளின்) கூட்டுப் படைகளைக் கண்டபோது, "இதுதான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்" என்று கூறினார்கள்; இன்னும், அது அவர்களுடைய நம்பிக்கையையும் (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்படுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை.