சத்தியம் செய்தல்
2:224   وَلَا تَجْعَلُوا اللّٰهَ عُرْضَةً لِّاَيْمَانِکُمْ اَنْ تَبَرُّوْا وَتَتَّقُوْا وَتُصْلِحُوْا بَيْنَ النَّاسِ‌ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏
2:224. இன்னும், (அல்லாஹ்வின் மீது நீங்கள் செய்யும்) உங்களுடைய சத்தியத்தின் காரணமாக நீங்கள் நன்மை செய்வதற்கும், (அல்லாஹ்வை) அஞ்சுவதற்கும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதற்கும் அல்லாஹ்வை ஒரு தடையாக ஆக்கிவிடாதீர்கள்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
2:225   لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِىْٓ اَيْمَانِكُمْ وَلٰـكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوْبُكُمْ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ حَلِيْمٌ‏
2:225. உங்களுடைய சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிக்க மாட்டான்; ஆனால், உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக்கொண்டதைப் பற்றி உங்களை(க் குற்றம்) பிடிப்பான்; இன்னும், அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க பொறுமை உடையோனுமாகவும் இருக்கின்றான்.
2:226   لِّـلَّذِيْنَ يُؤْلُوْنَ مِنْ نِّسَآٮِٕهِمْ تَرَبُّصُ اَرْبَعَةِ اَشْهُرٍ‌‌ۚ فَاِنْ فَآءُوْ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
2:226. தங்கள் மனைவியருடன் கூடுவதில்லை என்று சத்தியம் செய்துகொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது; எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டும் (சேர்ந்து) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
3:77   اِنَّ الَّذِيْنَ يَشْتَرُوْنَ بِعَهْدِ اللّٰهِ وَاَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيْلًا اُولٰٓٮِٕكَ لَا خَلَاقَ لَهُمْ فِى الْاٰخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ اللّٰهُ وَلَا يَنْظُرُ اِلَيْهِمْ يَوْمَ الْقِيٰمَةِ وَلَا يُزَكِّيْهِمْ وَلَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
3:77. யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை; அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான்; இன்னும், மறுமை நாளில் அவன் அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான்; மேலும், அவர்களுக்கு நோவினை மிக்க வேதனையும் உண்டு.
4:62   فَكَيْفَ اِذَاۤ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ ۢ بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ ثُمَّ جَآءُوْكَ يَحْلِفُوْنَ‌ۖ بِاللّٰهِ اِنْ اَرَدْنَاۤ اِلَّاۤ اِحْسَانًـا وَّتَوْفِيْقًا‏
4:62. அவர்களின் கைகள் முற்படுத்திய (தீவினையின்) காரணத்தால், அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் எப்படியிருக்கும்? அப்பொழுது அவர்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மேல் சத்தியம் செய்து, "நாங்கள் நன்மையையும், ஒற்றுமையையும் தவிர (வேறெதனையும்) நாடவில்லை" என்று கூறுகின்றனர்.
5:53   وَيَقُوْلُ الَّذِيْنَ اٰمَنُوْۤا اَهٰٓؤُلَاۤءِ الَّذِيْنَ اَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ‌ۙ اِنَّهُمْ لَمَعَكُمْ‌ ؕ حَبِطَتْ اَعْمَالُهُمْ فَاَصْبَحُوْا خٰسِرِيْنَ‏
5:53. (மறுமையில் இவர்களைச் சுட்டிக்காண்பித்து) "நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருப்பதாக அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள்தாமா?" என்று நம்பிக்கையாளர்கள் கூறுவார்கள்; இவர்களுடைய செயல்கள் (எல்லாம்) அழிந்துவிட்டன; இன்னும், இவர்கள் நஷ்டவாளிகளாக ஆகிவிட்டனர்.
5:89   لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِىْۤ اَيْمَانِكُمْ وَلٰـكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُّمُ الْاَيْمَانَ‌ ۚ فَكَفَّارَتُهٗۤ اِطْعَامُ عَشَرَةِ مَسٰكِيْنَ مِنْ اَوْسَطِ مَا تُطْعِمُوْنَ اَهْلِيْكُمْ اَوْ كِسْوَتُهُمْ اَوْ تَحْرِيْرُ رَقَبَةٍ‌ ؕ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ‌ ؕ ذٰ لِكَ كَفَّارَةُ اَيْمَانِكُمْ اِذَا حَلَفْتُمْ‌ ؕ وَاحْفَظُوْۤا اَيْمَانَكُمْ‌ ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏
5:89. உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான்; எனினும், (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்த நீங்கள் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே, சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு, பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்; அல்லது, அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும்; அல்லது, ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால், (இம்மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால் இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, அவன் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான்.
5:108   ذٰ لِكَ اَدْنٰٓى اَنْ يَّاْتُوْا بِالشَّهَادَةِ عَلٰى وَجْهِهَاۤ اَوْ يَخَافُوْۤا اَنْ تُرَدَّ اَيْمَانٌۢ بَعْدَ اَيْمَانِهِمْ‌ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاسْمَعُوْا‌ ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ‏
5:108. இவ்வாறு செய்வது அவர்களுடைய சாட்சியத்தை முறைப்படி கொண்டுவருவதற்கும், அல்லது (அவர்களும் பொய்ச் சத்தியம் செய்திருந்தால்) அது மற்றவர்களின் சத்தியத்திற்குப் பின்னர் மறுக்கப்பட்டுவிடும் என்பதை அவர்கள் பயப்படுவதற்கும் இது சுலபமான வழியாகும்; மேலும், அல்லாஹ்வை அஞ்சி (அவனது கட்டளைகளுக்குச்) செவிசாயுங்கள்; ஏனெனில், அல்லாஹ் பாவம் செய்யும் மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
6:109   وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ لَٮِٕنْ جَآءَتْهُمْ اٰيَةٌ لَّيُؤْمِنُنَّ بِهَا‌ ؕ قُلْ اِنَّمَا الْاٰيٰتُ عِنْدَ اللّٰهِ‌ وَمَا يُشْعِرُكُمْۙ اَنَّهَاۤ اِذَا جَآءَتْ لَا يُؤْمِنُوْنَ‏
6:109. (நிராகரித்துக்கொண்டிருக்கும்) அவர்கள், அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து, தங்களுக்கு ஓர் அத்தாட்சி வந்துவிடுமானால், தாம் நிச்சயமாக அதைக்கொண்டு நம்பிக்கை கொள்வதாகக் கூறுகிறார்கள்: (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: "அத்தாட்சிகள் யாவும் அல்லாஹ்விடமே இருக்கின்றன." அவை வரும்பொழுது நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்பதை உங்களுக்கு எது அறிவித்தது?
9:12   وَاِنْ نَّكَثُوْۤا اَيْمَانَهُمْ مِّنْۢ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوْا فِىْ دِيْـنِكُمْ فَقَاتِلُوْۤا اَٮِٕمَّةَ الْـكُفْرِ‌ۙ اِنَّهُمْ لَاۤ اَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُوْنَ‏
9:12. அவர்களுடைய உடன்படிக்கைக்குப் பின், தம் சத்தியங்களை அவர்கள் முறித்துக்கொண்டு, உங்களுடைய மார்க்கத்தைப் பற்றியும் குறை சொல்லிக்கொண்டு இருப்பார்களானால், அவர்கள் (மேற்கூறிய செயல்களிலிருந்து) விலகிக்கொள்வதற்காக, நிராகரிப்பின் தலைவர்களுடன் போர் புரியுங்கள்: ஏனெனில், நிச்சயமாக அவர்கள் - அவர்களுக்குச் சத்தியங்கள் (அவற்றைப் பேணிக்காத்தல்) எதுவுமில்லை.
9:42   لَوْ كَانَ عَرَضًا قَرِيْبًا وَّسَفَرًا قَاصِدًا لَّاتَّبَعُوْكَ وَلٰـكِنْۢ بَعُدَتْ عَلَيْهِمُ الشُّقَّةُ ‌ ؕ وَسَيَحْلِفُوْنَ بِاللّٰهِ لَوِ اسْتَطَعْنَا لَخَـرَجْنَا مَعَكُمْ ۚ يُهْلِكُوْنَ اَنْفُسَهُمْ‌ ۚ وَاللّٰهُ يَعْلَمُ اِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏
9:42. (நபியே! நீர் எதன்பால் அவர்களை அழைத்தீரோ) அது சமீபமான (உடனே கிடைக்கக்கூடியதான) பொருளாகவும், நடுநிலையான பயணமாகவும் இருந்தால் அவர்கள் உம்மைப் பின்பற்றியிருப்பார்கள்; எனினும், மிகத் தூரமான பயணம் அவர்களுக்குப் பெரும் சிரமத்தைத் தந்தது; 'நாங்கள் சக்தி பெற்றிருந்தால் நிச்சயமாக உங்களுடன் புறப்பட்டிருப்போம்' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்(து கூறு)வார்கள்; அவர்கள் தங்களையே அழித்துக்கொள்கின்றனர்; நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் அறிவான்.
9:56   وَيَحْلِفُوْنَ بِاللّٰهِ اِنَّهُمْ لَمِنْكُمْؕ وَمَا هُمْ مِّنْكُمْ وَلٰـكِنَّهُمْ قَوْمٌ يَّفْرَقُوْنَ‏
9:56. "நிச்சயமாக அவர்கள் உங்களைச் சார்ந்தவர்களே" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்(து சொல்)கின்றனர்; அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் அல்லர்; என்றாலும் அவர்கள் பயந்த கூட்டத்தினர்தான்.
9:62   يَحْلِفُوْنَ بِاللّٰهِ لَـكُمْ لِيُرْضُوْكُمْ‌ۚ وَاللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَحَقُّ اَنْ يُّرْضُوْهُ اِنْ كَانُوْا مُؤْمِنِيْنَ‏
9:62. (நம்பிக்கையாளர்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களிடத்தில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் (உண்மையாகவே) நம்பிக்கையாளர்களாக இருந்தால், அவர்கள் திருப்திப்படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான்.
9:74   يَحْلِفُوْنَ بِاللّٰهِ مَا قَالُوْا ؕ وَلَقَدْ قَالُوْا كَلِمَةَ الْـكُفْرِ وَكَفَرُوْا بَعْدَ اِسْلَامِهِمْ وَهَمُّوْا بِمَا لَمْ يَنَالُوْا‌ ۚ وَمَا نَقَمُوْۤا اِلَّاۤ اَنْ اَغْنٰٮهُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ مِنْ فَضْلِهٖ‌ ۚ فَاِنْ يَّتُوْبُوْا يَكُ خَيْرًا لَّهُمْ‌ ۚ وَاِنْ يَّتَوَلَّوْا يُعَذِّبْهُمُ اللّٰهُ عَذَابًا اَلِيْمًا ۙ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ ۚ وَمَا لَهُمْ فِى الْاَرْضِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ‏
9:74. (நயவஞ்சகர்களாகிய) இவர்கள் நிச்சயமாக நிராகரிப்பின் சொல்லைச் சொல்லிவிட்டு, அதைச் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் இஸ்லா(ம் மார்க்க)த்தை ஏற்றுக்கொண்ட பின் நிராகரித்தும் இருக்கின்றனர்; (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதித்) தங்களால் அடைய முடியாததையும் (அடைந்துவிட) முயன்றனர்; அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவனுடைய அருளினால் அவர்களைச் சீமான்களாக்கி வைத்ததற்காகவே தவிர (வேறெதற்கும்) அவர்கள் பழிவாங்கவில்லை; எனவே, அவர்கள் (தம் தவறிலிருந்து) மீள்வார்களானால் அவர்களுக்கு நன்மையாக இருக்கும்; ஆனால், அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களை நோவினைமிக்க வேதனை கொண்டு இம்மையிலும், மறுமையிலும் வேதனை செய்வான்; இன்னும், அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவியாளனோ இப்பூமியில் எவருமில்லை.
9:95   سَيَحْلِفُوْنَ بِاللّٰهِ لَـكُمْ اِذَا انْقَلَبْتُمْ اِلَيْهِمْ لِتُعْرِضُوْا عَنْهُمْ‌ؕ فَاَعْرِضُوْا عَنْهُمْ‌ؕ اِنَّهُمْ رِجْسٌ‌ وَّمَاْوٰٮهُمْ جَهَـنَّمُ‌ۚ جَزَآءًۢ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏
9:95. (போரிலிருந்து வெற்றியுடன்) அவர்களிடம் நீங்கள் திரும்பிவந்தால், நீங்கள் அவர்களை(க் குற்றம் பிடிக்காது) புறக்கணித்து விட்டுவிட வேண்டுமென்று, அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள்; ஆகவே, நீங்களும் அவர்களைப் புறக்கணித்து விட்டுவிடுங்கள்; நிச்சயமாக அவர்கள் அசுத்தமானவர்கள்; அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்ததற்குக் கூலியாக அவர்களது ஒதுங்குமிடம் நரகம்தான்.
9:96   يَحْلِفُوْنَ لَـكُمْ لِتَرْضَوْا عَنْهُمْ‌ۚ فَاِنْ تَرْضَوْا عَنْهُمْ فَاِنَّ اللّٰهَ لَا يَرْضٰى عَنِ الْقَوْمِ الْفٰسِقِيْنَ‏
9:96. அவர்களைப்பற்றி நீங்கள் திருப்தியடையும் பொருட்டு அவர்கள் உங்களிடம் (இவ்வாறு) சத்தியம் செய்கிறார்கள்; நீங்கள் அவர்களைப் பற்றித் திருப்தியடைந்தாலும், மெய்யாக அல்லாஹ் பாவிகளான (இக்)கூட்டத்தாரைப்பற்றித் திருப்தி அடையமாட்டான்.
9:107   وَالَّذِيْنَ اتَّخَذُوْا مَسْجِدًا ضِرَارًا وَّكُفْرًا وَّتَفْرِيْقًۢا بَيْنَ الْمُؤْمِنِيْنَ وَاِرْصَادًا لِّمَنْ حَارَبَ اللّٰهَ وَرَسُوْلَهٗ مِنْ قَبْلُ‌ؕ وَلَيَحْلِفُنَّ اِنْ اَرَدْنَاۤ اِلَّا الْحُسْنٰى‌ؕ وَاللّٰهُ يَشْهَدُ اِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏
9:107. இன்னும் (முஸ்லிம்களுக்குத்) தீங்கிழைக்கவும், நிராகரிப்பதற்காகவும், நம்பிக்கையாளர்களிடையே பிளவு உண்டுபண்ணவும், இதற்குமுன் அல்லாஹ்வுடனும், அவனுடைய தூதருடனும் போர் செய்தவனுக்கு ஒரு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் ஏற்படுத்திக்கொண்டவர்கள்: "நாங்கள் நல்லதையேயன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை" என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள்; ஆனால், அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.
16:38   وَ اَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ‌ۙ لَا يَبْعَثُ اللّٰهُ مَنْ يَّمُوْتُ‌ؕ بَلٰى وَعْدًا عَلَيْهِ حَقًّا وَّلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَۙ‏
16:38. இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்பமாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்கிறார்கள்: அப்படியல்ல! அவனது (உயிர்கொடுத்து எழுப்புவதான) வாக்கு மிக உறுதியானதாகும்; எனினும், மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை.
16:91   وَ اَوْفُوْا بِعَهْدِ اللّٰهِ اِذَا عَاهَدْتُّمْ وَلَا تَنْقُضُوا الْاَيْمَانَ بَعْدَ تَوْكِيْدِهَا وَقَدْ جَعَلْتُمُ اللّٰهَ عَلَيْكُمْ كَفِيْلًا‌ ؕ اِنَّ اللّٰهَ يَعْلَمُ مَا تَفْعَلُوْنَ‏
16:91. இன்னும், (உங்களுக்கு மத்தியில்) உடன்படிக்கை செய்தால் நீங்கள் அல்லாஹ்வின் (பெயரால் செய்யும்) உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்; அல்லாஹ்வை உங்களுக்குச் சாட்சியாக நீங்கள் ஆக்கிய நிலையில் அவற்றை உறுதிப்படுத்திய பின்னர், அச்சத்தியங்களை நீங்கள் முறிக்காதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிவான்.
16:92   وَلَا تَكُوْنُوْا كَالَّتِىْ نَقَضَتْ غَزْلَهَا مِنْۢ بَعْدِ قُوَّةٍ اَنْكَاثًا ؕ تَتَّخِذُوْنَ اَيْمَانَكُمْ دَخَلًاۢ بَيْنَكُمْ اَنْ تَكُوْنَ اُمَّةٌ هِىَ اَرْبٰى مِنْ اُمَّةٍ‌ ؕ اِنَّمَا يَبْلُوْكُمُ اللّٰهُ بِهٖ ‌ؕ وَلَيُبَيِّنَنَّ لَـكُمْ يَوْمَ الْقِيٰمَةِ مَا كُنْـتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ‏
16:92. நீங்கள் (சத்தியத்தை முறிக்கும் இவ்விஷயத்தில்) உறுதியாக நூற்று, பின்னர் நூற்றதைத் துண்டுதுண்டாக ஆக்கியவளைப் போல் ஆகிவிடாதீர்கள்: ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரைவிட அதிகமானவர்களாக இருக்கிறார்கள் என்னும் காரணத்தால், நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் ஏமாற்றுவதற்குச் சாதனங்களாக்கிக் கொள்கிறீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பதெல்லாம் இதன் மூலமாகத்தான்; இன்னும், நீங்கள் எ(வ்விஷயத்)தில் பேதப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ (அதனை) அவன் உங்களுக்கு மறுமைநாளில் தெளிவாக்குவான்.
16:94   وَلَا تَتَّخِذُوْۤا اَيْمَانَكُمْ دَخَلًاۢ بَيْنَكُمْ فَتَزِلَّ قَدَمٌۢ بَعْدَ ثُبُوْتِهَا وَتَذُوْقُوا السُّوْۤءَ بِمَا صَدَدْتُّمْ عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ۚ وَ لَـكُمْ عَذَابٌ عَظِيْمٌ‏
16:94. நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் மோசடியாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்; (அவ்வாறு செய்தால்) நிலைபெற்ற (உங்களுடைய) பாதம் சறுகிவிடும்; அன்றியும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையைவிட்டும் (மக்களைத்) தடுத்துக்கொண்டிருந்த காரணத்தால், (இம்மையில் பெருந்) துன்பத்தை அனுபவிக்க நேரிடும்; (மறுமையில்) உங்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.
24:6   وَالَّذِيْنَ يَرْمُوْنَ اَزْوَاجَهُمْ وَلَمْ يَكُنْ لَّهُمْ شُهَدَآءُ اِلَّاۤ اَنْفُسُهُمْ فَشَهَادَةُ اَحَدِهِمْ اَرْبَعُ شَهٰدٰتٍۭ بِاللّٰهِ‌ۙ اِنَّهٗ لَمِنَ الصّٰدِقِيْنَ‏
24:6. எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால், அப்போது அவர்களில் ஒருவரின் சாட்சி, நிச்சயமாக தான் உண்மையாளர்களில் உள்ளவன் என்று அல்லாஹ்வைக் கொண்டு நான்கு (முறை சத்தியம் செய்து) சாட்சி கூறுவதாகும்.
24:8   وَيَدْرَؤُا عَنْهَا الْعَذَابَ اَنْ تَشْهَدَ اَرْبَعَ شَهٰدٰتٍۢ بِاللّٰهِ‌ۙ اِنَّهٗ لَمِنَ الْكٰذِبِيْنَۙ‏
24:8. இன்னும், (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) நிச்சயமாக அவன் பொய்யர்களில் உள்ளவன் என்று அல்லாஹ்வைக் கொண்டு (சத்தியம் செய்து) நான்கு முறை அவள் சாட்சி கூறுவது, அவளைவிட்டும் (விபசாரக் குற்றத்திற்கான) தண்டனையைத் தடுத்துவிடும்.
24:53   وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ لَٮِٕنْ اَمَرْتَهُمْ لَيَخْرُجُنَّ‌ ۚ قُلْ لَّا تُقْسِمُوْا‌ ۚ طَاعَةٌ مَّعْرُوْفَةٌ‌  ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏
24:53. இன்னும், (நபியே! நயவஞ்சகர்களான) அவர்களுக்கு நீர் கட்டளையிட்டால், நிச்சயமாகப் (போருக்குப்) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்(து கூறு)கிறார்கள்; (அவர்களை நோக்கி:) "நீங்கள் சத்தியம் செய்யாதீர்கள்; (உங்கள்) கீழ்ப்படிதல் தெரிந்ததுதான்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்" என்று கூறுவீராக!
35:42   وَاَ قْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ لَٮِٕنْ جَآءَهُمْ نَذِيْرٌ لَّيَكُوْنُنَّ اَهْدٰى مِنْ اِحْدَى الْاُمَمِۚ فَلَمَّا جَآءَهُمْ نَذِيْرٌ مَّا زَادَهُمْ اِلَّا نُفُوْرًا ۙ‏
35:42. அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எவரும் வருவாராயின், நிச்சயமாக தாங்கள் மற்றெந்த ஒரு சமுதாயத்தையும் விட மிக நேரான பாதையில் ஆகிவிடுவதாக அவர்கள் அல்லாஹ்வின் மீது பலமாக சத்தியம் செய்தார்கள்; ஆயினும், அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்தபோது, (அது) அவர்களுக்கு வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை.
58:14   اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ تَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللّٰهُ عَلَيْهِمْؕ مَّا هُمْ مِّنْكُمْ وَلَا مِنْهُمْۙ وَيَحْلِفُوْنَ عَلَى الْكَذِبِ وَهُمْ يَعْلَمُوْنَ‏
58:14. எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொண்டவர்களை (நபியே!) நீர் கவனித்தீரா? அவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர்; அவர்களில் உள்ளவர்களும் அல்லர்; அவர்கள் அறிந்துகொண்டே (உங்களுடன் இருப்பதாக) பொய்யின் மீது சத்தியம் செய்கின்றனர்.
58:16   اِتَّخَذُوْۤا اَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ فَلَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ‏
58:16. அவர்கள் தங்கள் சத்தியங்களைக் கேடயமாக ஆக்கிக் கொண்டு, (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கிறார்கள்; ஆகவே அவர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு.
58:18   يَوْمَ يَبْعَثُهُمُ اللّٰهُ جَمِيْعًا فَيَحْلِفُوْنَ لَهٗ كَمَا يَحْلِفُوْنَ لَـكُمْ‌ وَيَحْسَبُوْنَ اَنَّهُمْ عَلٰى شَىْءٍ‌ ؕ اَلَاۤ اِنَّهُمْ هُمُ الْكٰذِبُوْنَ‏
58:18. அவர்கள் அனைவரையும் அல்லாஹ் எழுப்பும் நாளில் அவர்கள் உங்களிடம் சத்தியம் செய்தது போல், அவனிடமும் சத்தியம் செய்வார்கள்; அன்றியும், அவர்கள் (அதன் மூலம் தப்பித்துக் கொள்வதற்கு) ஏதோ ஒன்றின் மீது நிச்சயமாகத் தாங்கள் இருப்பதாக எண்ணிக்கொள்வார்கள்; அறிந்து கொள்க! நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே!
63:2   اِتَّخَذُوْۤا اَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ؕ اِنَّهُمْ سَآءَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
63:2. இவர்கள் தங்களுடைய (பொய்ச்) சத்தியங்களைக் கேடயமாக வைத்துக்கொண்டு, அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுக்கின்றனர்; நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருப்பது மிகவும் கெட்டது.
66:2   قَدْ فَرَضَ اللّٰهُ لَـكُمْ تَحِلَّةَ اَيْمَانِكُمْ‌ؕ وَاللّٰهُ مَوْلٰٮكُمْ‌ۚ وَهُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ‏
66:2. அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்; மேலும், அல்லாஹ் உங்கள் எஜமானன்; மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
68:10   وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِيْنٍۙ‏
68:10. அன்றியும், இழிவானவனான, அதிகம் சத்தியம் செய்யும் எவனுக்கும் நீர் கீழ்ப்படியாதீர்.
68:39   اَمْ لَـكُمْ اَيْمَانٌ عَلَيْنَا بَالِغَةٌ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ‌ ۙ اِنَّ لَـكُمْ لَمَا تَحْكُمُوْنَ‌ۚ‏
68:39. அல்லது, நீங்கள் தீர்ப்புச் செய்து கொள்வதெல்லாம் மறுமை நாள் வரை உங்களுக்கு நிச்சயமாகக் கிடைத்துக் கொண்டிருக்கும், என்று நம் உறுதிப் பிரமாணங்கள் உங்களிடம் இருக்கின்றனவா?