சுமை
6:31 قَدْ خَسِرَ الَّذِيْنَ كَذَّبُوْا بِلِقَآءِ اللّٰهِؕ حَتّٰٓى اِذَا جَآءَتْهُمُ السَّاعَةُ بَغْتَةً قَالُوْا يٰحَسْرَتَنَا عَلٰى مَا فَرَّطْنَا فِيْهَا ۙ وَهُمْ يَحْمِلُوْنَ اَوْزَارَهُمْ عَلٰى ظُهُوْرِهِمْؕ اَلَا سَآءَ مَا يَزِرُوْنَ
6:31. ஆகவே, (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய்யாக்கியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்தவர்களாகிவிட்டனர்; அவர்களிடம் மறுமை நாள் திடீரென வரும்பொழுது, "அ(வ்வுலகத்)தில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கைசேதமே!" என்று கூறுவார்கள். மேலும், அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளைத் தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள். அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
6:164 قُلْ اَغَيْرَ اللّٰهِ اَبْغِىْ رَبًّا وَّهُوَ رَبُّ كُلِّ شَىْءٍ ؕ وَلَا تَكْسِبُ كُلُّ نَـفْسٍ اِلَّا عَلَيْهَاۚ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى ۚ ثُمَّ اِلٰى رَبِّكُمْ مَّرْجِعُكُمْ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْـتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ
6:164. "அல்லாஹ் அல்லாதவனையா இறைவனாக நான் தேடுவேன்? எல்லாப் பொருட்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான். (பாவம் செய்யும்) ஒவ்வோர் ஆத்மாவும் தனக்குப் பாதகமாகவே அல்லாது (பாவத்தை) சம்பாதிப்பதில்லை; இன்னும், (பாவத்தை) சுமக்கக்கூடிய (ஓர் ஆத்மாவான)து மற்றொன்றின் (பாவச்) சுமையைச் சுமக்காது. பின்னர், நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது; அப்போது நீங்கள் எதில் கருத்து வேற்றுமை கொண்டிருந்தீர்களோ அதனை அவன் உங்களுக்கு அறிவிப்பான்" என்று (நபியே!) நீர் கூறும்.
16:25 لِيَحْمِلُوْۤا اَوْزَارَهُمْ كَامِلَةً يَّوْمَ الْقِيٰمَةِۙ وَمِنْ اَوْزَارِ الَّذِيْنَ يُضِلُّوْنَهُمْ بِغَيْرِ عِلْمٍؕ اَلَا سَآءَ مَا يَزِرُوْنَ
16:25. மறுமை நாளில் அவர்கள், தங்கள் (பாவச்) சுமைகளை முழுமையாகச் சுமக்கட்டும்; மேலும், அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழிகெடுத்தார்களோ, அவர்களுடைய (பாவச்) சுமைகளையும் (சுமக்கட்டும்): அறிந்து கொள்ளுங்கள்! இவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது.
17:15 مَنِ اهْتَدٰى فَاِنَّمَا يَهْتَدِىْ لِنَفْسِهٖ ۚ وَمَنْ ضَلَّ فَاِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ؕ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى ؕ وَمَا كُنَّا مُعَذِّبِيْنَ حَتّٰى نَبْعَثَ رَسُوْلًا
17:15. எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர்வழியில் செல்கிறான்; எவன் வழிகேட்டில் செல்கின்றானோ அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்; (நம்) தூதரை அனுப்பாதவரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை.
20:87 قَالُوْا مَاۤ اَخْلَـفْنَا مَوْعِدَكَ بِمَلْكِنَا وَلٰـكِنَّا حُمِّلْنَاۤ اَوْزَارًا مِّنْ زِيْنَةِ الْقَوْمِ فَقَذَفْنٰهَا فَكَذٰلِكَ اَلْقَى السَّامِرِىُّ ۙ
20:87. உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு, எங்கள் சுயவிருப்பப்படி நாங்கள் மாறு செய்யவில்லை; ஆனால், நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங்களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே சாமிரியும் எறிந்தான்" என்று அவர்கள் கூறினார்கள்.
20:100 مَنْ اَعْرَضَ عَنْهُ فَاِنَّهٗ يَحْمِلُ يَوْمَ الْقِيٰمَةِ وِزْرًا ۙ
20:100. எவன் அதனைப் புறக்கணிக்கின்றானோ, நிச்சயமாக அவன் மறுமை நாளில் பாவத்தைச் சுமப்பான்.
35:18 وَ لَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرَىٰ ؕ وَاِنْ تَدْعُ مُثْقَلَةٌ اِلٰى حِمْلِهَا لَا يُحْمَلْ مِنْهُ شَىْءٌ وَّلَوْ كَانَ ذَا قُرْبٰى ؕ اِنَّمَا تُنْذِرُ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَاَقَامُوا الصَّلٰوةَ ؕ وَمَنْ تَزَكّٰى فَاِنَّمَا يَتَزَكّٰى لِنَفْسِهٖ ؕ وَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ
35:18. (மறுமைநாளில் தன்) சுமையைச் சுமக்கும் ஒருவன் வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; அன்றியும், பளுவான சுமையைச் சுமப்பவன், அதில் (சிறிதேனும்) சுமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அழைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் - அதில் சிறிதளவுகூட அவ்வாறு சுமந்துகொள்ளப்படாது; எவர்கள், மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி, தொழுகையையும் நிலைநாட்டுகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர்; எவர் பரிசுத்தமாக இருக்கிறாரோ அவர், தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கிறார்; அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்ல வேண்டியுள்ளது.
39:7 اِنْ تَكْفُرُوْا فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنْكُمْ وَلَا يَرْضٰى لِعِبَادِهِ الْـكُفْرَ ۚ وَاِنْ تَشْكُرُوْا يَرْضَهُ لَـكُمْ ؕ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى ؕ ثُمَّ اِلٰى رَبِّكُمْ مَّرْجِعُكُمْ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ؕ اِنَّهٗ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ
39:7. (அவனை) நீங்கள் நிராகரித்தாலும் (அவனுக்குக் குறையேதுமில்லை) - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன்; எனினும், தன் அடியார்களிடத்தில் நிராகரிப்பை அவன் பொருந்திக்கொள்வதில்லை; நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், உங்களுக்கு அதனை அவன் திருப்திகொள்வான்; அன்றியும், (தன் பாவச் சுமையைச்) சுமக்கிறவன், மற்றொருவன் (பாவச்) சுமையைச் சுமக்கமாட்டான்; பின்னர், நீங்கள் திரும்பிச்செல்லுதல் உங்களுடைய இறைவனிடமேயாகும்; நீங்கள் செய்துகொண்டிருந்தது பற்றி அப்போது அவன் உங்களுக்கு அறிவிப்பான்; நெஞ்சங்களிலிருப்பதை அவன் நிச்சயமாக நன்கறிபவன்.
53:38 اَلَّا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰىۙ
53:38. (அதாவது, குற்றம் செய்ததற்காக பாவச்சுமையை) சுமக்கக்கூடியது எதுவும் மற்றொரு (ஆத்மாவின் பாவச்) சுமையைச் சுமக்காது.
94:2 وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَۙ
94:2. மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.