தலை
2:196   وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِؕ فَاِنْ اُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ‌ۚ وَلَا تَحْلِقُوْا رُءُوْسَكُمْ حَتّٰى يَبْلُغَ الْهَدْىُ مَحِلَّهٗ ؕ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ بِهٖۤ اَذًى مِّنْ رَّاْسِهٖ فَفِدْيَةٌ مِّنْ صِيَامٍ اَوْ صَدَقَةٍ اَوْ نُسُكٍۚ فَاِذَآ اَمِنْتُمْ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ اِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ‌ۚ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ فِى الْحَجِّ وَسَبْعَةٍ اِذَا رَجَعْتُمْؕ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ  ؕ ذٰ لِكَ لِمَنْ لَّمْ يَكُنْ اَهْلُهٗ حَاضِرِىْ الْمَسْجِدِ الْحَـرَامِ‌ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‏
2:196. ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்திசெய்யுங்கள், (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) பலிப் பிராணிகளில் (உங்களுக்கு) சாத்தியமானது (அதற்குப் பகரமாகும்); அந்தப் பலிப்பிராணி தனது இடத்தை அடைவதற்குமுன் உங்கள் தலை முடிகளை மழிக்காதீர்கள்; ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாகவோ அல்லது அவருடைய தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடியதோ இருந்தால், (தலை முடியை இறக்கிக்கொள்ளக்கூடிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும்; அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும்; அல்லது பலி கொடுத்தல் வேண்டும்; பின்னர் (பகைவர் பற்றிய அச்சம், நோய் போன்ற தடைகளை விட்டும்) அபயமுடையவர்களாக நீங்கள் ஆகிவிட்டால், (மக்கா சென்றபின், உங்களில்) எவரேனும் உம்ராவை (மாத்திரம்) செய்துவிட்டு, ஹஜ்ஜுக்கு முன்னதாகவே (ஹஜ்ஜுடைய காலத்தில் தடுக்கப்பட்டிருந்த) சுகத்தை அனுபவித்துவிட்டால், (அதற்குப் பரிகாரமாக) பலிப்பிராணியிலிருந்து எது இயலுமோ அது அவரின் மீ(து கடமையான)தாகும்: (அவ்வாறு பலி கொடுக்கும் வசதியைப்) பெற்றுக் கொள்ளாதவர் ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்) திரும்பியதும் ஏழு நாட்களும் நோன்பு நோற்றல் வேண்டும்; இவை முழுமையான பத்தாகும்; இ(ந்தச் சலுகையான)து எவருடைய குடும்பம் (கஃபா என்னும்) மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத்தான் - ஆகவே, அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
4:88   فَمَا لَـكُمْ فِىْ الْمُنٰفِقِيْنَ فِئَـتَيْنِ وَاللّٰهُ اَرْكَسَهُمْ بِمَا كَسَبُوْا‌ؕ اَ تُرِيْدُوْنَ اَنْ تَهْدُوْا مَنْ اَضَلَّ اللّٰهُ‌ ؕ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِيْلًا‏
4:88. நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இருவகையான (அபிப்பிராயம் கொண்ட) பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த (தீய) வினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலைகீழாக்கிவிட்டான்; யாரை அல்லாஹ் வழிதவறச் செய்துவிட்டானோ, அவரை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா? எவரை அல்லாஹ் வழிதவறச் செய்துவிட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே!) நீர் காணமாட்டீர்.
4:154   وَرَفَعْنَا فَوْقَهُمُ الطُّوْرَ بِمِيْثَاقِهِمْ وَقُلْنَا لَهُمُ ادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَّقُلْنَا لَهُمْ لَا تَعْدُوْا فِى السَّبْتِ وَاَخَذْنَا مِنْهُمْ مِّيْثَاقًا غَلِيْظًا‏
4:154. மேலும், அவர்களிடம் வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள்மேல் தூர் (ஸினாய்) மலையை உயர்த்தினோம்; இன்னும், "இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்!" என்று சொன்னோம்; மேலும், "(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்" என்றும் அவர்களுக்குக் கூறினோம்; இன்னும், அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியையும் வாங்கினோம்.
5:6   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَى الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَيْدِيَكُمْ اِلَى الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَى الْـكَعْبَيْنِ‌ ؕ وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا‌ ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضَىٰۤ اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآٮِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ مِّنْهُ‌ ؕ مَا يُرِيْدُ اللّٰهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِّنْ حَرَجٍ وَّلٰـكِنْ يُّرِيْدُ لِيُطَهِّرَكُمْ وَ لِيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏
5:6. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள்வரை உங்கள் கைகளையும் கழுவிக்கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸ்ஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்); நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்க கடமைப்பட்டோராக) இருந்தால் (குளித்து) தூய்மையாக்கிக்கொள்ளுங்கள்; தவிர, நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்துவந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவுகொண்டு) இருந்தாலும், (உங்களைச் சுத்தப்படுத்திக்கொள்ள) நீங்கள் தண்ணீரைப் பெறாவிட்டால், சுத்தமான மண்ணை நீங்கள் நாடி (இரு கைகளால் அடித்து) அதிலிருந்து உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி (தயம்மும் செய்து) கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை; ஆனால், அவன் உங்களைத் தூய்மைப்படுத்தவும்; இன்னும், நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள்மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.
7:150   وَلَمَّا رَجَعَ مُوْسٰٓى اِلٰى قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ۙ قَالَ بِئْسَمَا خَلَفْتُمُوْنِىْ مِنْۢ بَعْدِىْ ۚ اَعَجِلْتُمْ اَمْرَ رَبِّكُمْ‌ ۚ وَاَلْقَى الْاَلْوَاحَ وَاَخَذَ بِرَاْسِ اَخِيْهِ يَجُرُّهٗۤ اِلَيْهِ‌ؕ قَالَ ابْنَ اُمَّ اِنَّ الْـقَوْمَ اسْتَضْعَفُوْنِىْ وَكَادُوْا يَقْتُلُوْنَنِىْ ‌ۖ  فَلَا تُشْمِتْ بِىَ الْاَعْدَآءَ وَ لَا تَجْعَلْنِىْ مَعَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏
7:150. (இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபமுற்றவராகவும், வருத்தம் நிறைந்தவராகவும் திரும்பி வந்தபோது (அவர்களை நோக்கி) "நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்தது மிகவும் கெட்டது; உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யை(க் கொண்டுவர) அவசரப்படுகிறீர்களா?" என்று கூறினார்; பின்னர், பலகைகளைப் போட்டுவிட்டு, தம் சகோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்து அவரைத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) "என் தாயின் மகனே! இந்த மக்கள் என்னைப் பலவீனமாகக் கருதி என்னைக் கொலை செய்யவும் முற்பட்டனர்; ஆகவே, (என்னுடைய) பகைவர்களுக்கு என் மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்திவிடாதீர்; இன்னும், என்னை அநியாயக்காரக் கூட்டத்தாருடன் சேர்த்து விடாதீர்" என்று கூறினார்.
12:36   وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيٰنِ‌ؕ قَالَ اَحَدُهُمَاۤ اِنِّىْۤ اَرٰٮنِىْۤ اَعْصِرُ خَمْرًا‌ ۚ وَقَالَ الْاٰخَرُ اِنِّىْۤ اَرٰٮنِىْۤ اَحْمِلُ فَوْقَ رَاْسِىْ خُبْزًا تَاْكُلُ الطَّيْرُ مِنْهُ‌ ؕ نَبِّئْنَا بِتَاْوِيْلِهٖ ۚ اِنَّا نَرٰٮكَ مِنَ الْمُحْسِنِيْنَ‏
12:36. அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில் ஒருவன், "நான் மதுரசம் பிழிவதாக நிச்சயமாக என்னை (கனவில்) கண்டேன்" என்று கூறினான்; மற்றவன், "நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் நிச்சயமாக என்னை நான் கண்டேன்" என்று கூறினான்; (பின் இருவரும் யூஸுஃபே!) "எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீராக! மெய்யாக நாங்கள் உம்மை நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோம்" (என்று கூறினார்கள்).
12:41   يٰصَاحِبَىِ السِّجْنِ اَمَّاۤ اَحَدُكُمَا فَيَسْقِىْ رَبَّهٗ خَمْرًا‌ۚ وَاَمَّا الْاٰخَرُ فَيُصْلَبُ فَتَاْكُلُ الطَّيْرُ مِنْ رَّاْسِهٖ‌ؕ قُضِىَ الْاَمْرُ الَّذِىْ فِيْهِ تَسْتَفْتِيٰنِؕ‏
12:41. சிறையிலிருக்கும் என் இருதோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன): உங்களிருவரில் ஒருவர் எஜமானனுக்கு மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் (கொத்தித்) தின்னும்; எது குறித்து நீங்களிருவரும் விளக்கம் தேடினீர்களோ அக்காரியம் விதிக்கப்பட்டுவிட்டது" (என்று யூஸுஃப் கூறினார்).
19:4   قَالَ رَبِّ اِنِّىْ وَهَنَ الْعَظْمُ مِنِّىْ وَاشْتَعَلَ الرَّاْسُ شَيْبًا وَّلَمْ اَكُنْۢ بِدُعَآٮِٕكَ رَبِّ شَقِيًّا‏
19:4. (அவர்) கூறினார்: "என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது; என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய் விடவில்லை."
20:94   قَالَ يَابْنَؤُمَّ لَا تَاْخُذْ بِلِحْيَتِىْ وَلَا بِرَاْسِىْ‌ۚ اِنِّىْ خَشِيْتُ اَنْ تَقُوْلَ فَرَّقْتَ بَيْنَ بَنِىْۤ اِسْرَآءِيْلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِىْ‏
20:94. (இதற்கு ஹாரூன்) "என் தாயின் மகனே! என் தாடியையோ, என் தலை(முடி)யையோ பிடி(த்திழுக்காதீர்); 'நீர் இஸ்ராயீலின் சந்ததியிலே பிரிவினையை உண்டாக்கிவிட்டீர்! என் வார்த்தைக்காக நீர் காத்திருக்கவில்லை!' என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்" என்று கூறினார்.
21:65   ثُمَّ نُكِسُوْا عَلٰى رُءُوْسِہِمْ‌ۚ لَـقَدْ عَلِمْتَ مَا هٰٓؤُلَاۤءِ يَنْطِقُوْنَ‏
21:65. பிறகு, அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக்கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்; "இவை பேசமாட்டா என்பதைத்தான் நீர் நிச்சயமாக அறிவீரே!" (என்று கூறினர்).
22:19   هٰذٰنِ خَصْمٰنِ اخْتَصَمُوْا فِىْ رَبِّهِمْ‌ فَالَّذِيْنَ كَفَرُوْا قُطِّعَتْ لَهُمْ ثِيَابٌ مِّنْ نَّارٍ ؕ يُصَبُّ مِنْ فَوْقِ رُءُوْسِهِمُ الْحَمِيْمُ‌ۚ‏
22:19. (நம்பிக்கையாளர்களும் நிராகரிப்பாளர்களுமான) இருதரப்பாரும் தம் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர்; ஆனால், எவர்கள் (அல்லாஹ்வை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன; கொதிக்கும் நீர் அவர்களுடைய தலைகளின் மேல் ஊற்றப்படும்.
33:59   يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزْوَاجِكَ وَبَنٰتِكَ وَنِسَآءِ الْمُؤْمِنِيْنَ يُدْنِيْنَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيْبِهِنَّ ؕ ذٰ لِكَ اَدْنٰٓى اَنْ يُّعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏
33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முன்றானைகளைத் தங்கள் மீது தொங்கவிட்டுக் கொள்ளுமாறு கூறுவீராக! அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்; மேலும், அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்!
36:8   اِنَّا جَعَلْنَا فِىْۤ اَعْنَاقِهِمْ اَغْلٰلًا فَهِىَ اِلَى الْاَ ذْقَانِ فَهُمْ مُّقْمَحُوْنَ‏
36:8. நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துக்களில் அரிக்கண்டங்களைப் போட்டிருக்கின்றோம்; அவை கீழ்த்தாடைகள் வரை இருக்கின்றன; ஆகவே, அவர்கள் (குனிய முடியாதவாறு) தலை நிமிர்த்தப்பட்டவர்களாக இருக்கின்றனர்.
37:26   بَلْ هُمُ الْيَوْمَ مُسْتَسْلِمُوْنَ‏
37:26. ஆனால், அவர்கள் அந்நாளில் (எதுவும் செய்ய இயலாது தலை குனிந்து) கீழ்ப்படிந்தவர்களாக இருப்பார்கள்.
42:45   وَتَرٰٮهُمْ يُعْرَضُوْنَ عَلَيْهَا خٰشِعِيْنَ مِنَ الذُّلِّ يَنْظُرُوْنَ مِنْ طَرْفٍ خَفِىٍّ‌ ؕ وَقَالَ الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّ الْخٰسِرِيْنَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَاَهْلِيْهِمْ يَوْمَ الْقِيٰمَةِ‌ ؕ اَلَاۤ اِنَّ الظّٰلِمِيْنَ فِىْ عَذَابٍ مُّقِيْمٍ‏
42:45. மேலும், சிறுமையினால் பணிந்தவர்களாகவும், (மறைவாகக்) கடைக்கண்ணால் பார்த்த வண்ணமாகவும் அவர்கள் அ(ந் நரகத்)தின் முன் கொண்டுவரப்படுவதை நீர் காண்பீர்: (அவ்வேளை) நம்பிக்கை கொண்டவர்கள் கூறுவார்கள்: "எவர்கள் தங்களுக்கும், தம் குடும்பத்தாருக்கும் நஷ்டத்தைத் தேடிக்கொண்டார்களோ, மறுமைநாளில் நிச்சயமாக அவர்கள் முற்றிலும் நஷ்டவாளிகள் தாம்." அறிந்துகொள்க! நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் இருப்பார்கள்.
44:48   ثُمَّ صُبُّوْا فَوْقَ رَاْسِهٖ مِنْ عَذَابِ الْحَمِيْمِؕ‏
44:48. பின்னர், அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள்.
48:29   مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ‌ ؕ وَالَّذِيْنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَى الْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ ‌ تَرٰٮهُمْ رُكَّعًا سُجَّدًا يَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا‌سِيْمَاهُمْ فِىْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ‌ ؕ ذٰ لِكَ مَثَلُهُمْ فِى التَّوْرٰٮةِ ۛ ۖۚ وَمَثَلُهُمْ فِى الْاِنْجِيْلِ ۛۚ كَزَرْعٍ اَخْرَجَ شَطْئَـهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰى عَلٰى سُوْقِهٖ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَـغِيْظَ بِهِمُ الْكُفَّارَ‌ ؕ وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنْهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا‏
48:29. முஹம்மது, அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், நிராகரிப்பாளர்கள் மீது கண்டிப்பானவர்கள்; தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள்; ருகூஉ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும், அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது, அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே, தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலிலுள்ள அவர்களுக்குரிய உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர், அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து நிற்கிறது; இவற்றைக்கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோபமூட்டுகிறான்; ஆனால், அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கின்றான்.
56:19   لَّا يُصَدَّعُوْنَ عَنْهَا وَلَا يُنْزِفُوْنَۙ‏
56:19. (அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோகவும் மாட்டார்கள்; மதிமயங்கவும் மாட்டார்கள்.
63:5   وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَـكُمْ رَسُوْلُ اللّٰهِ لَـوَّوْا رُءُوْسَهُمْ وَرَاَيْتَهُمْ يَصُدُّوْنَ وَهُمْ مُّسْتَكْبِرُوْنَ‏
63:5. இன்னும், "வாருங்கள், அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காக (இறைவனிடம்) பாவமன்னிப்புத் தேடுவார்" என்று இவர்களிடம் கூறப்பட்டால், இவர்கள் தங்கள் தலைகளைச் சாய்த்துக்கொண்டு, பெருமை கொண்டவர்களாகத் திரும்பிச் செல்வதை நீர் காண்பீர்.