53. ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்)

மக்கீ, வசனங்கள்: 62

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالنَّجْمِ اِذَا هَوٰی ۟ۙ
وَ النَّجْمِநட்சத்திரத்தின் மீது சத்தியமாகاِذَاபோதுهَوٰیۙஅது மறையும்
வன்னஜ்மி இதா ஹவா
விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوٰی ۟ۚ
مَاஇல்லைضَلَّவழிதவறினார்صَاحِبُكُمْஉங்கள் தோழர்وَ مَاமேலும் இல்லைغَوٰیۚவழிகெட்டார்
மா ளல்ல ஸாஹிBபுகும் வமா கவா
உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை; அவர் தவறான வழியில் செல்லவுமில்லை.
وَمَا یَنْطِقُ عَنِ الْهَوٰی ۟ؕ
وَ مَاமேலும் இல்லைیَنْطِقُஅவர் பேசுகிறார்عَنِஇருந்துالْهَوٰیؕமனோ இச்சை
வமா ய்யன்திகு 'அனில்ஹவா
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
اِنْ هُوَ اِلَّا وَحْیٌ یُّوْحٰی ۟ۙ
اِنْஇல்லைهُوَஅதுاِلَّاஅன்றிوَحْیٌஇறைச்செய்திیُّوْحٰیۙஅறிவிக்கப்படும்
இன் ஹுவ இல்லா வஹ்யு(ன்)ய் யூஹா
அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.
عَلَّمَهٗ شَدِیْدُ الْقُوٰی ۟ۙ
عَلَّمَهٗஅவருக்குக் கற்றுக்கொடுத்தார்شَدِیْدُமிக்கالْقُوٰیۙவலிமையுடையவர்
'அல்லமஹூ ஷதீதுல் குவா
மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.
ذُوْ مِرَّةٍ ؕ فَاسْتَوٰی ۟ۙ
ذُوْஉடையவர்مِرَّةٍ ؕவலிமைفَاسْتَوٰیۙபின்னர் அவர் நிலைபெற்றார்
தூ மிர்ரதின் Fபஸ்தவா
(அவர்) மிக்க உறுதியானவர்; பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார்.
وَهُوَ بِالْاُفُقِ الْاَعْلٰی ۟ؕ
وَ هُوَமேலும் அவர்بِالْاُفُقِஅடிவானத்தில்الْاَعْلٰیؕமிக உயர்ந்த
வ ஹுவ Bபில் உFபுகில் அஃலா
அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்-
ثُمَّ دَنَا فَتَدَلّٰی ۟ۙ
ثُمَّபின்னர்دَنَاஅவர் நெருங்கினார்فَتَدَلّٰیۙமேலும் கீழிறங்கினார்
தும்ம தனா Fபததல்லா
பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்.
فَكَانَ قَابَ قَوْسَیْنِ اَوْ اَدْنٰی ۟ۚ
فَكَانَஎனவே அவர் இருந்தார்قَابَஅளவுقَوْسَیْنِஇரு விற்களின்اَوْஅல்லதுاَدْنٰیۚஇன்னும் நெருக்கமாக
Fபகான காBப கவ்ஸய்னி அவ் அத்னா
(வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார்.
فَاَوْحٰۤی اِلٰی عَبْدِهٖ مَاۤ اَوْحٰی ۟ؕ
فَاَوْحٰۤیஆகவே அவர் வஹீ அறிவித்தார்اِلٰیபால்عَبْدِهٖதனது அடியார்مَاۤஎதைاَوْحٰیؕஅவர் வஹீ அறிவித்தாரோ
Fப அவ்ஹா இலா 'அBப்திஹீ மா அவ்ஹா
அப்பால், (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார்.
مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَاٰی ۟
مَاஇல்லைكَذَبَபொய்க்கவில்லைالْفُؤَادُஉள்ளம்مَاஎதனைرَاٰیகண்டதோ
மா கதBபல் Fபு'ஆது மா ர ஆ
(நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை.
اَفَتُمٰرُوْنَهٗ عَلٰی مَا یَرٰی ۟
اَفَتُمٰرُوْنَهٗநீங்கள் அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா?عَلٰیபற்றிمَاஎதைیَرٰیஅவர் கண்டாரோ
அFபதுமாரூனஹூ 'அலா மாயரா
ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?
وَلَقَدْ رَاٰهُ نَزْلَةً اُخْرٰی ۟ۙ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகرَاٰهُஅவர் அவரைக் கண்டார்نَزْلَةًமுறைاُخْرٰیۙமற்றொரு
வ லகத் ர ஆஹு னZஜ்லதன் உக்ரா
அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரீல்) இறங்கக் கண்டார்.
عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهٰی ۟
عِنْدَஅருகில்سِدْرَةِஇலந்தை மரத்தின்الْمُنْتَهٰیஇறுதி எல்லை
'இன்த ஸித்ரதில் முன்தஹா
ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே.
عِنْدَهَا جَنَّةُ الْمَاْوٰی ۟ؕ
عِنْدَهَاஅதன் அருகில்جَنَّةُசுவனம்الْمَاْوٰیؕதங்குமிடம்
'இன்தஹா ஜன்னதுல் மாவா
அதன் சமீபத்தில் தான் ஜன்னத்துல் மஃவா என்னும் சுவர்க்கம் இருக்கிறது.
اِذْ یَغْشَی السِّدْرَةَ مَا یَغْشٰی ۟ۙ
اِذْஅப்பொழுதுیَغْشَیமூடியதுالسِّدْرَةَஅந்த இலந்தை மரத்தைمَاஎதுیَغْشٰیۙமூடியதோ
இத் யக்ஷஸ் ஸித்ரத மா யக்'ஷா
ஸித்ரத்துல் முன்தஹா என்னும் அம்மரத்தை சூழ்ந்து கொண்டிருந்த வேளையில்,
مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغٰی ۟
مَاஇல்லைزَاغَபிறழ்ந்ததுالْبَصَرُபார்வைوَ مَاமேலும் இல்லைطَغٰیவரம்பு மீறியது
மா Zஜாகல் Bபஸரு வமா தகா
(அவருடைய) பார்வை விலகவுமில்லை; அதைக் கடந்து (மாறி) விடவுமில்லை.
لَقَدْ رَاٰی مِنْ اٰیٰتِ رَبِّهِ الْكُبْرٰی ۟
لَقَدْநிச்சயமாகرَاٰیஅவர் கண்டார்مِنْஇருந்துاٰیٰتِஅத்தாட்சிகளில்رَبِّهِதன் இறைவனின்الْكُبْرٰیமிகப்பெரிய
லகத் ர ஆ மின் ஆயாதி ரBப்Bபிஹில் குBப்ரா
திடமாக, அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார்.
اَفَرَءَیْتُمُ اللّٰتَ وَالْعُزّٰی ۟ۙ
اَفَرَءَیْتُمُநீங்கள் கவனித்தீர்களா?اللّٰتَஅல்-லாத்தைوَ الْعُزّٰیۙமற்றும் உஸ்ஸாவையும்
அFபர'அய்துமுல் லாத வல் 'உZஜ்Zஜா
நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?
وَمَنٰوةَ الثَّالِثَةَ الْاُخْرٰی ۟
وَ مَنٰوةَஇன்னும் மனாத்தையும்الثَّالِثَةَமூன்றாவதானالْاُخْرٰیமற்றொன்றையும்
வ மனாதத் தாலிததல் உக்ரா
மற்றும் மூன்றாவதான “மனாத்”தையும் (கண்டீர்களா?)
اَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الْاُ ۟
اَلَكُمُஉங்களுக்குத்தானாالذَّكَرُஆண்وَ لَهُஅவனுக்கோالْاُنْثٰیபெண்
அ-லகுமுத் தகரு வ லஹுல் உன்தா
உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?
تِلْكَ اِذًا قِسْمَةٌ ضِیْزٰی ۟
تِلْكَஅதுاِذًاஅப்படியானால்قِسْمَةٌபங்கீடுضِیْزٰیஅநீதியான
தில்க இதன் கிஸ்மதுன் ளீZஜா
அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.
اِنْ هِیَ اِلَّاۤ اَسْمَآءٌ سَمَّیْتُمُوْهَاۤ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍ ؕ اِنْ یَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَمَا تَهْوَی الْاَنْفُسُ ۚ وَلَقَدْ جَآءَهُمْ مِّنْ رَّبِّهِمُ الْهُدٰی ۟ؕ
اِنْஇல்லைهِیَஅவைاِلَّاۤதவிரاَسْمَآءٌபெயர்கள்سَمَّیْتُمُوْهَاۤஅவற்றுக்கு நீங்கள் பெயரிட்டீர்கள்اَنْتُمْநீங்களும்وَ اٰبَآؤُكُمْஉங்கள் மூதாதையர்களும்مَّاۤஇல்லைاَنْزَلَஇறக்கிவைத்தான்اللّٰهُஅல்லாஹ்بِهَاஅவற்றிற்குمِنْஎந்தسُلْطٰنٍ ؕஆதாரத்தையும்اِنْஇல்லைیَّتَّبِعُوْنَஅவர்கள் பின்பற்றுகிறார்கள்اِلَّاதவிரالظَّنَّஊகத்தைوَ مَاமேலும் எதைتَهْوَیவிரும்புகின்றதோالْاَنْفُسُ ۚமனங்கள்وَ لَقَدْமேலும் நிச்சயமாகجَآءَهُمْஅவர்களிடம் வந்துள்ளதுمِّنْஇருந்துرَّبِّهِمُஅவர்களின் இறைவனிடம்الْهُدٰیؕநேர்வழி
இன் ஹிய இல்லா அஸ்மா'உன் ஸம்மய்துமூஹா அன்தும் வ ஆBபா'உகும் மா அன்Zஜலல் லாஹு Bபிஹா மின் ஸுல்தான்; இ(ன்)ய்யத்தBபி'ஊன இல்லள் ளன்ன வமா தஹ்வல் அன்Fபுஸு வ லகத் ஜா'அஹும் மிர் ரBப்Bபிஹிமுல் ஹுதா
இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை; நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை; நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள்; எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.
اَمْ لِلْاِنْسَانِ مَا تَمَنّٰی ۟ؗۖ
اَمْஅல்லதுلِلْاِنْسَانِமனிதனுக்குمَاஎதைتَمَنّٰیؗۖஅவன் விரும்புகிறானோ
அம் லில் இன்ஸானி மா தமன் னா
அல்லது, மனிதனுக்கு அவன் விரும்பியதெல்லாம் கிடைத்து விடுமா?
فَلِلّٰهِ الْاٰخِرَةُ وَالْاُوْلٰی ۟۠
فَلِلّٰهِஅல்லாஹ்வுக்கே உரியதுالْاٰخِرَةُமறுமைوَ الْاُوْلٰی۠மேலும் இம்மை
Fபலில்லாஹில் ஆகிரது வல் ஊலா
ஏனெனில், மறுமையும், இம்மையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்.  
وَكَمْ مِّنْ مَّلَكٍ فِی السَّمٰوٰتِ لَا تُغْنِیْ شَفَاعَتُهُمْ شَیْـًٔا اِلَّا مِنْ بَعْدِ اَنْ یَّاْذَنَ اللّٰهُ لِمَنْ یَّشَآءُ وَیَرْضٰی ۟
وَ كَمْஇன்னும் எத்தனையோمِّنْஇருந்துمَّلَكٍவானவர்கள்فِیஇல்السَّمٰوٰتِவானங்கள்لَاஇல்லைتُغْنِیْபயன் தரும்شَفَاعَتُهُمْஅவர்களின் பரிந்துரைشَیْـًٔاசிறிதளவும்اِلَّاதவிரمِنْۢஇருந்துبَعْدِபிறகுاَنْஎன்றுیَّاْذَنَஅனுமதி அளிப்பானோاللّٰهُஅல்லாஹ்لِمَنْஎவருக்குیَّشَآءُஅவன் நாடுகிறானோوَ یَرْضٰیமேலும் அவன் திருப்தி கொள்கிறானோ
வ கம் மிம் மலகின் Fபிஸ்ஸமாவாதி லா துக்னீ ஷFபா'அதுஹும் ஷய்'அன் இல்லா மிம் Bபஃதி அ(ன்)ய்யாதனல் லாஹு லிம(ன்)ய் யஷா'உ வ யர்ளா
அன்றியும் வானங்களில் எத்தனை மலக்குகள் இருக்கின்றனர்? எனினும், அல்லாஹ் விரும்பி, எவரைப்பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதி கொடுக்கின்றானோ அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும் எந்தப் பயனுமளிக்காது.
اِنَّ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ لَیُسَمُّوْنَ الْمَلٰٓىِٕكَةَ تَسْمِیَةَ الْاُ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்لَاஇல்லைیُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்களோبِالْاٰخِرَةِமறுமையைلَیُسَمُّوْنَநிச்சயமாகப் பெயரிடுகின்றனர்الْمَلٰٓىِٕكَةَவானவர்களுக்குتَسْمِیَةَபெயர்الْاُنْثٰیபெண்
இன்னல் லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி ல யுஸம்மூனல் மலா'இகத தஸ்மியதல் உன்தா
நிச்சயமாக, மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் பெண்களுக்குப் பெயரிடுவது போல் மலக்குகளுக்குப் பெயரிடுகின்றனர்.
وَمَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ ؕ اِنْ یَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ ۚ وَاِنَّ الظَّنَّ لَا یُغْنِیْ مِنَ الْحَقِّ شَیْـًٔا ۟ۚ
وَ مَاமேலும் இல்லைلَهُمْஅவர்களுக்குبِهٖஅதைப் பற்றிمِنْஎந்தعِلْمٍ ؕஅறிவும்اِنْஇல்லைیَّتَّبِعُوْنَஅவர்கள் பின்பற்றுகிறார்கள்اِلَّاதவிரالظَّنَّ ۚஊகத்தைوَ اِنَّமேலும் நிச்சயமாகالظَّنَّஊகம்لَاஇல்லைیُغْنِیْபயனளிக்கும்مِنَபதிலாகالْحَقِّசத்தியத்திற்குشَیْـًٔاۚசிறிதும்
வமா லஹும் Bபிஹீ மின் 'இல்மின் இ(ன்)ய் யத்தBபி'ஊன இல்லள் ளன்ன வ இன்னள் ளன்ன லா யுக்னீ மினல் ஹக்கி ஷய்'ஆ
எனினும் அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை; அவர்கள் வீணான எண்ணத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை; நிச்சயமாக வீண் எண்ணம் (எதுவும்) சத்தியம் நிலைப்பதைத் தடுக்க முடியாது.
فَاَعْرِضْ عَنْ مَّنْ تَوَلّٰی ۙ۬ عَنْ ذِكْرِنَا وَلَمْ یُرِدْ اِلَّا الْحَیٰوةَ الدُّنْیَا ۟ؕ
فَاَعْرِضْஎனவே புறக்கணிப்பீராகعَنْவிட்டுمَّنْஎவர்تَوَلّٰی ۙ۬புறக்கணித்தாரோعَنْவிட்டுذِكْرِنَاநமது நினைவைوَ لَمْமேலும் இல்லைیُرِدْநாடுகிறாரோاِلَّاதவிரالْحَیٰوةَவாழ்க்கையைالدُّنْیَاؕஇவ்வுலக
Fப அஃரிள் 'அம் மன் தவல்லா 'அன் திக்ரினா வ லம் யுரித் இல்லல் ஹயாதத் துன்யா
ஆகவே, எவன் நம்மை தியானிப்பதை விட்டும் பின் வாங்கிக் கொண்டானோ - இவ்வுலக வாழ்வையன்றி வேறெதையும் நாடவில்லையோ அவனை (நபியே!) நீர் புறக்கணித்து விடும்.
ذٰلِكَ مَبْلَغُهُمْ مِّنَ الْعِلْمِ ؕ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِیْلِهٖ ۙ وَهُوَ اَعْلَمُ بِمَنِ اهْتَدٰی ۟
ذٰلِكَஅதுவேمَبْلَغُهُمْஅவர்கள் எட்டிய எல்லைمِّنَஇலிருந்துالْعِلْمِ ؕஅறிவின்اِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்هُوَஅவனேاَعْلَمُநன்கறிந்தவன்بِمَنْஎவர்ضَلَّவழிதவறினாரோعَنْவிட்டுسَبِیْلِهٖ ۙஅவனது வழியைوَ هُوَமேலும் அவனேاَعْلَمُநன்கறிந்தவன்بِمَنِஎவர்اهْتَدٰیநேர்வழி பெற்றாரோ
தலிக மBப்லகுஹும் மினல் 'இல்ம்; இன்ன ரBப்Bபக ஹுவ அஃலமு Bபிமன் ளல்ல 'அன் ஸBபீ லிஹீ வ ஹுவ அஃலமு Bபிமனிஹ் ததா
ஏனெனில் அவர்களுடைய மொத்தக் கல்வி ஞானம் (செல்வது) அந்த எல்லை வரைதான்; நிச்சயமாக, உம்முடைய இறைவன், தன் வழியிலிருந்து தவறியவன் யார் என்பதை நன்கறிகிறான்; நேரான வழி பெற்றவன் யார் என்பதையும் அவன் நன்கறிகிறான்.
وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ۙ لِیَجْزِیَ الَّذِیْنَ اَسَآءُوْا بِمَا عَمِلُوْا وَیَجْزِیَ الَّذِیْنَ اَحْسَنُوْا بِالْحُسْنٰی ۟ۚ
وَ لِلّٰهِமேலும் அல்லாஹ்வுக்கேمَاஎவைفِیஉள்ளதோالسَّمٰوٰتِவானங்களில்وَ مَاமேலும் எவைفِیஉள்ளதோالْاَرْضِ ۙபூமியில்لِیَجْزِیَஅவன் கூலி கொடுப்பதற்காகالَّذِیْنَஎவர்கள்اَسَآءُوْاதீமை செய்தார்களோبِمَاஎதற்காகعَمِلُوْاஅவர்கள் செய்தார்களோوَ یَجْزِیَமேலும் அவன் கூலி கொடுப்பான்الَّذِیْنَஎவர்கள்اَحْسَنُوْاநன்மை செய்தார்களோبِالْحُسْنٰیۚஅழகிய நன்மையைக் கொண்டு
வ லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி லியஜ்Zஜியல் லதீன அஸா'ஊ Bபிமா 'அமிலூ வ யஜ்Zஜியல் லதீன அஹ்ஸனூ Bபில்ஹுஸ்னா
மேலும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்; தீமை செய்தவர்களுக்கு அவர்கள் வினைக்குத் தக்கவாறு கூலி கொடுக்கவும், நன்மை செய்தவர்களுக்கு நன்மையைக் கூலியாகக் கொடுக்கவும் (வழி தவறியவர்களையும், வழி பெற்றவர்களையும் பகுத்து வைத்திருக்கின்றான்).
اَلَّذِیْنَ یَجْتَنِبُوْنَ كَبٰٓىِٕرَ الْاِثْمِ وَالْفَوَاحِشَ اِلَّا اللَّمَمَ ؕ اِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ ؕ هُوَ اَعْلَمُ بِكُمْ اِذْ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاِذْ اَنْتُمْ اَجِنَّةٌ فِیْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ ۚ فَلَا تُزَكُّوْۤا اَنْفُسَكُمْ ؕ هُوَ اَعْلَمُ بِمَنِ اتَّقٰی ۟۠
اَلَّذِیْنَஅவர்கள்یَجْتَنِبُوْنَதவிர்ந்து கொள்கிறார்களோكَبٰٓىِٕرَபெரும்الْاِثْمِபாவங்களைوَ الْفَوَاحِشَமேலும் மானக்கேடான செயல்களைاِلَّاதவிரاللَّمَمَ ؕசிறு பிழைகளைاِنَّநிச்சயமாகرَبَّكَஉம்முடைய இறைவன்وَاسِعُவிசாலமானவன்الْمَغْفِرَةِ ؕமன்னிப்பதில்هُوَஅவன்اَعْلَمُநன்கு அறிந்தவன்بِكُمْஉங்களைப் பற்றிاِذْபோதுاَنْشَاَكُمْஉங்களை உருவாக்கியمِّنَஇருந்துالْاَرْضِபூமியில்وَ اِذْமேலும் போதுاَنْتُمْநீங்கள்اَجِنَّةٌகருக்களாகفِیْஇல்بُطُوْنِவயிறுகளில்اُمَّهٰتِكُمْ ۚஉங்கள் தாய்களின்فَلَاஎனவே வேண்டாம்تُزَكُّوْۤاபரிசுத்தமானவர்கள் எனக் கூறிக்கொள்ளاَنْفُسَكُمْ ؕஉங்களையேهُوَஅவன்اَعْلَمُநன்கு அறிந்தவன்بِمَنِஎவர்اتَّقٰی۠இறையச்சம் கொண்டவர் என்பதை
அல்லதீன யஜ்தனிBபூன கBபா'இரல் இத்மி வல்Fபவா ஹிஷ இல்லல் லமம்; இன்ன ரBப்Bபக வாஸி'உல் மக்Fபிரஹ்; ஹுவ அஃலமு Bபிகும் இத் அன்ஷ அகும் மினல் அர்ளி வ இத் அன்தும் அஜின்னதுன் Fபீ Bபுதூனி உம்ம ஹாதிகும் Fபலா துZஜக்கூ அன்Fபுஸகும் ஹுவ அஃலமு Bபிமனித் தகா
(நன்மை செய்வோர் யார் எனின்) எவர்கள் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள்; நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன்; அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கிய போது, நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும், உங்களை நன்கு அறிந்தவன் - எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் - யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான்.  
اَفَرَءَیْتَ الَّذِیْ تَوَلّٰی ۟ۙ
اَفَرَءَیْتَபார்த்தீரா?الَّذِیْஎவன்تَوَلّٰیۙபுறக்கணித்தானோ
அFபர'அய்தல் லதீ தவல்லா
(நபியே! உறுதியின்றி உம்மை விட்டும் முகம்) திரும்பிக் கொண்டனர் பார்த்தீரா?
وَاَعْطٰی قَلِیْلًا وَّاَكْدٰی ۟
وَ اَعْطٰیமேலும் கொடுத்தான்قَلِیْلًاசிறிதளவேوَّ اَكْدٰیமேலும் நிறுத்திக் கொண்டான்
வ அஃதா கலீல(ன்)வ் வ அக்தா
அவன் ஒரு சிறிதே கொடுத்தான்; பின்னர் (கொடுக்க வேண்டியதைக் கொடாது) நிறுத்திக் கொண்டான்.
اَعِنْدَهٗ عِلْمُ الْغَیْبِ فَهُوَ یَرٰی ۟
اَعِنْدَهٗஅவனிடம் உள்ளதாعِلْمُஅறிவுالْغَیْبِமறைவானவற்றின்فَهُوَஎனவே அவன்یَرٰیகாண்கிறான்
அ'இன்தஹூ 'இல்முல் கய்Bபி Fபஹுவ யரா
அவனிடம் மறைவானவை பற்றிய அறிவு இருந்து, அப்பால் (அதை) அவன் பார்க்கிறானா?
اَمْ لَمْ یُنَبَّاْ بِمَا فِیْ صُحُفِ مُوْسٰی ۟ۙ
اَمْஅல்லதுلَمْஇல்லைیُنَبَّاْஅறிவிக்கப்படبِمَاஎதைப்பற்றிفِیْஉள்ளصُحُفِஏடுகளில்مُوْسٰیۙமூஸாவின்
அம் லம் யுனBப்Bபா Bபிமா Fபீ ஸுஹுஹ்Fபி மூஸா
அல்லது, மூஸாவின் ஸுஹுஃபில் - வேதத்தில் இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?
وَاِبْرٰهِیْمَ الَّذِیْ وَ ۟ۙ
وَ اِبْرٰهِیْمَஇன்னும் இப்ராஹீமும்الَّذِیْஎவர்وَفّٰۤیۙமுழுமையாக நிறைவேற்றினாரோ
வ இBப்ராஹீமல் லதீ வFப்Fபா
(அல்லாஹ்வின் ஆணையைப் பூரணமாக) நிறைவேற்றிய இப்ராஹீமுடைய (ஆகமங்களிலிருந்து அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?)
اَلَّا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰی ۟ۙ
اَلَّاஎன்றுتَزِرُசுமக்காதுوَازِرَةٌசுமை சுமக்கும் ஆத்மாوِّزْرَசுமையைاُخْرٰیۙமற்றொருவரின்
அல்லா தZஜிரு வாZஜிரது(ன்)வ் விZஜ்ர உக்ரா
(அதாவது:) சுமக்கிறவன் பிறிதொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான்;
وَاَنْ لَّیْسَ لِلْاِنْسَانِ اِلَّا مَا سَعٰی ۟ۙ
وَ اَنْமேலும்لَّیْسَஇல்லைلِلْاِنْسَانِமனிதனுக்குاِلَّاதவிரمَاஎதனைسَعٰیۙமுயற்சித்தானோ
வ அல் லய்ஸ லில் இன்ஸானி இல்லா மா ஸ'ஆ
இன்னும், மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை.
وَاَنَّ سَعْیَهٗ سَوْفَ یُرٰی ۪۟
وَ اَنَّமேலும் நிச்சயமாகسَعْیَهٗஅவனுடைய முயற்சிسَوْفَவிரைவில்یُرٰی۪காணப்படும்
வ அன்ன ஸஃயஹூ ஸவ்Fப யுரா
அன்றியும், நிச்சயமாக அவன் முயற்சி(யின் பலன்) பின் அவனுக்குக் காண்பிக்கப்படும்.
ثُمَّ یُجْزٰىهُ الْجَزَآءَ الْاَوْفٰی ۟ۙ
ثُمَّபின்னர்یُجْزٰىهُஅதற்காக அவருக்குக் கொடுக்கப்படும்الْجَزَآءَகூலியைالْاَوْفٰیۙமுழுமையான
தும்ம யுஜ்Zஜாஹுல் ஜZஜா 'அல் அவ்Fபா
பின்னர், அதற்கு நிறப்பமான கூலியாக, அவன் கூலி வழங்கப்படுவான்.
وَاَنَّ اِلٰی رَبِّكَ الْمُنْتَهٰی ۟ۙ
وَ اَنَّமேலும் நிச்சயமாகاِلٰیஇடமேرَبِّكَஉமது இறைவனின்الْمُنْتَهٰیۙஇறுதி முடிவு
வ அன்ன இலா ரBப்Bபிகல் முன்தஹா
மேலும் உம் இறைவனின் பால்தான் இறுதி (மீளுதல்) இருக்கிறது.
وَاَنَّهٗ هُوَ اَضْحَكَ وَاَبْكٰی ۟ۙ
وَ اَنَّهٗமேலும் நிச்சயமாக அவன்هُوَஅவனேاَضْحَكَசிரிக்க வைத்தான்وَ اَبْكٰیۙமேலும் அழ வைத்தான்
வ அன்னஹூ ஹுவ அள்ஹக வ அBப்கா
அன்றியும், நிச்சயமாக அவனே சிரிக்க வைக்கிறான்; அழச் செய்கிறான்.
وَاَنَّهٗ هُوَ اَمَاتَ وَاَحْیَا ۟ۙ
وَ اَنَّهٗமேலும் நிச்சயமாக அவன்هُوَஅவனேاَمَاتَமரணிக்கச் செய்கிறான்وَ اَحْیَاۙமேலும் உயிர்ப்பிக்கிறான்
வ அன்னஹூ ஹுவ அமாத வ அஹ்யா
இன்னும் நிச்சயமாக அவனே மரணிக்கச் செய்கிறான்; இன்னும் உயிர்ப்பிக்கிறான்.
وَاَنَّهٗ خَلَقَ الزَّوْجَیْنِ الذَّكَرَ وَالْاُ ۟ۙ
وَ اَنَّهٗமேலும் அவன்தான்خَلَقَபடைத்தான்الزَّوْجَیْنِஇரு இணைகளைالذَّكَرَஆண்وَ الْاُنْثٰیۙமற்றும் பெண்
வ அன்னஹூ கலகZஜ் Zஜவ்ஜய்னித் தகர வல் உன்தா
இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் -
مِنْ نُّطْفَةٍ اِذَا تُمْنٰی ۪۟
مِنْஇருந்துنُّطْفَةٍவிந்துத்துளிاِذَاபோதுتُمْنٰی۪செலுத்தப்படும்
மின் னுத்Fபதின் இதா தும்னா
(கர்ப்பக் கோளறையில்) செலுத்தப் படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு.
وَاَنَّ عَلَیْهِ النَّشْاَةَ الْاُخْرٰی ۟ۙ
وَ اَنَّமேலும் நிச்சயமாகعَلَیْهِஅவன் மீதேالنَّشْاَةَபடைப்பதுالْاُخْرٰیۙமறுமுறை
வ அன்ன 'அலய்ஹின் னஷ் அதல் உக்ரா
நிச்சயமாக, மறுமுறை உயிர் கொடுத்து எழுப்புவதும், அவன் மீதே இருக்கிறது.
وَاَنَّهٗ هُوَ اَغْنٰی وَاَقْنٰی ۟ۙ
وَ اَنَّهٗமேலும் நிச்சயமாக அவன்தான்هُوَஅவன்اَغْنٰیசெல்வந்தனாக்கினான்وَ اَقْنٰیۙமேலும் திருப்தியாக்கினான்
வ அன்னஹூ ஹுவ அக்னா வ அக்னா
நிச்சயமாக அவனே தேவையறச் செய்து சீமானாக்குகிறான்.
وَاَنَّهٗ هُوَ رَبُّ الشِّعْرٰی ۟ۙ
وَ اَنَّهٗமேலும் நிச்சயமாக அவன்هُوَஅவனேرَبُّஇறைவன்الشِّعْرٰیۙஷிஃரா (எனும் நட்சத்திரத்தின்)
வ அன்னஹூ ஹுவ ரBப்Bபுஷ் ஷிஃரா
நிச்சயமாக அவன் தான் (இவர்கள் வணங்கும்) ஷிஃரா (எனும் கோளத்திற்கும்) இறைவன்.
وَاَنَّهٗۤ اَهْلَكَ عَادَا لْاُوْلٰی ۟ۙ
وَ اَنَّهٗۤமேலும் நிச்சயமாக அவன்தான்اَهْلَكَஅழித்தான்عَادَاஆது சமுதாயத்தைِ۟الْاُوْلٰیۙமுந்தைய
வ அன்னஹூ அஹ்லக் 'ஆதனில் ஊலா
நிச்சயமாக முந்திய ஆ(து கூட்டத்)தை அழித்தவனும் அவன்தான்.
وَثَمُوْدَاۡ فَمَاۤ اَبْقٰی ۟ۙ
وَ ثَمُوْدَاۡமற்றும் ஸமூது மக்களையும்فَمَاۤஎனவே இல்லைاَبْقٰیۙஅவன் விட்டுவைத்தான்
வ தமூத Fபமா அBப்கா
“ஸமூது” (சமூகத்தாரையும் அழித்தவன் அவனே); எனவே, (அவர்களில் எவரையும் மிஞ்சுமாறு) விடவில்லை.
وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُ ؕ اِنَّهُمْ كَانُوْا هُمْ اَظْلَمَ وَاَطْغٰی ۟ؕ
وَ قَوْمَமேலும் சமூகத்தையும்نُوْحٍநூஹின்مِّنْஇதற்குقَبْلُ ؕமுன்பேاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்هُمْஅவர்களேاَظْلَمَமிகவும் அநியாயக்காரர்களாகوَ اَطْغٰیؕமேலும் மிகவும் வரம்பு மீறியவர்களாகவும்
வ கவ்ம னூஹிம் மின் கBப்லு இன்னஹும் கானூ ஹும் அள்லம வ அத்கா
இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுவுடைய சமூகத்தாரையும் (அவன் தான் அழித்தான்,) நிச்சயமாக அவர்கள் பெரும் அநியாயக் காரர்களாகவும், அட்டூழியம் செய்தவர்களாகவும் இருந்தனர்.
وَالْمُؤْتَفِكَةَ اَهْوٰی ۟ۙ
وَ الْمُؤْتَفِكَةَதலைகீழாகப் புரட்டப்பட்ட ஊர்களையும்اَهْوٰیۙஅவன் வீழ்த்தினான்
வல் மு'தFபிகத அஹ்வா
அன்றியும், அவனே (லூத் சமூகத்தார் வாழ்ந்திருந்த) ஊர்களான முஃதஃபிகாவையும் அழித்தான்.
فَغَشّٰىهَا مَا غَشّٰی ۟ۚ
فَغَشّٰىهَاபின்னர் அதை மூடிக்கொண்டதுمَاஎதுغَشّٰیۚமூடியதோ
Fபகஷ்ஷாஹா மா கஷ்ஷா
அவ்வூர்களைச் சூழ வேண்டிய (தண்டனை) சூழ்ந்து கொண்டது.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكَ تَتَمَارٰی ۟
فَبِاَیِّஆகவே எந்தاٰلَآءِஅருட்கொடைகளில்رَبِّكَஉமது இறைவனின்تَتَمَارٰیநீ சந்தேகிக்கிறாய்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிக ததமாரா
எனவே, (மனிதனே!) உன்னுடைய இறைவனின் அருட் கொடைகளில் எதை நீ சந்தேகிக்கிறாய்?
هٰذَا نَذِیْرٌ مِّنَ النُّذُرِ الْاُوْلٰی ۟
هٰذَاஇவர்نَذِیْرٌஓர் எச்சரிக்கையாளர்مِّنَஇருந்துالنُّذُرِஎச்சரிக்கையாளர்களில்الْاُوْلٰیமுந்தைய
ஹாதா னதீரும் மினன் னுதுரில் ஊலா
இவர் முந்திய எச்சரிக்கையாளர்களி(ன் வரிசையி)லுள்ள எச்சரிக்கையாளர் தாம்.
اَزِفَتِ الْاٰزِفَةُ ۟ۚ
اَزِفَتِநெருங்கிவிட்டதுالْاٰزِفَةُۚநெருங்கி வரக்கூடியது
அZஜிFபதில் ஆZஜிFபஹ்
நெருங்கி வர வேண்டியது (அடுத்து) நெருங்கி விட்டது.
لَیْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ كَاشِفَةٌ ۟ؕ
لَیْسَஇல்லைلَهَاஅதற்குمِنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைكَاشِفَةٌؕநீக்குபவர்
லய்ஸ லஹா மின் தூனில் லாஹி காஷிFபஹ்
(அதற்குரிய நேரத்தில்) அல்லாஹ்வைத் தவிர அதை வெளியாக்குபவர் எவரும் இல்லை.
اَفَمِنْ هٰذَا الْحَدِیْثِ تَعْجَبُوْنَ ۟ۙ
اَفَمِنْஎனவே,هٰذَاஇந்தச்الْحَدِیْثِசெய்தியைக் கண்டுتَعْجَبُوْنَۙநீங்கள் வியப்படைகிறீர்களா?
அFபமின் ஹாதல் ஹதீதி தஃஜBபூன்
இச் செய்தியிலிருந்து நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?
وَتَضْحَكُوْنَ وَلَا تَبْكُوْنَ ۟ۙ
وَ تَضْحَكُوْنَமேலும் நீங்கள் சிரிக்கிறீர்கள்وَ لَاமேலும் இல்லைتَبْكُوْنَۙநீங்கள் அழுகிறீர்கள்
வ தள்ஹகூன வலா தBப்கூன்
(இதனைப் பற்றி) நீங்கள் சிரிக்கின்றீர்களா? நீங்கள் அழாமலும் இருக்கின்றீர்களா?
وَاَنْتُمْ سٰمِدُوْنَ ۟
وَ اَنْتُمْமேலும் நீங்கள்سٰمِدُوْنَஅலட்சியமாக இருப்பவர்கள்
வ அன்தும் ஸாமிதூன்
அலட்சியமாகவும் நீங்கள் இருக்கின்றீர்கள்.
فَاسْجُدُوْا لِلّٰهِ وَاعْبُدُوْا ۟
فَاسْجُدُوْاஆகவே ஸுஜூது செய்யுங்கள்لِلّٰهِஅல்லாஹ்வுக்குوَ اعْبُدُوْا۠۩மேலும் வணங்குங்கள்
Fபஸ்ஜுதூ லில்லாஹி வஃBபுதூ
ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்யுங்கள், அவனையே வணங்குங்கள்.