107. ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்)

மக்கீ, வசனங்கள்: 7

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اَرَءَیْتَ الَّذِیْ یُكَذِّبُ بِالدِّیْنِ ۟ؕ
اَرَءَیْتَநீர் பார்த்தீரா?الَّذِیْஎவன்یُكَذِّبُபொய்ப்பிக்கிறானோبِالدِّیْنِؕநியாயத்தீர்ப்பை
அர 'அய்தல் லதீ யுகத்திBபு Bபித்தீன்
(நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
فَذٰلِكَ الَّذِیْ یَدُعُّ الْیَتِیْمَ ۟ۙ
فَذٰلِكَஅவன்தான்الَّذِیْஎவன்یَدُعُّவிரட்டுகிறான்الْیَتِیْمَۙஅநாதையை
Fபதாலிகல் லதீ யது'உல்-யதீம்
பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
وَلَا یَحُضُّ عَلٰی طَعَامِ الْمِسْكِیْنِ ۟ؕ
وَ لَاமேலும் இல்லைیَحُضُّதூண்டுகிறான்عَلٰیமீதுطَعَامِஉணவளிப்பதின்الْمِسْكِیْنِؕஏழைக்கு
வ ல யஹுள்ளு 'அலா த'ஆமில் மிஸ்கீன்
மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
فَوَیْلٌ لِّلْمُصَلِّیْنَ ۟ۙ
فَوَیْلٌஆகவே கேடுதான்لِّلْمُصَلِّیْنَۙதொழுகையாளிகளுக்கு
Fப வய்லுல்-லில் முஸல்லீன்
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
الَّذِیْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَ ۟ۙ
الَّذِیْنَஎவர்கள்هُمْஅவர்கள்عَنْகுறித்துصَلَاتِهِمْதங்கள் தொழுகையைسَاهُوْنَۙஅலட்சியமாக இருக்கிறார்களோ
அல்லதீன ஹும் 'அன் ஸலாதிஹிம் ஸாஹூன்
அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
الَّذِیْنَ هُمْ یُرَآءُوْنَ ۟ۙ
الَّذِیْنَஎவர்கள்هُمْஅவர்கள்یُرَآءُوْنَۙபிறருக்குக் காட்டுகிறார்களோ
அல்லதீன ஹும் யுரா'ஊன்
அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
وَیَمْنَعُوْنَ الْمَاعُوْنَ ۟۠
وَ یَمْنَعُوْنَமேலும் அவர்கள் தடுக்கிறார்கள்الْمَاعُوْنَ۠அன்றாடத் தேவைப் பொருட்களை
வ யம்ன'ஊனல் மா'ஊன்
மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.