79. ஸூரத்துந் நாஜிஆத்(பறிப்பவர்கள்)
மக்கீ, வசனங்கள்: 46

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
79:1
79:1 وَالنّٰزِعٰتِ غَرْقًا ۙ‏
وَالنّٰزِعٰتِ பறிப்பவர்கள் மீது சத்தியமாக غَرْقًا ۙ‏ கடுமையாக
79:1. வன் னாZஜி 'ஆதி கர்கா
79:1. (பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான வானவர்)கள் மீது சத்தியமாக!
79:2
79:2 وَّالنّٰشِطٰتِ نَشْطًا ۙ‏
وَّالنّٰشِطٰتِ கைப்பற்றுவோர் மீது சத்தியமாக نَشْطًا ۙ‏ மென்மையாக
79:2. வன் னா ஷி தாதி னஷ்தா
79:2. (நல்லோர் உயிர்களை) இலேசாக கழற்றுப்பவர்(களான வானவர்)கள் மீதும் சத்தியமாக!
79:3
79:3 وَّالسّٰبِحٰتِ سَبْحًا ۙ‏
وَّالسّٰبِحٰتِ நீந்துவோர்மீது சத்தியமாக! سَبْحًا ۙ‏ நீந்துதல்
79:3. வஸ்ஸ் ஸாBபி-ஹாதி ஸBப்ஹா
79:3. வேகமாக நீந்திச் செல்பவர்களான (வானவர்கள்) மீதும் சத்தியமாக!
79:4
79:4 فَالسّٰبِقٰتِ سَبْقًا ۙ‏
فَالسّٰبِقٰتِ முந்துவோர் மீது சத்தியமாக سَبْقًا ۙ‏ முந்துதல்
79:4. Fபஸ்ஸ் ஸாBபி காதி ஸBப்கா
79:4. முந்தி முந்திச் செல்பவர்களான (வானவர்கள்) மீதும் சத்தியமாக!
79:5
79:5 فَالْمُدَبِّرٰتِ اَمْرًا‌ ۘ‏
فَالْمُدَبِّرٰتِ நிர்வகிப்போர் மீது சத்தியமாக! اَمْرًا‌ ۘ‏ காரியத்தை
79:5. Fபல் மு தBப்-Bபி ராதி அம்ரா
79:5. ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான வானவர்)கள் மீதும் சத்தியமாக!
79:6
79:6 يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ ۙ‏
يَوْمَ நாளில் تَرْجُفُ அதிர்ச்சியுறுகின்ற الرَّاجِفَةُ ۙ‏ பூமி
79:6. யவ்ம தர்ஜுFபுர் ராஜிFபா
79:6. நடுங்கக்கூடியது (பூமி) நடுங்கும் அந்நாளில்
79:7
79:7 تَتْبَعُهَا الرَّادِفَةُ ؕ‏
تَتْبَعُهَا அதைத் தொடரும் الرَّادِفَةُ ؕ‏ பின்தொடரக்கூடியது
79:7. தத்Bப'உ ஹர் ராதிFபா
79:7. அதனைத் தொடரக்கூடிய (நிலநடுக்கமானது) தொடர்ந்து வரும்.
79:8
79:8 قُلُوْبٌ يَّوْمَٮِٕذٍ وَّاجِفَةٌ ۙ‏
قُلُوْبٌ உள்ளங்கள் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் وَّاجِفَةٌ ۙ‏ நடுங்கும்
79:8. குலூBபு(ன்)ய்-யவ் மாஇதிவ்-வாஜி-Fபா
79:8. அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.
79:9
79:9 اَبْصَارُهَا خَاشِعَةٌ‌ ۘ‏
اَبْصَارُهَا அவற்றின் பார்வைகள் خَاشِعَةٌ‌ ۘ‏ கீழ் நோக்கும்
79:9. அBப்ஸா ருஹா கஷி'அஹ்
79:9. அவர்களின் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.
79:10
79:10 يَقُوْلُوْنَ ءَاِنَّا لَمَرْدُوْدُوْنَ فِى الْحَـافِرَةِ ؕ‏
يَقُوْلُوْنَ கூறுகிறார்கள் ءَاِنَّا ?/நிச்சயமாக நாம் لَمَرْدُوْدُوْنَ திருப்பப்படுவோமா? فِى الْحَـافِرَةِ ؕ‏ முந்தியநிலைமைக்கு
79:10. ய கூ லூன அ-இன்ன லமர் தூ தூன Fபில் ஹாFபிரஹ்
79:10. "நாம் நிச்சயமாக முந்தைய நிலைக்குத் திரும்பப்படுவோமா?" என்று அவர்கள் கூறுகிறார்கள்.
79:11
79:11 ءَاِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً ؕ‏
ءَاِذَا كُنَّا நாம் மாறி இருந்தாலுமா? عِظَامًا எலும்புகளாக نَّخِرَةً ؕ‏ உக்கிப்போன
79:11. அய்தா குன்னா 'இளா மன்-னகிரஹ்
79:11. நாம் மக்கிப்போன எலும்புகளாக ஆகிவிட்டபோதிலுமா?
79:12
79:12 قَالُوْا تِلْكَ اِذًا كَرَّةٌ خَاسِرَةٌ‌ ۘ‏
قَالُوْا கூறுகிறார்கள் تِلْكَ அது اِذًا அவ்வாறாயின் كَرَّةٌ திரும்புதல் خَاسِرَةٌ‌ ۘ‏ நஷ்டமான
79:12. காலு தில்க இதன் கர்ரதுன் காஸிரஹ்.
79:12. ''அப்படியானால், அது பெரும் நஷ்டமுண்டாக்கும் திரும்புதலேயாகும்'' என்றும் கூறுகின்றார்கள்.
79:13
79:13 فَاِنَّمَا هِىَ زَجْرَةٌ وَّاحِدَةٌ ۙ‏
فَاِنَّمَا هِىَ அதுவெல்லாம் زَجْرَةٌ ஓர் அதட்டல்தான் وَّاحِدَةٌ ۙ‏ ஒரே
79:13. Fப இன்ன ம ஹிய Zஜஜ்ரதுவ்-வாஹிதா
79:13. ஆனால், (யுக முடிவுக்கு) அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம்தான்.
79:14
79:14 فَاِذَا هُمْ بِالسَّاهِرَةِ ؕ‏
فَاِذَا هُمْ அப்போது அவர்கள் بِالسَّاهِرَةِ ؕ‏ பூமியின் மேற்பரப்பில்
79:14. Fப-இதா ஹும் Bபிஸ்ஸ் ஸாஹிரஹ்
79:14. அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் கூடிவிடுவார்கள்.
79:15
79:15 هَلْ اَتٰٮكَ حَدِيْثُ مُوْسٰى‌ۘ‏
هَلْ اَتٰٮكَ உமக்கு வந்ததா? حَدِيْثُ செய்தி مُوْسٰى‌ۘ‏ மூஸாவுடைய
79:15. ஹல் அதாக ஹதீது முஸா
79:15. (நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?
79:16
79:16 اِذْ نَادٰٮهُ رَبُّهٗ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى‌ۚ‏
اِذْ نَادٰٮهُ அவரை அழைத்த சமயத்தை رَبُّهٗ அவருடைய இறைவன் بِالْوَادِ பள்ளத்தாக்கில் الْمُقَدَّسِ பரிசுத்தமான طُوًى‌ۚ‏ துவா
79:16. இத் னதாஹு ரBப்Bபுஹு Bபில் வாதில்-முகத் தஸி துவா
79:16. 'துவா' என்னும் புனிதப் பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,
79:17
79:17 اِذْهَبْ اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰى ۖ‏
اِذْهَبْ செல்வீராக اِلٰى فِرْعَوْنَ ஃபிர்அவ்னிடம் اِنَّهٗ நிச்சயமாக அவன் طَغٰى ۖ‏ வரம்பு மீறினான்
79:17. இத்ஹBப் இலா Fபிர்'அவ்ன இன்னஹு தகா.
79:17. "நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்."
79:18
79:18 فَقُلْ هَلْ لَّكَ اِلٰٓى اَنْ تَزَكّٰى ۙ‏
فَقُلْ இன்னும் கூறுவீராக هَلْ لَّكَ உனக்கு விருப்பமா? اِلٰٓى اَنْ تَزَكّٰى ۙ‏ நீ பரிசுத்தமடைவதற்கு
79:18. Fபகுல் ஹல் லக இலா-அன் தZஜக்கா.
79:18. "இன்னும், (ஃபிர்அவ்னிடம்) 'பாவங்களை விட்டும் பரிசுத்தமாக வேண்டும் என்ற விருப்பம் உன்னிடம் இருக்கிறதா?' என்று கேளும்."
79:19
79:19 وَاَهْدِيَكَ اِلٰى رَبِّكَ فَتَخْشٰى‌ۚ‏
وَاَهْدِيَكَ இன்னும் உனக்கு நான் நேர்வழி காட்டுவதற்கு اِلٰى பக்கம் رَبِّكَ உன் இறைவன் فَتَخْشٰى‌ۚ‏ ஆகவே நீ பயந்து கொள்வாய்
79:19. வ அஹ்தி யக இல ரBப்Bபிக Fபதக் ஷா
79:19. "அப்படியானால், உன்னுடைய இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்: அப்போது, நீ (அவனை) அஞ்சுவாய்" (என கூறுமாறு இறைவன் பணித்தான்).
79:20
79:20 فَاَرٰٮهُ الْاٰيَةَ الْكُبْرٰى ۖ‏
فَاَرٰٮهُ ஆகவே அவனுக்குக் காண்பித்தார் الْاٰيَةَ அத்தாட்சியை الْكُبْرٰى ۖ‏ மிகப்பெரிய
79:20. Fப அராஹுல்ஆயதல் குBப்ரா.
79:20. ஆகவே, மூஸா அவனுக்குப் பெரும் அத்தாட்சியைக் காண்பித்தார்.
79:21
79:21 فَكَذَّبَ وَعَصٰى ۖ‏
فَكَذَّبَ ஆனால், அவன் பொய்ப்பித்தான் وَعَصٰى ۖ‏ இன்னும் மாறுசெய்தான்
79:21. Fப கத்தBப வ அஸா.
79:21. ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.
79:22
79:22 ثُمَّ اَدْبَرَ يَسْعٰىۖ‏
ثُمَّ பிறகு اَدْبَرَ விலகினான் يَسْعٰىۖ‏ முயன்றவனாக
79:22. தும்ம அத்Bபர யஸ்'ஆ.
79:22. பிறகு, அவன் (அவரை விட்டுத்) திரும்பி, (அவருக்கெதிராகச் சதிசெய்ய) முயன்றான்.
79:23
79:23 فَحَشَرَ فَنَادٰىۖ‏
فَحَشَرَ இன்னும் ஒன்று சேர்த்தான் فَنَادٰىۖ‏ இன்னும் கூவி அழைத்தான்
79:23. Fப ஹஷர Fபனதா.
79:23. அன்றியும், (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கையிட்டான்.
79:24
79:24 فَقَالَ اَنَا رَبُّكُمُ الْاَعْلٰى ۖ‏
فَقَالَ இன்னும் கூறினான் اَنَا நான்தான் رَبُّكُمُ உங்கள் இறைவன் الْاَعْلٰى ۖ‏ மிக உயர்வான
79:24. Fபகால அன ரBப்Bபு குமுல்-அஃலா.
79:24. "நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன்" என்று (அவர்களிடம்) கூறினான்.
79:25
79:25 فَاَخَذَهُ اللّٰهُ نَڪَالَ الْاٰخِرَةِ وَالْاُوْلٰى ؕ‏
فَاَخَذَهُ ஆகவே அவனைப் பிடித்தான் اللّٰهُ அல்லாஹ் نَڪَالَ தண்டனையைக் கொண்டு الْاٰخِرَةِ மறுமையின் وَالْاُوْلٰى ؕ‏ இன்னும் இம்மை
79:25. Fப-அக தஹுல் லாஹு னகலல் ஆகிரதி வல்-ஊலா.
79:25. இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனைப் பிடித்துக்கொண்டான்.
79:26
79:26 اِنَّ فِىْ ذٰلِكَ لَعِبْرَةً لِّمَنْ يَّخْشٰىؕ
اِنَّ நிச்சயமாக فِىْ ذٰلِكَ இதில் இருக்கிறது لَعِبْرَةً ஒரு படிப்பினை لِّمَنْ يَّخْشٰىؕ‏ பயப்படுகிறவருக்கு
79:26. இன்ன Fபீ தாலிக ல'இBப்ரதல் லிமய்ய்-யக்ஷா
79:26. நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்கிறவருக்குப் படிப்பினை இருக்கிறது.
79:27
79:27 ءَاَنْتُمْ اَشَدُّ خَلْقًا اَمِ السَّمَآءُ‌ ؕ بَنٰٮهَا‏
ءَاَنْتُمْ நீங்களா? اَشَدُّ மிகக் கடினமானவர்கள் خَلْقًا படைப்பால் اَمِ அல்லது السَّمَآءُ‌ ؕ வானமா? بَنٰٮهَا‏ அதை அமைத்தான்
79:27. அ-அன்தும் அ ஷத்து கல்கன் அமிஸ் ஸமா-உ Bபனாஹா.
79:27. படைப்பால் நீங்கள் மிகக் கடினமானவர்களா? அல்லது வானமா? அதை அவனே படைத்தான்.
79:28
79:28 رَفَعَ سَمْكَهَا فَسَوّٰٮهَا ۙ‏
رَفَعَ உயர்த்தினான் سَمْكَهَا அதன் முகட்டை فَسَوَّٮهَا ۙ‏ இன்னும் அதை ஒழுங்குபடுத்தினான்
79:28. ரFப்'அ ஸம் கஹ Fபஸவ் வாஹா
79:28. அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்குபடுத்தினான்.
79:29
79:29 وَ اَغْطَشَ لَيْلَهَا وَاَخْرَجَ ضُحٰٮهَا‏
وَ اَغْطَشَ இன்னும் இருளாக்கினான் لَيْلَهَا அதன் இரவை وَاَخْرَجَ இன்னும் வெளியாக்கினான் ضُحٰٮهَا‏ அதன் பகலை
79:29. வ அக்தஷ லய்லஹ வ அக்ரஜ ளுஹாஹா.
79:29. அவன்தான் அதனுடைய இரவை இருளுடையதாக ஆக்கினான்; இன்னும், அதனுடைய பகலையும் (சூரிய வெளிச்சத்தைக் கொண்டு) வெளியாக்கினான்.
79:30
79:30 وَالْاَرْضَ بَعْدَ ذٰلِكَ دَحٰٮهَا ؕ‏
وَالْاَرْضَ இன்னும் பூமியை بَعْدَ ذٰلِكَ அதன் பின்னர் دَحٰٮهَا ؕ‏ அதை விரித்தான்
79:30. வல் அர்ள Bபஃத தாலிக தஹாஹா.
79:30. இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.
79:31
79:31 اَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعٰٮهَا‏
اَخْرَجَ வெளியாக்கினான் مِنْهَا அதிலிருந்து مَآءَهَا அதன் நீரை وَمَرْعٰٮهَا‏ இன்னும் அதன் மேய்ச்சலை
79:31. அக்ரஜ மின்ஹ மா-அஹ வ மர் 'ஆஹா.
79:31. அதிலிருந்து அதன் நீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.
79:32
79:32 وَالْجِبَالَ اَرْسٰٮهَا ۙ‏
وَالْجِبَالَ இன்னும் மலைகளை اَرْسٰٮهَا ۙ‏ அவற்றை நிறுவினான்
79:32. வல் ஜிBபல அர்ஸாஹா.
79:32. அதில், மலைகளையும் அவனே நிலைநாட்டினான்.
79:33
79:33 مَتَاعًا لَّـكُمْ وَلِاَنْعَامِكُمْؕ‏
مَتَاعًا பலன் தருவதற்காக لَّـكُمْ உங்களுக்கும் وَلِاَنْعَامِكُمْؕ‏ இன்னும் உங்கள் கால்நடைகளுக்கும்
79:33. மதா'அல் லகும் வலி அன் 'ஆமிகும்.
79:33. உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).
79:34
79:34 فَاِذَا جَآءَتِ الطَّآمَّةُ الْكُبْرٰى ۖ‏
فَاِذَا جَآءَتِ ஆகவே, வந்தால் الطَّآمَّةُ பயங்கரமானஅழிவு الْكُبْرٰى ۖ‏ மிகப்பெரிய
79:34. Fப-இதா ஜா'அதித் தாம் மதுல் குBப்ரா.
79:34. எனவே, பேரமளியாகிய இரண்டாவது ஸூர் (எக்காளம் ஊதுதல்) வந்துவிட்டால்,
79:35
79:35 يَوْمَ يَتَذَكَّرُ الْاِنْسَانُ مَا سَعٰىۙ‏
يَوْمَ يَتَذَكَّرُ (அந்)நாளில் நினைத்துப் பார்ப்பான் الْاِنْسَانُ மனிதன் مَا سَعٰىۙ‏ தான் செய்ததை
79:35. யவ்ம யத தக்கருல் இன்ஸானு ம ஸ'ஆ.
79:35. அந்நாளில் மனிதன், தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.
79:36
79:36 وَبُرِّزَتِ الْجَحِيْمُ لِمَنْ يَّرٰى‏
وَبُرِّزَتِ இன்னும் வெளியாக்கப்படும் الْجَحِيْمُ நரகம் لِمَنْ يَّرٰى‏ காண்பவருக்கு
79:36. வ Bபுர்ரிZஜதில்-ஜஹீமு லிம(ன்)ய்-யரா.
79:36. அப்போது பார்ப்போருக்கு (காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
79:37
79:37 فَاَمَّا مَنْ طَغٰىۙ‏
فَاَمَّا مَنْ ஆகவே, யார் طَغٰىۙ‏ வரம்பு மீறினானோ
79:37. Fப அம்மா மன் தகா.
79:37. எனவே, எவன் வரம்பை மீறினானோ-
79:38
79:38 وَاٰثَرَ الْحَيٰوةَ الدُّنْيَا ۙ‏
وَاٰثَرَ இன்னும் தேர்ந்தெடுத்தானோ الْحَيٰوةَ الدُّنْيَا ۙ‏ உலக வாழ்க்கை
79:38. வ ஆதரல் ஹயாதத் துன்யா
79:38. இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ?
79:39
79:39 فَاِنَّ الْجَحِيْمَ هِىَ الْمَاْوٰىؕ‏
فَاِنَّ நிச்சயமாக الْجَحِيْمَ هِىَ நரகம்தான் الْمَاْوٰىؕ‏ தங்குமிடம்
79:39. Fப இன்னல் ஜஹீம ஹியல் மா'வா.
79:39. நிச்சயமாக நரகம் அதுதான் (அவனுடைய) தங்குமிடமாகும்.
79:40
79:40 وَاَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ وَ نَهَى النَّفْسَ عَنِ الْهَوٰىۙ‏
وَاَمَّا مَنْ ஆகவே யார் خَافَ பயந்தான் مَقَامَ (தான்) நிற்கின்ற நாளை رَبِّهٖ தன் இறைவனுக்கு முன் وَ نَهَى இன்னும் தடுத்தானோ النَّفْسَ ஆன்மாவை عَنِ الْهَوٰىۙ‏ இச்சையை விட்டு
79:40. வ அம்மா மன் காFப மகாம ரBப்Bபிஹீ வ னஹன் னFப்ஸ 'அனில் ஹவா
79:40. எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி, (தன்) மனதை இச்சைகளை விட்டும் விலக்கிக் கொண்டானோ-
79:41
79:41 فَاِنَّ الْجَـنَّةَ هِىَ الْمَاْوٰىؕ‏
فَاِنَّ நிச்சயமாக الْجَـنَّةَ هِىَ சொர்க்கம்தான் الْمَاْوٰىؕ‏ தங்குமிடம்
79:41. Fப இன்னல் ஜன்னத ஹியல் ம'வா
79:41. நிச்சயமாக (அவனுக்குச்) சுவர்க்கம் அதுதான் தங்குமிடமாகும்.
79:42
79:42 يَسْــٴَــلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَيَّانَ مُرْسٰٮهَا ؕ‏
يَسْــٴَــلُوْنَكَ உம்மிடம் கேட்கிறார்கள் عَنِ السَّاعَةِ மறுமையைப் பற்றி اَيَّانَ எப்போது مُرْسٰٮهَا ؕ‏ அது நிகழும்
79:42. யஸ்'அலூனக 'அனிஸ் ஸா'அதி அய்யான முர்ஸாஹா
79:42. (நபியே! மறுமையின்) நேரத்தைப் பற்றி - "அது எப்போது ஏற்படும்?" என்று அவர்கள் உம்மைக் கேட்கின்றார்கள்.
79:43
79:43 فِيْمَ اَنْتَ مِنْ ذِكْرٰٮهَاؕ‏
فِيْمَ எதில் இருக்கிறீர்? اَنْتَ நீர் مِنْ ذِكْرٰٮهَاؕ‏ அதைக் கூறுவதற்கு
79:43. Fபீம அன்த மின் திக்ராஹா
79:43. அந்த நேரத்தைப் பற்றி குறிப்பிடுவதற்கு நீர் எதில் இருக்கிறீர்?
79:44
79:44 اِلٰى رَبِّكَ مُنْتَهٰٮهَاؕ‏
اِلٰى رَبِّكَ உம் இறைவன் பக்கம் தான் مُنْتَهٰٮهَاؕ‏ அதன் முடிவு (இருக்கிறது)
79:44. இலா ரBப்Bபிக முன்தஹா ஹா
79:44. அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.
79:45
79:45 اِنَّمَاۤ اَنْتَ مُنْذِرُ مَنْ يَّخْشٰٮهَاؕ‏
اِنَّمَاۤ اَنْتَ நீரெல்லாம் مُنْذِرُ எச்சரிப்பவரே مَنْ يَّخْشٰٮهَاؕ‏ அதைப் பயப்படுகிறவரை
79:45. இன்னமா அன்த முன்திரு மய்ய் யக்ஷாஹா
79:45. அதைப் பயப்படுவோருக்கு நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர்தாம்.
79:46
79:46 كَاَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوْۤا اِلَّا عَشِيَّةً اَوْ ضُحٰٮهَا
كَاَنَّهُمْ போன்றே/நிச்சயமாக அவர்கள் يَوْمَ நாளில் يَرَوْنَهَا அவர்கள் அதைக் காணுகின்ற لَمْ يَلْبَثُوْۤا தங்கவில்லை اِلَّا தவிர عَشِيَّةً ஒரு மாலை اَوْ அல்லது ضُحٰٮهَا‏ அதன் முற்பகல்
79:46. க அன்னஹும் யவ்ம யரவ்னஹா லம் யல்Bபதூ இல்லா 'அஷிய்யதன் அவ் ளுஹாஹா
79:46. நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ (ஓர் சொற்ப நேரமே) அன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.