102. ஸூரத்துத் தகாஸுர் (பேராசை)

மக்கீ, வசனங்கள்: 8

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اَلْهٰىكُمُ التَّكَاثُرُ ۟ۙ
اَلْهٰىكُمُஉங்களை பராக்காக்கிவிட்டதுالتَّكَاثُرُۙஅதிகமாகத் தேடிச் சேகரிப்பது
அல் ஹாகு முத் தகதுர்
செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-
حَتّٰی زُرْتُمُ الْمَقَابِرَ ۟ؕ
حَتّٰیவரைزُرْتُمُநீங்கள் சந்திக்கும்الْمَقَابِرَؕமண்ணறைகளை
ஹத்த Zஜுர்துமுல்-மகாBபிர்
நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை.
كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَ ۟ۙ
كَلَّاஅவ்வாறல்லسَوْفَவிரைவில்تَعْلَمُوْنَۙநீங்கள் அறிந்து கொள்வீர்கள்
கல்லா ஸவ்Fப தஃலமூன்
அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَ ۟ؕ
ثُمَّபின்னர்كَلَّاஅவ்வாறல்லسَوْفَவிரைவில்تَعْلَمُوْنَؕநீங்கள் அறிந்துகொள்வீர்கள்
தும்ம கல்லா ஸவ்Fப தஃலமூன்
பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْیَقِیْنِ ۟ؕ
كَلَّاஅவ்வாறல்லلَوْஎன்றால்تَعْلَمُوْنَஅறிவீர்கள்عِلْمَஅறிவைالْیَقِیْنِؕஉறுதியான
கல்லா லவ் தஃலமூன 'இல்மல் யகீன்
அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).
لَتَرَوُنَّ الْجَحِیْمَ ۟ۙ
لَتَرَوُنَّநிச்சயமாகக் காண்பீர்கள்الْجَحِیْمَۙநரகத்தை
லதர-வுன் னல் ஜஹீம்
நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
ثُمَّ لَتَرَوُنَّهَا عَیْنَ الْیَقِیْنِ ۟ۙ
ثُمَّபின்னர்لَتَرَوُنَّهَاநிச்சயமாக நீங்கள் அதனைக் காண்பீர்கள்عَیْنَகண்ணால்الْیَقِیْۙنِஉறுதியாக
தும்ம லதர வுன்னஹா 'அய்னல் யகீன்
பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.
ثُمَّ لَتُسْـَٔلُنَّ یَوْمَىِٕذٍ عَنِ النَّعِیْمِ ۟۠
ثُمَّபின்னர்لَتُسْـَٔلُنَّநிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்یَوْمَىِٕذٍஅந்நாளில்عَنِபற்றிالنَّعِیْمِ۠அருட்கொடைகளை
தும்ம லதுஸ் அலுன்ன யவ்ம-இதின் 'அனின் ன'ஈம்
பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.