111. ஸூரத்துல் லஹப் (ஜுவாலை) / அல் மஸத் (ஈச்சங்கயிறு)

மக்கீ, வசனங்கள்: 5

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
تَبَّتْ یَدَاۤ اَبِیْ لَهَبٍ وَّتَبَّ ۟ؕ
تَبَّتْநாசமாகட்டும்یَدَاۤஇரு கைகளும்اَبِیْஅபூلَهَبٍலஹபின்وَّ تَبَّؕமேலும் அவன் அழிந்தான்
தBப்Bபத் யதா அBபீ லஹBபி(ன்)வ்-வ தBப்Bப்
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும்.
مَاۤ اَغْنٰی عَنْهُ مَالُهٗ وَمَا كَسَبَ ۟ؕ
مَاۤஇல்லைاَغْنٰیபயனளித்ததுعَنْهُஅவனுக்குمَالُهٗஅவனது செல்வம்وَ مَاஇன்னும் எதைكَسَبَؕசம்பாதித்தானோ
மா அக்னா 'அன்ஹு மாலுஹூ வ ம கஸBப்
அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
سَیَصْلٰی نَارًا ذَاتَ لَهَبٍ ۟ۚۖ
سَیَصْلٰیவிரைவில் அவர் நுழைவார்نَارًاநெருப்பில்ذَاتَஉடையلَهَبٍۚۖசுவாலை
ஸ-யஸ்லா னாரன் தாத லஹBப்
விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
وَّامْرَاَتُهٗ ؕ حَمَّالَةَ الْحَطَبِ ۟ۚ
وَّ امْرَاَتُهٗ ؕமேலும் அவனது மனைவியும்حَمَّالَةَசுமப்பவள்الْحَطَبِۚவிறகு
வம்ர-அதுஹூ ஹம்மா லதல்-ஹதBப்
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
فِیْ جِیْدِهَا حَبْلٌ مِّنْ مَّسَدٍ ۟۠
فِیْஇல்جِیْدِهَاஅவளுடைய கழுத்துحَبْلٌஒரு கயிறுمِّنْஇருந்துمَّسَدٍ۠முறுக்கப்பட்ட நார்
Fபீ ஜீதிஹா ஹBப்லும் மிம்-மஸத்
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).