92. ஸூரத்துல் லைல் (இரவு)

மக்கீ, வசனங்கள்: 21

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالَّیْلِ اِذَا یَغْشٰی ۟ۙ
وَ الَّیْلِஇரவின் மீது சத்தியமாகاِذَاபொழுதுیَغْشٰیۙஅது மூடிக்கொள்ளும்
வல்லய்லி இதா யக்'ஷா
(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
وَالنَّهَارِ اِذَا تَجَلّٰی ۟ۙ
وَ النَّهَارِபகலின் மீது சத்தியமாகاِذَاபொழுதுتَجَلّٰیۙஅது வெளிப்படும்
வன்னஹாரி இதா தஜல்லா
பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْاُ ۟ۙ
وَ مَاமேலும் எவன்خَلَقَபடைத்தானோالذَّكَرَஆணைوَ الْاُنْثٰۤیۙபெண்ணையும்
வமா கலகத் தகர வல் உன்தா
ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
اِنَّ سَعْیَكُمْ لَشَتّٰی ۟ؕ
اِنَّநிச்சயமாகسَعْیَكُمْஉங்கள் முயற்சிلَشَتّٰیؕபலதரப்பட்டதாகும்
இன்ன ஸஃயகும் லஷத்தா
நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.
فَاَمَّا مَنْ اَعْطٰی وَاتَّقٰی ۟ۙ
فَاَمَّاஎனவேمَنْஎவர்اَعْطٰیவழங்கினாரோوَ اتَّقٰیۙமேலும் இறையச்சம் கொண்டாரோ
Fப அம்மா மன் அஃதா வத்தகா
எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,
وَصَدَّقَ بِالْحُسْنٰی ۟ۙ
وَ صَدَّقَமேலும் மெய்ப்படுத்தினாரோبِالْحُسْنٰیۙஅழகிய நற்கூலியை
வ ஸத்தக Bபில் ஹுஸ்னா
நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,
فَسَنُیَسِّرُهٗ لِلْیُسْرٰی ۟ؕ
فَسَنُیَسِّرُهٗநாம் அவருக்கு எளிதாக்குவோம்لِلْیُسْرٰیؕஎளிதான வழியின் பக்கம்
Fபஸனு யஸ்ஸிருஹூ லில்யுஸ்ரா
அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.
وَاَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنٰی ۟ۙ
وَ اَمَّاஆனால்مَنْۢஎவர்بَخِلَகஞ்சத்தனம் செய்துوَ اسْتَغْنٰیۙதன்னைத் தேவையற்றவராகக் கருதினாரோ
வ அம்மா மன் Bபகில வஸ்தக்னா
ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,
وَكَذَّبَ بِالْحُسْنٰی ۟ۙ
وَ كَذَّبَமேலும் பொய்ப்பித்தான்بِالْحُسْنٰیۙஅழகியதை
வ கத்தBப Bபில் ஹுஸ்னா
இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,
فَسَنُیَسِّرُهٗ لِلْعُسْرٰی ۟ؕ
فَسَنُیَسِّرُهٗஆகவே அவருக்கு நாம் எளிதாக்குவோம்لِلْعُسْرٰیؕகஷ்டத்திற்கு
Fபஸனு யஸ்ஸிருஹூ லில்'உஸ்ரா
அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.
وَمَا یُغْنِیْ عَنْهُ مَالُهٗۤ اِذَا تَرَدّٰی ۟ؕ
وَ مَاமேலும் இல்லைیُغْنِیْபயனளிக்கும்عَنْهُஅவனுக்குمَالُهٗۤஅவனது செல்வம்اِذَاபோதுتَرَدّٰیؕஅவன் வீழும்
வமா யுக்னீ 'அன்ஹு மாலுஹூ இதா தரத்தா
ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.
اِنَّ عَلَیْنَا لَلْهُدٰی ۟ؗۖ
اِنَّநிச்சயமாகعَلَیْنَاநம் மீதேلَلْهُدٰیؗۖநேர்வழி காட்டுவது
இன்ன 'அலய்னா லல் ஹுதா
நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.
وَاِنَّ لَنَا لَلْاٰخِرَةَ وَالْاُوْلٰی ۟
وَ اِنَّமேலும் நிச்சயமாகلَنَاநமக்கேلَلْاٰخِرَةَமறுமையும்وَ الْاُوْلٰیஇம்மையும்
வ இன்ன லனா லல் ஆகிரத வல் ஊலா
அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.
فَاَنْذَرْتُكُمْ نَارًا تَلَظّٰی ۟ۚ
فَاَنْذَرْتُكُمْஆகவே நான் உங்களை எச்சரித்தேன்نَارًاநெருப்பைக் குறித்துتَلَظّٰیۚகொழுந்துவிட்டு எரியும்
Fப அன்தர்துகும் னாரன் தலள்ளா
ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.
لَا یَصْلٰىهَاۤ اِلَّا الْاَشْقَی ۟ۙ
لَاமாட்டான்یَصْلٰىهَاۤஅதில் எரியاِلَّاதவிரالْاَشْقَیۙமிகவும் துர்ப்பாக்கியசாலி
லா யஸ்லாஹா இல்லல் அஷ்கா
மிக்க துர்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.
الَّذِیْ كَذَّبَ وَتَوَلّٰی ۟ؕ
الَّذِیْஎவன்كَذَّبَபொய்ப்பித்தான்وَ تَوَلّٰیؕமேலும் புறக்கணித்தான்
அல்லதீ கத்தBப வ தவல்லா
எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.
وَسَیُجَنَّبُهَا الْاَتْقَی ۟ۙ
وَ سَیُجَنَّبُهَاமேலும் அதிலிருந்து தூரமாக்கப்படுவார்الْاَتْقَیۙமிகவும் இறையச்சமுடையவர்
வ ஸ யுஜன்ன்னBபுஹல் அத்கா
ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.
الَّذِیْ یُؤْتِیْ مَالَهٗ یَتَزَكّٰی ۟ۚ
الَّذِیْஎவர்یُؤْتِیْவழங்குகிறாரோمَالَهٗதன் செல்வத்தைیَتَزَكّٰیۚதூய்மையடைவதற்காக
அல்லதீ யு'தீ மாலஹூ யதZஜக்கா
(அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.
وَمَا لِاَحَدٍ عِنْدَهٗ مِنْ نِّعْمَةٍ تُجْزٰۤی ۟ۙ
وَ مَاமேலும் இல்லைلِاَحَدٍஎவருக்கும்عِنْدَهٗஅவனிடம்مِنْஎந்த ஒருنِّعْمَةٍஉபகாரமும்تُجْزٰۤیۙகைம்மாறு செய்யப்பட வேண்டிய
வமா லி அஹதின் 'இன்தஹூ மின் னிஃமதின் துஜ்Zஜா
மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.
اِلَّا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِ الْاَعْلٰی ۟ۚ
اِلَّاதவிரابْتِغَآءَநாடிوَجْهِதிருமுகத்தைرَبِّهِதன் இறைவனின்الْاَعْلٰیۚமிக உயர்ந்த
இல்லBப் திகா'அ வஜ்ஹி ரBப்Bபிஹில் அஃலா
மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்).
وَلَسَوْفَ یَرْضٰی ۟۠
وَ لَسَوْفَநிச்சயமாக விரைவில்یَرْضٰی۠திருப்தியடைவார்
வ லஸவ்Fப யர்ளா
வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.