96. ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி)  

மக்கீ, வசனங்கள்: 19

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِیْ خَلَقَ ۟ۚ
اِقْرَاْஓதுவீராகبِاسْمِபெயரால்رَبِّكَஉமது இறைவனின்الَّذِیْஎவன்خَلَقَۚபடைத்தானோ
இக்ர Bபிஸ்மி ரBப் Bபிகல் லதீ கலக்
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ ۟ۚ
خَلَقَபடைத்தான்الْاِنْسَانَமனிதனைمِنْஇருந்துعَلَقٍۚஇரத்தக் கட்டி
கலகல் இன்ஸான மின் 'அலக்
“அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُ ۟ۙ
اِقْرَاْஓதுவீராகوَ رَبُّكَமேலும் உமது இறைவன்الْاَكْرَمُۙமாபெரும் கொடையாளன்
இக்ர வ ரBப் Bபுகல் அக்ரம்
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
الَّذِیْ عَلَّمَ بِالْقَلَمِ ۟ۙ
الَّذِیْஅவன்عَلَّمَகற்பித்தான்بِالْقَلَمِۙஎழுதுகோலைக் கொண்டு
அல் லதீ 'அல்லம Bபில் கலம்
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ یَعْلَمْ ۟ؕ
عَلَّمَகற்றுக்கொடுத்தான்الْاِنْسَانَமனிதனுக்குمَاஎவற்றைلَمْஅவன்یَعْلَمْؕஅறியவில்லையோ
'அல் லமல் இன்ஸான ம லம் யஃலம்
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
كَلَّاۤ اِنَّ الْاِنْسَانَ لَیَطْغٰۤی ۟ۙ
كَلَّاۤஅப்படியல்லاِنَّநிச்சயமாகالْاِنْسَانَமனிதன்لَیَطْغٰۤیۙநிச்சயமாக வரம்பு மீறுகிறான்
கல்லா இன்னல் இன்ஸான லயத்கா
எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
اَنْ رَّاٰهُ اسْتَغْنٰی ۟ؕ
اَنْஎன்றுرَّاٰهُஅவன் தன்னைக் கண்டான்اسْتَغْنٰیؕதேவையற்றவன்
அர்-ர ஆஹுஸ் தக்னா
அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
اِنَّ اِلٰی رَبِّكَ الرُّجْعٰی ۟ؕ
اِنَّநிச்சயமாகاِلٰیபால்رَبِّكَஉமது இறைவன்الرُّجْعٰیؕமீளுதல்
இன்ன்ன இலா ரBப்Bபிகர் ருஜ்'ஆ
நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
اَرَءَیْتَ الَّذِیْ یَنْهٰی ۟ۙ
اَرَءَیْتَபார்த்தீராالَّذِیْஎவன்یَنْهٰیۙதடுக்கிறானோ
அர-அய்தல் லதீ யன்ஹா
தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
اَرَءَیْتَ اِنْ كَانَ عَلَی الْهُدٰۤی ۟ۙ
اَرَءَیْتَநீர் பார்த்தீராاِنْஎனில்كَانَஅவர் இருந்தார்عَلَیமீதுالْهُدٰۤیۙநேர்வழியின்
அர-அய்த இன் கான 'அலல் ஹுதா
நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
اَوْ اَمَرَ بِالتَّقْوٰی ۟ؕ
اَوْஅல்லதுاَمَرَஏவுகிறாராبِالتَّقْوٰیؕஇறையச்சத்தை
அவ் அமர Bபித் தக்வா
அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
اَرَءَیْتَ اِنْ كَذَّبَ وَتَوَلّٰی ۟ؕ
اَرَءَیْتَநீர் பார்த்தீரா?اِنْஎன்றால்كَذَّبَஅவன் பொய்ப்பித்தான்وَ تَوَلّٰیؕமேலும் புறக்கணித்தான்
அர-அய்த இன் கத் தBப வ த வல்லா
அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நீர் பார்த்தீரா?
اَلَمْ یَعْلَمْ بِاَنَّ اللّٰهَ یَرٰی ۟ؕ
اَلَمْஅவன் அறியவில்லையாیَعْلَمْஅவன் அறிகிறான்بِاَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَرٰیؕபார்க்கிறான்
அலம் யஃலம் Bபி-அன் னல் லஹா யரா
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
كَلَّا لَىِٕنْ لَّمْ یَنْتَهِ ۙ۬ لَنَسْفَعًا بِالنَّاصِیَةِ ۟ۙ
كَلَّاஅப்படியல்லلَىِٕنْநிச்சயமாக அவன்لَّمْஇல்லைیَنْتَهِ ۙ۬விலகிக் கொள்ளلَنَسْفَعًۢاநிச்சயமாக நாம் பிடித்திழுப்போம்بِالنَّاصِیَةِۙமுன்நெற்றி முடியை
கல்ல ல இல்லம் யன்தஹி ல னஸ்Fப'அம் Bபின் னஸியஹ்
அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
نَاصِیَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ ۟ۚ
نَاصِیَةٍமுன்நெற்றிكَاذِبَةٍபொய்யானخَاطِئَةٍۚபாவியான
னாஸியதின் கதி Bபதின் காதிஅஹ்
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
فَلْیَدْعُ نَادِیَهٗ ۟ۙ
فَلْیَدْعُஅவன் அழைக்கட்டும்نَادِیَهٗۙதன் சபையோரை
Fபல் யத்'உ னாதியஹ்
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
سَنَدْعُ الزَّبَانِیَةَ ۟ۙ
سَنَدْعُநாமும் அழைப்போம்الزَّبَانِیَةَۙநரகக் காவலர்களை
ஸனத் 'உZஜ் ZஜBபானியஹ்
நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
كَلَّا ؕ لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۟
كَلَّا ؕஅவ்வாறல்லلَاவேண்டாம்تُطِعْهُஅவனுக்குக் கீழ்ப்படியாதீர்وَ اسْجُدْமேலும் ஸஜ்தா செய்வீராகوَ اقْتَرِبْ۠۩மேலும் நெருங்குவீராக
கல்லா; ல துதிஃஹு வஸ்ஜுத் வக்தரிBப்
(அவன் கூறுவது போலல்ல;) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.