قُلْ تَعَالَوْا اَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ اَلَّا تُشْرِكُوْا بِهٖ شَيْـٴًـــــا وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا ۚ وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ مِّنْ اِمْلَاقٍؕ نَحْنُ نَرْزُقُكُمْ وَاِيَّاهُمْ ۚ وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ ۚ وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ ؕ ذٰ لِكُمْ وَصّٰٮكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ
“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான். 6:151
<
இறைவனின் மிகப் பெரும் கிருபையால் நாம் இந்த இணைய தளத்தை எங்களால் முடிந்த அளவு எளிதாக ஆக்கி வைத்துள்ளோம். அடுத்த முறை நீங்கள் இந்த இணைய தளத்துக்கு வரும்பொழுது, நீங்கள் கடைசியாக படித்த ஸூரா மற்றும் வசனத்தை நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள தேவையில்லை. உங்களுக்காக நாங்கள் ஞாபகம் வைத்து கொள்கிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்
1. உங்கள் பெயரை எங்களிடம் பதிவு செய்து கொள்ளுங்கள்.
2. ஒவ்வொரு முறை நீங்கள் குர்ஆனை படித்தவுடன் நீங்கள் படித்த ஸூரா மற்றும் வசன எண்களை பதிவு செய்யுங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் இணையத்தில் அதிக நேரத்தை செலவிடுபவர்களாக இருக்கிறீர்கள். ஆகையால், ஒவ்வொரு முறை இணையத்தை பயன் படுத்தும் போது, குறைந்தது ஒரு வசனத்தையாவது படித்து விட்டு அடுத்த இணைய தளத்துக்கு செல்வதை பழக்க படுத்திக் கொள்ளுங்கள். எங்கள் இணைய தளத்தை உங்களின் முதல் பக்கமாக ஆக்கி கொள்ளுங்கள்.