وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَ بَنِىْٓ اِسْرَآءِيْلَ لَا تَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰکِيْنِ وَقُوْلُوْا لِلنَّاسِ حُسْنًا وَّاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّکٰوةَ ؕ ثُمَّ تَوَلَّيْتُمْ اِلَّا قَلِيْلًا مِّنْکُمْ وَاَنْـتُمْ مُّعْرِضُوْنَ
இன்னும் (நினைவுகூருங்கள்:) நாம் இஸ்ராயீல் மக்களிடத்தில், "அல்லாஹ்வைத் தவிர (வேறு எவரையும் - எதனையும்) நீங்கள் வணங்கக் கூடாது; (உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடமும் அழகானதைப் பேசுங்கள்; மேலும், தொழுகையைக் கடைப்பிடியுங்கள்; ஜகாத்தையும் கொடுங்கள்" என்று உறுதிமொழியை வாங்கினோம்; ஆனால், உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதிமொழியை நிறைவேற்றாமல் அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள்; இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கிறீர்கள். 2:83
<
இறைவனின் மிகப் பெரும் கிருபையால் நாம் இந்த இணைய தளத்தை எங்களால் முடிந்த அளவு எளிதாக ஆக்கி வைத்துள்ளோம். அடுத்த முறை நீங்கள் இந்த இணைய தளத்துக்கு வரும்பொழுது, நீங்கள் கடைசியாக படித்த ஸூரா மற்றும் வசனத்தை நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள தேவையில்லை. உங்களுக்காக நாங்கள் ஞாபகம் வைத்து கொள்கிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்
1. உங்கள் பெயரை எங்களிடம் பதிவு செய்து கொள்ளுங்கள்.
2. ஒவ்வொரு முறை நீங்கள் குர்ஆனை படித்தவுடன் நீங்கள் படித்த ஸூரா மற்றும் வசன எண்களை பதிவு செய்யுங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் இணையத்தில் அதிக நேரத்தை செலவிடுபவர்களாக இருக்கிறீர்கள். ஆகையால், ஒவ்வொரு முறை இணையத்தை பயன் படுத்தும் போது, குறைந்தது ஒரு வசனத்தையாவது படித்து விட்டு அடுத்த இணைய தளத்துக்கு செல்வதை பழக்க படுத்திக் கொள்ளுங்கள். எங்கள் இணைய தளத்தை உங்களின் முதல் பக்கமாக ஆக்கி கொள்ளுங்கள்.